- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தட்டிக்கேட்ட ஈஸ்வரியின் கதையை முடிக்கும் ஆதி குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
தட்டிக்கேட்ட ஈஸ்வரியின் கதையை முடிக்கும் ஆதி குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து ஆதி குணசேகரன் அவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ethirneechal Thodargiradhu Today Episode
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் ஆதி குணசேகரன் தன்னுடைய மகன் தர்ஷனை, அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் இறங்குகிறார். ஆனால் அவரின் இந்த முடிவுக்கு ஈஸ்வரி எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி அவர் தன்னுடைய மகன் தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க முயல்கிறார். இந்த விவகாரத்தில் ஆதி குணசேகரனின் கை ஓங்குகிறது. அவர் தர்ஷன் - அன்புக்கரசியின் திருமண வேலைகளை செய்யத் தொடங்க, அதற்கு ஈஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ஆதி குணசேகரனை எதிர்க்கும் ஈஸ்வரி
தர்ஷனின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஈஸ்வரி - ஆதி குணசேகரனை நேருக்கு நேர் சந்தித்து பேசுகிறார். உங்க சர்வாதிகாரத்தால் நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் போதும்... அந்த அன்புக்கரசி குடும்பத்தோட கல்யாண ஏற்பாட்டை இத்தோடு நிறுத்துங்க என ஈஸ்வரிடம் அவரிடம் கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் ஆதி குணசேகரன் எதையும் கேட்க தயாராக இல்லை. நீங்கள் இதை செய்தால், காலம் முழுக்க ஜெயிலில் கிடக்கணும் என எச்சரிக்கிறார் ஈஸ்வரி. அதற்கும் செவி சாய்க்காத ஆதி குணசேகரன், இந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்த மாட்டேன் என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.
கொலைகாரனாக மாறும் ஆதி குணசேகரன்
கல்யாணத்தை நிறுத்தாவிட்டால் நீங்க வாழவே கூடாது என ஈஸ்வரி சொன்னதும் டென்ஷன் ஆன ஆதி குணசேகரன், அவரது கழுத்தை பிடித்து நெரிக்கிறார். இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட, ஆதி குணசேகரன் கழுத்தை நெரித்ததில் ஈஸ்வரி மயக்கம் போட்டு விழுகிறார். பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஈஸ்வரியை தர்ஷன், நந்தினி ஆகியோர் சென்று தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல முயலும் போது, அவளை யாரும் தூக்காதீங்க என சவுண்டு விடுகிறார் ஆதி குணசேகரன். இதைக் கேட்டு டென்ஷன் ஆன நந்தினி, மனுஷனா நீயெல்லாம்... ச்சீனு சொல்லி பதிலடி கொடுக்கிறார்.
உயிர் பிழைப்பாரா ஈஸ்வரி?
அம்மாவின் நிலையை பார்த்து ஆக்ரோஷமான தர்ஷன், எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு... அவ்ளோதான் என குணசேகரனுக்கு எதிராக சீறுகிறார். ஈஸ்வரி உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். இந்த சண்டையால், இத்தனை நாள் ஆதி குணசேகரனின் செயல்களுக்கு தலையாட்டி வந்த தர்ஷன் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறார். இதனால் கல்யாணத்திலும் பிரச்சனை வருமா? அன்புக்கரசியை கரம்பிடிக்க சம்மதிப்பாரா தர்ஷன்? என்கிற கேள்விக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும். மறுபுறம் பார்கவியை பார்க்க கும்பகோணம் சென்ற ஜனனி, ஈஸ்வரிக்கு இப்படி ஆனது தெரிந்து பதறியடித்து ஓடி வருகிறார். இதனால் இன்றைய எபிசோடில் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.