- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் விஜய் டிவியை ஓட ஓட விரட்டிய சன் டிவி... இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
TRP ரேஸில் விஜய் டிவியை ஓட ஓட விரட்டிய சன் டிவி... இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
டிஆர்பி ரேஸில் கடந்த முறை விஜய் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், இந்த வாரம் சன் டிவி மீண்டும் சீனுக்கு வந்துள்ளது. 2026-ம் ஆண்டின் இரண்டாவது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்கள் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் அதற்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் தான் சீரியல்கள் போட்டிபோட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் விஜய் டிவி சீரியல்கள் டாப்புக்கு சென்றிருந்த நிலையில், இந்த வாரம் சன் டிவி சீரியல்கள் தங்கள் ஃபார்முக்கு மீண்டும் திரும்பி இருக்கின்றன. 2026-ம் ஆண்டின் 2-வது வாரத்தில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மீண்டும் சீனுக்கு வந்த கார்த்திகை தீபம்
விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் அதனை தட்டிதூக்கி 10-ம் இடத்தை ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் ஆக்கிரமித்து உள்ளது. அந்த சீரியலுக்கு 5.44 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக 9-வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் உள்ளது. கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் திடீர் சரிவை சந்தித்து, 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு 6.88 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.
சரிவை சந்தித்த விஜய் டிவி
பாண்டியன் ஸ்டோர்ஸை தொடர்ந்து விஜய் டிவியின் மற்ற இரண்டு பிரைம் டைம் சீரியல்களான அய்யனார் துணை மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய சீரியல்கள் கடந்த வாரம் முறையே நான்கு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தன. ஆனால் இந்த வாரம் கடகடவென சரிவை சந்தித்துள்ள இந்த இரண்டு சீரியல்களும் முறையே 8 மற்றும் 7-ம் இடத்தை பிடித்துள்ளன. இதில் 8-ம் இடத்தில் உள்ள அய்யனார் துணை சீரியலுக்கு 7.65 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 7-ம் இடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 7.72 புள்ளிகளை பெற்றுள்ளது.
மீண்டும் டாப்புக்கு வந்த சன் டிவி தொடர்கள்
சன் டிவி சீரியல்கள் தான் இந்த வாரம் முதல் ஆறு இடங்களையும் ஆக்கிரமித்து உள்ளது. அதன்படி ஆறாம் இடத்தில் அன்னம் சீரியல் உள்ளது. அதற்கு 7.74 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் ஆறாம் இடத்துக்கு தாவி உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் 5-ம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. அதற்கு 7.92 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.
முதலிடத்தை பிடித்த சீரியல் எது?
கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல், இந்த வாரம் 8.37 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கயல் சீரியலும் 6-ம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு தாவி இருக்கிறது. அதற்கு 8.75 டிஆர்பி கிடைத்துள்ளது. முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல், இந்த வாரம் 9.30 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் மூன்று முடிச்சு சீரியல் 2ம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதற்கு இந்த வாரம் 9.65 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.

