- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வேலையை தூக்கி எறியச் சொல்லும் சோழன்... நிலா எடுத்த முடிவு என்ன? அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
வேலையை தூக்கி எறியச் சொல்லும் சோழன்... நிலா எடுத்த முடிவு என்ன? அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
அய்யனார் துணை சீரியலில் நிலாவை ஆபிஸுக்கு டிராப் பண்ண சென்ற சோழன், அவரிடம் நீங்க ஏன் இந்த வேலையை விட்டு நிற்கக்கூடாது என கேட்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் சேரனால், நிலா - சோழனின் விவாகரத்து மேட்டர் ராகவ்வுக்கு தெரிய வந்து அவர் நிலாவை காதலிப்பதாக சொல்லி டார்ச்சர் பண்ணியதை அடுத்து, கடுப்பான நிலா, சேரனை திட்ட, பின்னர் ராகவ்வின் வீட்டிற்கே சென்ற சோழன், அவரை அடிவெளுத்திருக்கிறார். உன்மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என ராகவ் மிரட்டிப் பார்க்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராத சோழன், நீ புகார் கொடுத்தால் அடுத்தவன் பொண்டாட்டியை லவ் டார்ச்சர் பண்றியானு உன்ன தான் தூக்கி உள்ள போடுவாங்க என கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மன்னிப்பு கேட்ட சேரன்
சேரன், சோழனிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். அதன்பின்னர் நிலாவிடமும் சென்று சேரன் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்கிறார். அதைப்பார்த்து மனம் இறங்கிய நிலா, நீங்க என்ன அண்ணே பண்ணுவீங்க, நீங்க அழுகாதீங்கண்ணே, எனக்கு கோபம் வந்துச்சு, அதுனால தான் உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன். என்னைய மன்னிச்சிடுங்க என சொல்லி சேரனை கட்டிப்பிடிக்கிறார். ஒருவழியாக சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து நிலா தன்னுடைய ரூமுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
நிலா ரூமுக்குள் வந்த பாம்பு
நிலா ரூம் கதவை சாத்திவிட்டு டிரெஸ் மாத்தலாம் என போகும்போது, அங்கு ஒரு பாம்பு இருப்பதை பார்த்து பதறிப்போகிறார். தன்னை காப்பாற்றுமாறு நிலா கத்துகிறார். ஆனால் ரூம் கதவு சாத்தி இருப்பதால், யாராலும் உள்ளே செல்ல முடியவில்லை. கதவு அருகே பாம்பு இருப்பதால், நிலாவால் கதவை திறக்க முடியவில்லை. பின்னர் பாம்பு வேறு பக்கம் சென்றதும் கதவை திறக்கிறார் நிலா. பின்னர் சேரனும், சோழனும் பாம்பை தேடுகிறார்கள். அதன்பின்னர் அந்த பாம்பு தானாகவே கட்டில் மீது ஏறி, ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிடுகிறது.
தப்பித்த நிலா
இதையடுத்து பாம்பு எப்படி உள்ளே வந்தது என செக் பண்ணுகிறார்கள். அப்போது தான் ஜன்னலில் வலை ஒன்று ஓட்டையாக இருக்கிறது. அது வழியாக தான் பாம்பு உள்ளே வந்திருக்கிறது. நிலா பாம்பை பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்க, இங்க இப்படிதான் பாம்பு அடிக்கடி வந்துட்டு போகும் என சேரன் சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆகும் நிலா, என்னது பாம்பு அடிக்கடி வருமா என கேட்க, முன்னெல்லாம் அடிக்கடி வரும், நீ வந்ததுக்கு அப்புறம் வந்ததில்லை என சொல்கிறார் சேரன். இதன்பின்னர் வீட்டை எப்படியாச்சும் சரி பண்ணனும் என முடிவு செய்கிறார்கள்.
நிலா எடுக்கும் முடிவு
பின்னர் சோழன் நிலாவை காரில் அழைத்துக் கொண்டு ஆபிஸில் டிராப் பண்ண செல்கிறார். அப்போது நீங்க ஏன் இந்த ஆபிஸில் வேலை பார்க்கணும், பேசாம வேற கம்பெனிக்கு போக வேண்டியதுதான என சோழன் கேட்கிறார். அதற்கு நிலா, நானே இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன். இங்க ஒரு ஆறு மாசமாச்சும் வேலை பார்த்தால் தான் எக்ஸ்பீரியன்ஸ் சான்றிதழ் கிடைக்கும். அதற்காக தான் இங்க வேலை பார்க்கிறேன்னு சொல்கிறார். இதையடுத்து வீட்டில் என்னென்ன வேலையெல்லாம் பார்க்க வேண்டும் என அனைவரும் லிஸ்ட் போட்டுக்கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து பாண்டியனுக்கு வானதி போன் போட்டு டார்ச்சர் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

