MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கேம் சேஞ்சராக மாறிய ராவணன்; அவர் சப்போர்ட் ஜனனிக்கா? குணசேகரனுக்கா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

கேம் சேஞ்சராக மாறிய ராவணன்; அவர் சப்போர்ட் ஜனனிக்கா? குணசேகரனுக்கா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை சிக்க வைப்பதற்கான வீடியோ ராவணனிடம் இருப்பதால் அவர் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 04 2026, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ள ஈஸ்வரி பழசை எல்லாம் மறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆதி குணசேகரன், அவரை தனியாக அழைத்துச் சென்று சேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஜனனியை அழைத்து உனக்கும் சேலை வாங்கி வந்திருப்பதாக சொல்ல, எனக்கு அந்த சேலை வேண்டாம் என காட்டமாக சொல்லும் ஜனனி, என்னால் உங்களைப் போல் பழசை எல்லாம் மறக்க முடியவில்லை என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
சாரு பாலா கொடுத்த ஹிண்ட்
Image Credit : youtube/suntv

சாரு பாலா கொடுத்த ஹிண்ட்

ஆதி குணசேகரனின் இந்த தந்திரத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனனிக்கு ஒரு ஆயுதமாக இருப்பது நீதிமன்ற விசாரணை தான். இதுகுறித்து வக்கீல் சாருபாலாவிற்கு போன் போட்டு பேசும் ஜனனி, என்ன செய்தால், ஆதி குணசேகரனை உள்ளே தள்ளலாம் என கேட்க, அதற்கு அவர், ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ இருந்ததென்றால் அதை நாம் எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். அதுமட்டும் நமக்கு கிடைத்ததென்றால், இந்த வழக்கை நாம் ரொம்ப ஸ்ட்ராங்க் ஆக நகர்த்திச் செல்லலாம் என கூறுகிறார். இதனால் வீடியோவை கண்டுபிடிக்கும் வேலையில் மீண்டும் இறங்க உள்ளார் ஜனனி.

Related Articles

Related image1
ஈஸ்வரி உடன் சண்டைபோடும் ஜனனி... வெடவெடத்துப் போன குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
35
ராவணன் கையில் வீடியோ
Image Credit : youtube/suntv

ராவணன் கையில் வீடியோ

ஈஸ்வரி தன்னை ஆதி குணசேகரன் தாக்கியதை மறந்ததால், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அந்த வீடியோ மாறி உள்ளது. அந்த வீடியோ தற்போது ராவணனிடம் தான் இருக்கிறது என்பது ஜனனிக்கு தெரியாது. அதே வேளையில் அவர் ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்துக்காக காத்திருக்கிறார் என்பது ராவணனுக்கு போன் மூலம் தெரியவந்துள்ளது. அவர் மதிவதினி வீட்டுக்கு சென்றபோது ஜனனி, ஆதி குணசேகரனின் அராஜகங்கள் பற்றி பேசியதை எல்லாம் ஒட்டுக் கேட்டுள்ளார் ராவணன். இதனால் அந்த வீடியோவை வைத்து கேம் ஆட பிளான் போட்டுள்ளார் ராவணன்.

45
ராவணன் ஜனனிக்கு வீடியோவை கொடுப்பாரா?
Image Credit : youtube/suntv

ராவணன் ஜனனிக்கு வீடியோவை கொடுப்பாரா?

தன்னுடைய ஆபிஸில் அமர்ந்து ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கும் வீடியோவை பார்க்கும் ராவணன், அதனை ஜனனியிடம் கொடுத்துரலாமா இல்லை, குணசேகரனிடம் கொடுத்து தப்பிக்க வைக்கலாமா என தன்னுடைய பிஏ-விடம் கேட்கிறார். இதன்மூலம் இந்த வழக்கில் கேம் சேஞ்சராக மாறி இருக்கிறார் ராவணன். அவர் அநேகமாக ஜனனியிடம் அந்த வீடியோவை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ராவணனின் கண்முன்னே அவருடைய அம்மாவை கொலை செய்த ஆதி குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்கிற வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் ராவணன். அதனால் ஜனனியிடம் கொடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.

55
ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா?
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா?

மறுபுறம் ராவணன் தன்னுடைய கிரிமினல் புத்தியை காட்டினால் அவர் அந்த வீடியோவை ஆதி குணசேகரனிடம் கொடுத்து அவரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைத்து, அவரை தன் கையாலேயே கொலை செய்ய பிளான் போடவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் வில்லாதி வில்லன் ராவணன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்த வீடியோவை கைப்பற்ற ஜனனி எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? அவருக்கு முன் வீடியோவை கண்டுபிடித்து இந்த கேஸில் இருந்து எஸ்கேப் ஆவாரா ஆதி குணசேகரன்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈஸ்வரி உடன் சண்டைபோடும் ஜனனி... வெடவெடத்துப் போன குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்
Recommended image3
சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!
Related Stories
Recommended image1
ஈஸ்வரி உடன் சண்டைபோடும் ஜனனி... வெடவெடத்துப் போன குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved