- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காதலுக்காக பொய் சொன்ன சேரன்... பாலோ பண்ணிய சோழனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல்
காதலுக்காக பொய் சொன்ன சேரன்... பாலோ பண்ணிய சோழனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியலில் தம்பிகளிடம் பொய் சொல்லிவிட்டு சந்தாவை பார்க்க சென்ற சேரனை அவரது தம்பிகள் ஃபாலோ பண்ணி சென்றுள்ளார். அதன்பின்னர் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் சோழன் டைவர்ஸ் கேட்டு அடம்பிடித்ததை நினைத்து அப்செட்டில் இருக்கும் நிலா, பைக்கில் ஆபிஸுக்கு செல்லும் போது அதை நினைத்தே கவனக்குறைவில் எதிரே வந்த வண்டி மீது மோதி விபத்தில் சிக்குகிறார். லேசான காயங்களுடன் தப்பித்த நிலா, அதோடு ஆபிஸுக்கு செல்கிறார். மறுபுறம் சேரன், வேலையை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டுக்கு வந்ததோடு, டிப் டாப்பாக கிளம்பி தான் ஒரு காதுகுத்து பங்க்ஷனுக்கு செல்வதாக தன் தம்பிகளான சோழன் மற்றும் பல்லவனிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சேரனை சந்தேகப்படும் சோழன்
அண்ணனோட நடவடிக்கையே சரியில்லையே என சந்தேகப்படும் சோழன், தன் தம்பி பல்லவனிடம் வா அவரை ஃபாலோ பண்ணலாம் என அழைக்க, அண்ணன் பொய் சொல்லாது என பல்லவன் சொல்கிறார். அவர் தான் காதுகுத்துக்கு போறேன்னு சொல்றாருல என பல்லவன் சொல்ல, ஏண்டா அவர் தான் பொய்சொல்ல தெரியாம சொல்லிட்டு போறாரு, அதையும் நீ நம்புற. இந்த நேரத்துல யாராவது காதுகுத்து வைப்பாங்களா டா. அவர் நம்மகிட்ட பொய் சொல்லிட்டு சந்தாவை பார்க்க செல்கிறார் என சோழன் சொல்ல, அதெல்லாம் இருக்காது என பல்லவன் கூறுகிறார். நம்பலேனா என்கூட வந்து பாரு என பல்லவனை அழைத்துக்கொண்டு காரில் கிளம்புகிறார் சோழன்.
சந்தா வீட்டில் நடக்கும் ரொமான்ஸ்
சேரன், சந்தா வீட்டுக்கு செல்லும் முன், அந்த ஏரியாவுக்கு காரில் சென்று வெயிட் பண்ணுகிறார்கள் சோழன் மற்றும் பல்லவன். கொஞ்ச நேரத்தில் சேரன் அங்கு சைக்கிளில் வந்து சந்தா வீட்டுக்குள் செல்கிறார். கொஞ்ச நேரத்துல வெளிய வருவார்னு இவர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க. உள்ளே போய் ஒரு மணிநேரமாக சேரன் வெளியே வராததால், என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சோழன் அங்கு சென்று பார்க்க செல்கிறார். அப்போது சந்தா, சேரனுக்கு டீ போட்டுக் கொடுத்து அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதன்பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
அண்ணனின் அட்ராசிட்டியால் கடுப்பாடும் சோழன்
சேரனும், சந்தாவும் சைக்கிளில் ஜோடியாக செல்ல, அவர்களை ஃபாலோ பண்ணுகிறார் சோழன். சேரன், சந்தாவுடன் நெருக்கமாக சைக்கிளில் அமர்ந்து செல்வதை பார்த்து காண்டாகும் சோழன், கல்யாணம் ஆன நானே இப்படியெல்லாம் பண்ணதில்ல, அண்ணன் என்னென்ன பண்றாரு பாருடா என பல்லவனிடம் புலம்புகிறார். இதன்பின் ஒரு கோவிலில் சைக்கிளை நிறுத்துவிட்டு இருவரும் உள்ளே செல்கிறார்கள். அதைப்பார்த்த சோழன், ஒருவேளை அண்ணன் கல்யாணம் பண்ண போகுதோ என சொல்ல, இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணே வா நம்ம வீட்டுக்கு கிளம்பலாம் என அழைத்து செல்கிறார் பல்லவன். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

