MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்... பிக்பாஸ் அர்ச்சனா கூறிய அதிர்ச்சி தகவல்

கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்... பிக்பாஸ் அர்ச்சனா கூறிய அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன அர்ச்சனா, தானும் தனது கணவரும் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2023, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் அர்ச்சனா. இதையடுத்து திருமணம் செய்துகொண்டு சின்னத்திரையில் இருந்து சில ஆண்டுகள் விலகியே இருந்த அர்ச்சனா, பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக எண்ட்ரி கொடுத்தார். ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

25

அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு ட்ரோல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார் அர்ச்சனா. அதில் அன்பு தான் ஜெயிக்கும் என சொல்லி ஒரு ரியோ, அறந்தாங்கி நிஷா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு விளையாடி வந்த அர்ச்சனாவை அன்பு கேங் என சொல்லி கடுமையாக ட்ரோல் செய்தனர். அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

35

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத அர்ச்சனா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததோடு, படங்களிலும் நடிக்கத்தொடங்கினார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் அர்ச்சனா. இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்கள் வெளியிட்டு அதன்மூலமும் சம்பாதித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... யாரும் எதிர்பார்க்காத கூட்டணி... சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘கொட்டுக்காளி’ - இயக்கபோவது யார் தெரியுமா?

45

இந்நிலையில், சமீபத்தில் தனது மகள் சாரா உடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா, தான் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அர்ச்சனா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வினீத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் இருக்கிறார். 

55

வினீத் கடற்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடும் இருந்து வந்ததாம். இதன்காரணமாக கடந்த மாதம் தாங்க இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிடலாம் என பேசிக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை கூறினார். இதன்பின் அவர்கள் இருவரையும் அவரது மகள் சாரா தான் சமாதானப்படுத்தி இருவரிடமும் மனம்விட்டு பேசினாராம். அதன்பின்னர் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு, 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி காதலித்தார்களோ அதேபோல் தற்போதும் காதலித்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார் அர்ச்சனா.

இதையும் படியுங்கள்... இரண்டாம் திருமணம் செய்யப்போகிறாரா நடிகர் தனுஷ்?... காட்டுத்தீ போல் பரவும் தகவல் - பின்னணி என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
காத்திருக்கும் வானதி வீட்டார்... காணாமல் போன பாண்டியன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved