யாரும் எதிர்பார்க்காத கூட்டணி... சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘கொட்டுக்காளி’ - இயக்கபோவது யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக கொட்டுக்காளி என்கிற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்து வருகிறார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படம், ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் என படு பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படி நடிப்பில் ஒருபக்கம் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன், மறுபக்கம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... இரண்டாம் திருமணம் செய்யப்போகிறாரா நடிகர் தனுஷ்?... காட்டுத்தீ போல் பரவும் தகவல் - பின்னணி என்ன?
இவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு கொட்டுக்காளி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய கூழாங்கல் என்கிற திரைப்படம் உலகளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.
கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிகர் சூரி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் என்கிற மலையாள நடிகை நடிக்கிறார். இப்படத்திற்கு பி.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவா பணியாற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு... கலக்குது பார் இவ ஸ்டைலு! 54 வயதிலும் அழகில் மகளுக்கே டஃப் கொடுக்கும் கெளதமி