MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மவனே நிலாவுக்கா ரூட் விடுற... ராகவ்வை கதற கதற அடித்த சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

மவனே நிலாவுக்கா ரூட் விடுற... ராகவ்வை கதற கதற அடித்த சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

அய்யனார் துணை சீரியலில் நிலாவிடம் அத்துமீறி பேசிய ராகவ்வை வீடுதேடிச் சென்று அடிவெளுத்திருக்கிறார் சோழன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2026, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் ராகவ்விடம் நிலா - சோழன் இருவரின் திருமண வாழ்க்கை பற்றிய உண்மைகளை சேரன் சொல்லிவிட, இதைக்கேட்டு டென்ஷன் ஆன நிலா, வீட்டுக்கு வந்து சேரனை டார் டாராக கிழிக்கிறார். அதுமட்டுமின்றி அந்த ராகவ் தன்னை இந்த வீட்டை விட்டு வெளியே வரச் சொல்லி, தனியாக அபார்ட்மெண்ட் பார்த்து தருகிறேன் என சொன்னதையும் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டு கடுப்பான சோழன், தன் அண்ணனையே அடிக்க பாய்கிறான். இதையடுத்து பாண்டியனும், பல்லவனும் சோழனை தடுத்து நிறுத்துகிறார்கள். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஃபீல் பண்ணும் சேரன்
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் சேரன்

சேரனை திட்டிய பின்னர் நிலா கோபமாக ரூமுக்குள் சென்றுவிடுகிறார். அதன்பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் சேரன் புலம்புகிறார். ஆனால் அவருடைய தம்பிகளான பாண்டியன் மற்றும் பல்லவனும் உன் மேல தான் அண்ணேன் தப்பு இருக்கு என சொல்கிறார்கள். நிலா தான் ஒருமுறை ராகவ் வீட்டுக்கு வந்திருக்கும்போது சோழனை தன்னுடைய கசின்னு சொன்னா, அதனால தான் அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை என்னனு சொன்னேன் என கூறுகிறார்.

Related Articles

Related image1
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Related image2
வானதியால் சோழன் - பாண்டியன் இடையே வெடித்த மோதல்; நிலாவை டென்ஷனாக்கிய ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
35
ராகவ் வீட்டுக்கு செல்லும் சோழன்
Image Credit : jiohotstar

ராகவ் வீட்டுக்கு செல்லும் சோழன்

அதுமட்டுமில்ல அவங்க சீக்கிரம் ஒன்னு சேர்ந்துருவாங்கன்னும் சொன்னேன். ஆனால் அவன் அதையெல்லாம் விட்டுட்டு இப்படி பேசுவான்னு எனக்கு எப்படி டா தெரியும் என புலம்புகிறார் சேரன். இதையடுத்து சோகத்தில் சந்தா வீட்டுக்கு செல்கிறார் சேரன். அங்கு நிலா தன்னை திட்டியதெல்லாம் சொல்லி ஃபீல் பண்ணுகிறார். சந்தாவும், அவருடைய அண்ணனும் சேரனுக்கு ஆறுதல் சொல்லுகிறார்கள். மறுபுறம் சோழன் நேராக ராகவ் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு சென்று ராகவ்வுக்கு போன் போட்டு அவனை வெளியே வர வைக்கிறார்.

45
ராகவ்வை அடிவெளுத்த சோழன்
Image Credit : jiohotstar

ராகவ்வை அடிவெளுத்த சோழன்

வெளியே வந்த ராகவ்விடம் ஏண்டா என் பொண்டாட்டிகிட்ட தப்பு தப்பா பேசுனனு கேட்டு அடி வெளுக்கிறார். உடனே ராகவ், டேய் நான் போலீஸ கூப்பிடுவேன் என சொல்ல, அதற்கு சோழன், உடனே கூப்பிடு, நானும் இங்கயே தான் இருப்பேன். நீ என் பொண்டாட்டிக்கு மெசேஜ் அனுப்புனது, தப்பு தப்பா ஸ்டேட்டஸ் வச்சதுனு எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு, நான் போலீஸ்கிட்ட காட்டி உன்னை உள்ள தூக்கி போடச் சொல்றேன் என கூறுகிறார். இதையெல்லாம் போலீஸிடம் காட்டினால் உன்னோட கம்பெனியையே இழுத்து மூடிருவாங்க என சோழன் சொன்னதும் டர்ராகிறார் ராகவ்.

55
நிலா செம ஹாப்பி
Image Credit : jiohotstar

நிலா செம ஹாப்பி

இதையடுத்து வீட்டுக்கு செல்லும் சோழன், நிலாவிடம் சென்று தான் ராகவ்வை அடி வெளுத்ததாக சொல்கிறார். அய்யய்யோ இதனால எதுவும் பிரச்சனை வந்திடுமோனு ஆரம்பத்தில் பயந்த நிலா, பின்னர் போகப் போக, நல்லா அடிச்சிங்களா அவன என கேட்கிறார். ஒருவழியாக ராகவ் அடிவாங்கிய தகவல் தெரிந்ததும் தான் நிலா சற்று ஆறுதல் அடைந்திருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது? நிலாவுக்கு சோழன் மீது லைட்டாக ஃபீலிங்ஸ் வர ஆரம்பித்ததா? அவர்கள் இருவரின் டைவர்ஸ் கேஸ் என்ன ஆனது? இருவரும் விவாகரத்து முடிவில் இருந்து பின் வாங்கினார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மத்திய அமைச்சரை வைத்து மாமியாரை கார்னர் செய்த கார்த்திக் – சிலை திறப்பு விழாவில் மெகா டுவிஸ்ட்!
Recommended image2
காதல் மழையில் நனையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2! சரவணன் - அஞ்சலி மொமெண்ட்ஸ் முதல் கதிர் - ராஜியின் ரொமான்ஸ் வரை!
Recommended image3
கார்த்திக்கின் கனவு நிறைவேறுமா? அம்மாவின் சிலைக்கு பாம்ப் வைத்த சிவனாண்டி – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
Related Stories
Recommended image1
நிலாவுக்காக சேரனை அடிக்க பாயும் சோழன்... வானதியால் உறவுக்குள் ஏற்படும் விரிசல் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
வானதியால் சோழன் - பாண்டியன் இடையே வெடித்த மோதல்; நிலாவை டென்ஷனாக்கிய ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved