MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை; குணசேகரன் முன்பே உடைக்கப்பட்ட சீக்ரெட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை; குணசேகரன் முன்பே உடைக்கப்பட்ட சீக்ரெட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதால் அவருக்கு வீட்டில் நடந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஒவ்வொன்றாக அவருக்கு தெரியவருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 07 2026, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு வந்ததில் இருந்து பல்வேறு எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. ஈஸ்வரி நலமுடன் வந்தாலும் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்தவை எல்லாம் மறந்துபோய் இருக்கிறது. இதனால் அவருக்கு பழசை எல்லாம் ஞாபகப் படுத்த யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும், அதையும் மீறி ஞாபகப்படுத்தினால் அவரது மைண்ட் டிஸ்டர்ப் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் டாக்டர் எச்சரித்திருந்தார். இதனால் அவரிடம் எந்த பிரச்சனையை பற்றியும் பேசாமல் இருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
தனி அறையில் தர்ஷன் - பார்கவி
Image Credit : youtube/suntv

தனி அறையில் தர்ஷன் - பார்கவி

மாடியில் தர்ஷனும் பார்கவியும் தனியாக அறையில் உட்கார்த்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே வரும் தர்ஷினி, அம்மாவுக்கு உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே ஞாபகம் இல்லை. நீங்க ரெண்டு பேரும் தனியா இப்படி பேசிக்கிட்டு இருந்தா என்ன நினைப்பாங்க என்று கேட்கிறார். ஆனால் தர்ஷினியின் பேச்சையெல்லாம் காது கொடுத்து கேட்காத தர்ஷன், நான் பார்கவி கூட தனியா பேசணும் என சொல்லி, தர்ஷினியை ரூமை விட்டு வெளியே தள்ளிவிடுகிறார். இதையெல்லாம் வெளியே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, ஏன் அவன் இப்படி பண்றான் என கேட்கிறார்.

Related Articles

Related image1
கேம் சேஞ்சராக மாறிய ராவணன்; அவர் சப்போர்ட் ஜனனிக்கா? குணசேகரனுக்கா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
35
சண்டைபோடும் தர்ஷன்
Image Credit : youtube/suntv

சண்டைபோடும் தர்ஷன்

பின்னர் பார்கவியிடம் பேசும் தர்ஷன், நமக்குள்ள ஒரு குடும்ப வாழ்க்கை இருக்கா, இல்லையா என கேட்கிறார். பதிலே சொல்லாமல் பார்கவி மெளனம் காக்கிறார். இதனால் கடுப்பாகும் தர்ஷன், அவருடன் கத்தி சண்டை போடுகிறார். இப்படியே தனித்தனியா வாழ்ந்திருவோமா என கேட்டு சத்தம் போடுகிறார். இதனால் கடுப்பாகும் பார்கவி, நான் இப்போ அதைப்பத்தி எதுவுமே பேச விரும்பல, என்னை ஆளவிடு என சொல்லி ரூமை விட்டு வெளியே செல்லப் பார்க்கிறார். அப்போது, அவரின் கையைப் பிடித்து இழுக்கும் தர்ஷன், எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போடி என கத்தி சண்டைபோடுகிறார்.

45
ஈஸ்வரிக்கு வந்த சந்தேகம்
Image Credit : youtube/suntv

ஈஸ்வரிக்கு வந்த சந்தேகம்

அப்போது ரூமுக்கு வெளியே இருந்த ஈஸ்வரி, அவன் என்ன பண்ணிட்டு இருக்கான் என தர்ஷினியிடம் கேட்கிறார். கீழே வரை சத்தம் கேட்டதை அடுத்து போய் என்ன பிரச்சனைனு பாரு என நந்தினியை அனுப்பி வைக்கிறார் கதிர். பின்னர் பிரச்சனை பெரிதானதால், தர்ஷனின் ரூம் கதவை திறந்து பார்க்கிறார் ஈஸ்வரி, உள்ளே பார்கவி அழுதுகொண்டு இருந்ததை பார்க்கிறார். இதையடுத்து அனைவரையும் கீழே அழைத்து வந்து, தர்ஷனிடம், எதுக்குடா அந்த பொண்ணு உன் ரூம்குள்ள உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா என கேட்கிறார். தர்ஷன் வாய்திறக்காமல் இருக்க, பின்னர் ரேணுகாவிடம் சென்று நீயாவது சொல்லு, என்ன ஆச்சு என கேட்கிறார்.

55
உடைந்த உண்மை
Image Credit : youtube/suntv

உடைந்த உண்மை

அந்த பொண்ணு யாரு, தயவு செஞ்சு யாராச்சும் சொல்லுங்க என ஈஸ்வரி கேட்க, தர்ஷினி வேறுவழியின்றி உண்மையை போட்டு உடைக்கிறார். பார்கவி தர்ஷனுடைய மனைவி என்றும், அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகிறார். தன் மகன் இன்னும் காலேஜ் படிச்சிட்டு இருக்கான் என்கிற நினைப்பிலேயே இருக்கும் ஈஸ்வரி, அவனுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார். அவருக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image3
குழந்தை பொசிஷன் கிரிட்டிக்கல்; மருத்துவர் சொன்ன அதிர்ச்சித் தகவல்.. நிலைகுலைந்து போன அன்பு!
Related Stories
Recommended image1
கேம் சேஞ்சராக மாறிய ராவணன்; அவர் சப்போர்ட் ஜனனிக்கா? குணசேகரனுக்கா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved