- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆளவிடுங்கடா சாமி... ரெளடிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சந்தா உடன் எஸ்கேப் ஆன சேரன் - அய்யனார் துணை சீரியல்
ஆளவிடுங்கடா சாமி... ரெளடிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சந்தா உடன் எஸ்கேப் ஆன சேரன் - அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியலில் சந்தாவுடன் ஜோடியாக பீச்சுக்கு சென்று ரொமான்ஸ் பண்ணும் சேரனை ரெளடிகள் சுற்றிவளைக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடில், சந்தாவை பீச்சுக்கு அழைத்துச் செல்லும் சேரன், அங்கு ஜாலியாக ரொமான்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அப்போது சேரனை கடல் அலையில் காலை நனைக்க அழைக்கிறார் சந்தா, ஆனால் சேரன் பயந்துகொண்டு, எனக்கு நீச்சல் தெரியாது அதனால் நீ மட்டும் போய் கடல்ல விளையாடு என சொல்லிவிடுகிறார். ஆரம்பத்தில் சந்தா மட்டும் தனியாக சென்று கடலில் ஜாலியாக ஆட்டம் போடுகிறார். பின்னர் சேரனையும் அழைக்கிறார். அவர் வர மறுக்க, வாங்க எனக்கு நீச்சல் தெரியும். எதாச்சும் ஆச்சுனா நான் பாத்துக்கிறேன் என சொல்கிறார்.
சந்தா உடன் ரொமான்ஸ் பண்ணும் சேரன்
பின்னர் சந்தாவின் கையை பிடித்துக் கொண்டு கடல் அருகே செல்கிறார் சேரன். இருவரும் காலை நனைத்து சிறிது நேரம் கடலில் விளையாடிவிட்டு, மீண்டும் கரைக்கு வந்து அமர்கிறார். அப்போது தாங்கள் எடுத்து வந்த டிபன் கெரியரை எடுத்து, அதில் உள்ள சாப்பாட்டை ஒன்றாக சாப்பிடுகிறார்கள். அதன்பின்னர் சந்தா, சேரனின் தோழில் சாய்ந்துகொள்கிறார். அப்போது அங்கு மூன்று ரெளடிகள் வருகிறார். சந்தாவும், சேரனும் பீச்சில் ரொமான்ஸ் செய்வதை பார்த்த அவர்கள், அருகில் சென்று இருவரிடமும் வம்பிழுக்கிறார். அவர்கள் இருவரையும் கிண்டலடித்து பேசுகிறார்கள்.
சேரனை வம்பிழுக்கும் ரெளடிகள்
இந்த ஃபிகர நீ தள்ளிக்கிட்டு தான வந்திருக்க, விட்டிடு இதுக்கப்புறம் நாங்க பாத்துக்குறோம் என சொல்லி அந்த ரெளடிகள் சந்தாவிடம் தப்பா நடந்துக்க முயற்சி செய்கிறார்கள். அதுக்கப்புறம் சேரன் அந்த ரெளடிகளுடன் சண்டை போடுவார் என்று பார்த்தால், அவர் அவர்களை தள்ளிவிட்டுவிட்டு, சந்தாவை கூட்டிக்கிட்டு ஓடுகிறார். அந்த ரெளடிகள் துரத்தி வருவதற்குள் பைக் எடுத்துக்கொண்டு தப்பித்துவிடுகிறார். இதையடுத்து ஒரு கடையில் நிறுத்தி, இருவரும் டீ குடிக்கிறார்கள். அதன்பின்னர் சந்தாவை பத்திரமாக அழைத்து வந்து வீட்டில் விட்டு விடுகிறார் சேரன்.
நிலா எடுத்த அதிரடி முடிவு
மறுபுறம் வீட்டில், சேரன் தான் எப்பவுமே சமையல் வேலைகளை பார்ப்பார். ஆனால் தற்போது அவர் வீட்டில் இல்லாததால், சமையல் செய்யாமல் கிடக்கிறது. சோழனுக்கு பசி எடுக்க, இப்போ என்ன பண்றது என அவர் கேட்கையில், நீ தான் சமைக்கணும் என சொல்கிறார்கள். என்னது சமையலா என ஷாக் ஆகிறார் சோழன். அதன்பின்னர் களத்தில் இறங்கும் நிலா, வாங்க நம்ம எல்லாருமே சேர்ந்து சமைப்போம் என அழைக்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? சோழன் வேறெதுவும் பிரச்சனையில் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

