MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

சவால்விடும் நந்தினி... ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரி கோமாவில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஆதி குணசேகரன். அதைப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 28 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி எழுந்து வந்ததும் அவரிடம் வாக்குமூலம் வாங்கி ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என்கிற கனவோடு ஜனனி இருந்தார். ஆனால் அவரின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆகிவிட்டது. அவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடந்த விஷயங்கள் எல்லாம் சுத்தமாக மறந்துவிட்டதாம். இதனால் ஆதி குணசேகரன் தன்னை அடித்தது அவருக்கு சுத்தமாக நியாபகத்தில் இல்லை. இதை அறிந்த ஜனனி இடிந்துபோய் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
வீட்டுக்கு வரும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

வீட்டுக்கு வரும் ஈஸ்வரி

ஈஸ்வரி ஆஸ்பத்திரியில் இருந்து விசாலாட்சியிடம் போன் பேசுகிறார். அப்போது அருகில் இருந்த ஆதி குணசேகரனிடம் போனை கொடுக்க சொல்லும் அவர், முக்கியமான விஷயம் ஏதோ சொல்வார் என்று பார்த்தால், தர்ஷனுக்கு காலேஜ் பீஸ் கட்டிவிடுமாறு கூறுகிறார். பின்னர் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது விசாலாட்சி ஆரத்தி எடுத்து ஈஸ்வரியை உள்ளே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் மீனாட்சி முன் நிற்க வைத்து அவருக்கு விபூதி பூசி விடுகிறார் விசாலாட்சி. அப்போது அங்கிருந்த குணசேகரனிடம் பேச அருகில் செல்கிறார் ஈஸ்வரி.

Related Articles

Related image1
ஈஸ்வரிக்கு மெமரி லாஸ்? டாக்டர் வைத்த ட்விஸ்ட் - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
ஈஸ்வரியால் எஸ்கேப் ஆகும் ஆதி குணசேகரன்... மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
34
ஆதி குணசேகரனிடம் பேசும் ஈஸ்வரி
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனிடம் பேசும் ஈஸ்வரி

அப்போது அங்கிருந்த ரேணுகா, அக்கா எப்போ அவங்களுக்கு சரிசமமா உட்கார்ந்து பேசிருக்காங்க என சொல்லி, அவரை மாடிக்கு அழைத்து செல்ல பார்க்கிறார். ஆனால் குணசேகரன் யாரும் எதிர்பாரா விதமாக ஈஸ்வரியை அங்கிருந்த சேரில் அமரச் சொல்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடையும் ஈஸ்வரி, சேரில் ஆதி குணசேகரன் அருகில் அமர்ந்து பேசுகிறார். அப்போது உடல்நலம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்கிறார் குணசேகரன். பின்னர் ஈஸ்வரியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.

44
நந்தினி விட்ட சவால்
Image Credit : youtube/suntv

நந்தினி விட்ட சவால்

ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதால் வீட்டில் உள்ள பெண்கள் சோகத்தில் இருந்தாலும், ஆதி குணசேகரனுக்கு இது ஒரு குட் நியூஸ் என்பதால் அவர் செம குஷியில் இருக்கிறார். அவரைப்பார்த்து சவால்விடும் நந்தினி, இப்போ இருக்குற சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக தெரியலாம், ஆனால் அது இப்படியே இருக்காது, ஒருநாள், எல்லாம் மாறிவிடும் என எச்சரித்துவிட்டு கிச்சனுக்குள் செல்கிறார். அங்கு பார்கவி சோகமாக இருக்கிறார். அம்மாவுக்கு என்னைய நியாபகம் இருக்காதுல்ல, என்னை மறந்திருப்பாங்கல்ல என சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அவரை நந்தினி சமாதானப்படுத்துகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மெகா ட்விஸ்ட்! தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ரகசியத்தை உடைத்த மீனா - கதிகலங்கிய குடும்பம்!
Recommended image2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: தங்கமயிலால் வந்த சண்டை.. செந்திலை வீட்டை விட்டு துரத்திய மீனா! இன்றைய எபிசோட் அப்டேட்!
Recommended image3
முத்துவேல் மீது சக்திவேலுக்கு வந்த டவுட்... ராஜியிடம் பொய் சொன்ன கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
ஈஸ்வரிக்கு மெமரி லாஸ்? டாக்டர் வைத்த ட்விஸ்ட் - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஈஸ்வரியால் எஸ்கேப் ஆகும் ஆதி குணசேகரன்... மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved