- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை தேடி ஜனனி மட்டுமின்றி அறிவுக்கரசியும் களத்தில் குதித்துள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆதி குணசேகரன், அவர் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டுகிறார். இதையெல்லாம் பார்த்து ஜனனி கடும் கோபம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை அறியாமலேயே ஈஸ்வரி மீது கோபப்படும் ஜனனி, உங்களைப் போல் பழசை எல்லாம் மறந்துட்டு என்னால சகஜமா இருக்க முடியாது என சொன்னதும், ஈஸ்வரி என்ன பிரச்சனை என ஜனனியிடம் கேட்க, அவர் ஆதி குணசேகரன் தன்னை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்ததாக கூறி மழுப்பிவிட்டு செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எமோஷனல் டிராமா போட்ட கதிர்
ஜனனி கேஸ் விஷயமாக சாருபாலாவின் உறவினரை பார்க்க சென்றிருக்க, மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னுடைய மனைவி ஈஸ்வரி உடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட, இந்த நேரத்தை பயன்படுத்தி, ரேணுகா, நந்தினி மற்றும் விசாலாட்சியை தனியாக தங்களின் அறைக்கு அழைத்து செல்லும் கதிர் மற்றும் ஞானம், அவர்களிடம் காலில் விழாத குறையாக எமோஷனல் டிராமா பண்ணுகிறார்கள். தங்கள் அண்ணன் செஞ்சதை எல்லாம் மறந்துவிட்டு, அவருக்கு சாதகமாக கோர்ட்டில் பேசுமாறு கெஞ்சிக் கேட்கிறார்கள். ஞானம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார். அந்த நேரத்தில் பார்கவி, தர்ஷன், தர்ஷினியும் அங்கு வருகிறார்.
சூழ்ச்சி செய்யும் அறிவு
அதுமட்டுமின்றி ஜனனி பேச்சை யாரும் கேட்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள். தர்ஷனிடம், நீயும், பார்கவியும் வெளிநாடு போய் சந்தோஷமாக இருக்க நாங்க உதவி பண்றோம் என கூறிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் அறிவுக்கரசி, இந்த பரதேசி கூட இவனை வாழ வைக்க தான் நான் இங்க இருக்கேனா, என் தங்கச்சி வாழ்க்கையை மட்டும் கெடுக்கணும்னு பார்த்தீங்க அவ்வளவுதான் என சொல்லிவிட்டு கீழே செல்கிறார். கீழே போனதும், முல்லையிடம் பேசும் அறிவு, ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்குன வீடியோ இந்த வீட்டுல தான் எங்கயோ இருக்கு, அதை தேடி கண்டுபிடிக்கனும் என முடிவெடுக்கிறார்.
வீடியோவுக்கு வந்த டிமாண்ட்
மறுபுறம் சாரு பாலாவும், ஜனனியிடம் போனில் பேசும் போது அந்த வீடியோ ஆதாரத்தை எப்படியாவது மீட்குமாறு சொல்லி இருக்கிறார். இதனால் அந்த வீடியோவைத் தேடும் பணியும் ஜனனியும் இறங்க இருக்கிறார். ஆதி குணசேகரனை சிக்க வைப்பதற்காக தான் இருவருமே பிளான் போடுகிறார்கள். அதனால் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த வீடியோவை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வீடியோவின் மற்றொரு பிரிண்ட் ஆதிமுத்து ராவணனிடம் உள்ளது. அவர் அதனை அநேகமாக ஆதி குணசேகரனிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனனி, மதிவதினியின் தோழியாக இருப்பதால் அவரிடம் வீடியோவை கொடுக்க ராவணன் விருப்பம் காட்டவில்லை.
ஜனனி எடுத்த முடிவு
ஆதி குணசேகரனை இந்த கேஸில் இருந்து வெளியே கொண்டு வர அனைவரும் தங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என கதிர், ஞானம் போட்ட டிராமாவை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் ஜனனி, முதலில் நீங்க செஞ்ச தப்புக்கெல்லாம் ஜெயிலுக்கு போய் தண்டனை அனுபவிச்சிட்டு வாங்க, அதுக்கப்புறம் நாம எல்லாரும் குடும்பமே சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என சொல்லிவிட்டு மாடிக்கு செல்கிறார். அப்போது ஓவர் டென்ஷனாக இருந்ததால், அவர் படியிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

