Mahanadhi : மகாநதி சீரியலை இழுத்து மூட உள்ளதா விஜய் டிவி? உண்மை நிலவரம் என்ன?
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் மகாநதி சீரியலும் ஒன்று. அந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதா என்பது பற்றி பிரபலம் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

Vijay TV Mahanadhi Serial
சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என்று ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் அதற்கு போட்டியாக வந்த விஜய் டிவி தற்போது சின்னத்திரையில் சன் டிவிக்கு நிகராக புதுப்புது சீரியல்களை இறக்கி செம டஃப் கொடுத்து வருகிறது. டிஆர்பி ரேஸிலும் சன் டிவிக்கு ஆட்டம் காட்டும் ஒரே சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அந்த அளவுக்கு ஆடியன்ஸை கவரும் வண்ணம் விறுவிறுப்பான திரைக்கதை உடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. இந்த விஜய் டிவியில் டாப் 10 டிஆர்பி-யில் இடம்பெறும் சீரியல்கள் என்றால் அது சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி ஆகிய சீரியல்கள் தான்.
மகாநதி சீரியல் அப்டேட்
இதில் கடந்த சில வாரங்களாக டாப் 10க்குள் நுழைந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் என்றால் அது மகாநதி சீரியல் தான். இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் சரவணன் மீனாட்சி 2, ராஜா ராணி, ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். தற்போது மகாநதி சீரியல் மூலம் மக்களை கவர்ந்துள்ளார் பிரவீன் பென்னட். மகாநதி சீரியல், தந்தையை இழந்த நான்கு பெண் பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தின் வாழ்க்கை போராட்டம் தான் இதன் கதைக்களம். இதில் சரவணன் தான் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முடிவுக்கு வருகிறதா மகாநதி சீரியல்?
அதேபோல் இந்த சீரியலில் மிகவும் ஹைலைட்டான விஷயம் என்றால் அது ஹீரோயின்கள் தான். இதில் நாயகியாக லட்சுமி பிரியா நடித்து வருகிறார். அதேபோல் செகண்ட் ஹீரோயினாக யமுனா என்கிற கதாபாத்திரத்தில் ஆதிரை நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் யமுனா கதாபாத்திரத்தில் இருந்து ஆதிரை விலகினார். அவர் இந்த சீரியலை விட்டு விலகியதால், கடந்த வாரம் மகாநதி சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் சற்று சரிவை சந்தித்தது. ஒரு கட்டத்தில் மகாநதி சீரியலை விஜய் டிவி முடிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட தொடங்கி இருந்தது.
மகாநதி சீரியல் பற்றி கம்ருதீன் விளக்கம்
மகாநதி சீரியல் பற்றி காட்டுத்தீ போல் பரவி வந்த வதந்திக்கு அந்த சீரியலில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கமுருதீன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். முன்பெல்லாம் வெளியே சென்றால் தன்னிடம் எப்படி இருக்கீங்க... ஷூட்டிங் எப்படி போகுது? என்று தான் கேட்பார்கள். ஆனால் தற்போது மகாநதி சீரியல் எப்போ முடியப்போகுது என்றுதான் எல்லாரும் கேட்கிறார்கள் எனக்கூறியுள்ள கமுருதீன், சீரியல் முடியாது 1000 எபிசோடுகள் வரை செல்லும் என விளக்கம் அளித்துள்ளார். இதனால் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மகாநதி சீரியலில் கங்காவுக்கு ஜோடியாக குமரன் கேரக்டரில் கம்ருதீன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.