- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Ayyanar Thunai: காலில் விழுந்து கெஞ்சிய சேரன்.! நிலா எடுத்த அதிரடி முடிவு! அய்யனார் துணை சீரியலில் உச்சகட்ட பரபரப்பு.
Ayyanar Thunai: காலில் விழுந்து கெஞ்சிய சேரன்.! நிலா எடுத்த அதிரடி முடிவு! அய்யனார் துணை சீரியலில் உச்சகட்ட பரபரப்பு.
அய்யனார் துணை சீரியலில் சேரன் - நிலா இடையே ஏற்பட்ட விரிசல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தன் தங்கைக்காக சோழன் ராகவை அடித்ததும் குற்ற உணர்ச்சியில் சேரன் மன்னிப்பு கேட்க நிலா அவரை மன்னித்ததும் கதையில் நெகிழ்ச்சியான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் - தங்கை விரிசல் விழுந்ததா? இணைந்ததா?
சின்னத்திரை உலகில் குடும்ப உறவுகளின் மேன்மையைச் சொல்லும் தொடர்கள் எப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட். சிலரால் இந்த சீரியலை பார்க்காமல் இருக்கவே முடியாது. கதையின் போக்கு இந்த சீரியலை பார்ப்பவர்ளை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது. அந்த வகையில், 'அய்யனார் துணை' சீரியல் தற்போது ஒரு உணர்ச்சிகரமான போர்க்களமாக மாறியுள்ளது. அண்ணன்-தங்கை பாசத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த சேரன் மற்றும் நிலா இடையே ஏற்பட்டுள்ள பிளவு, ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இது தொடர்பான வெளியான புரோமோ ரசிகர்களை அடுத்தவார எபிசோடிற்கு அப்படியே இழுத்து செல்கிறது.
ஆவேசமான சோழன் - ராகவிற்கு விழுந்த அடி!
நிலாவைப் பற்றி ராகவிடம் சேரன் உண்மையைச் சொன்னது, ஒரு நல்லெண்ணத்தில் என்றாலும் அது விபரீதமாக முடிந்தது. ராகவ் தன்னைக் கேவலமாகப் பேசியதை நிலாவால் ஜீரணிக்க முடியவில்லை. தன் தங்கை நிலாவின் கண்ணீருக்குக் காரணமான ராகவை, சோழன் சும்மா விடவில்லை. ஆவேசமாக ராகவ் வீட்டிற்குச் சென்ற சோழன், அவனைப் புரட்டி எடுத்தார். இனி ஒருமுறை நிலாவிடம் வம்பிழுத்தால் விளைவுகள் மோசமாகும் என அவர் கொடுத்த எச்சரிக்கை, கதையில் அதிரடி திருப்பத்தைக் கொடுத்தது. இது ஒருபுறம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்தாலும், குடும்பத்திற்குள் இருந்த விரிசல் இன்னும் சரியாகாமல் இருந்தது.
உருகிய சேரன் - கையேந்தி கேட்ட மன்னிப்பு
தன்னால் தான் இத்தனை பிரச்சனைகளும் என உணர்ந்த சேரன், குற்ற உணர்ச்சியில் தவித்தார். முதலில் தம்பி சோழனிடம் மன்னிப்பு கேட்க, பெரியவர் என்று பாராமல் சோழன் அவரைச் சமாதானம் செய்தார். ஆனால், நிலாவின் மௌனம் தான் சேரனை அதிகம் வாட்டியது. ஒரு கட்டத்தில் நிலாவிற்குப் பாசத்துடன் அவர் காபி கொடுக்க, நிலா அதை வாங்கினாலும் குடிக்காமல் கீழே வைத்தது சேரனின் இதயத்தை உடைத்தது.
கோபத்துல உங்களை தப்பா பேசிட்டேன்
தன் தங்கை தன்னிடம் பேசமாட்டாளோ என்ற பயத்தில், சேரன் கைகூப்பி கதறி அழுதபடி மன்னிப்பு கேட்ட காட்சி பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. அண்ணன் தன் முன் கையேந்தி நிற்பதை நிலாவால் ஒரு நிமிடம் கூடத் தாங்க முடியவில்லை. ஓடிச் சென்று அவர் கையைப் பிடித்துக்கொண்ட நிலா, "நீங்க இப்படி நிக்காதீங்க அண்ணே... கோபத்துல நானும் உங்களை தப்பா பேசிட்டேன்" எனக் கூறி அவர் தோளில் சாய்ந்து அழுதார்.
பாசம் வெல்லுமா? பகை தொடருமா?
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் சேரன் மற்றும் நிலா இடையேயான கசப்புணர்வுகள் மறைந்து, மீண்டும் பாசம் துளிர்த்துள்ளது. ஒரு சினிமா க்ளைமாக்ஸ் போலவே இந்தத் தருணம் அமைந்திருந்தது. இருப்பினும், சோழனிடம் அடி வாங்கிய ராகவ் பழிவாங்கத் துடிப்பான் என்பதால், அய்யனார் குடும்பத்திற்கு வரும் ஆபத்துகள் குறையவில்லை என்றே தோன்றுகிறது. அண்ணன்-தங்கைகள் ஒற்றுமையாகச் சேர்ந்து இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதே இனி வரும் எபிசோட்களின் விறுவிறுப்பு.

