இரண்டாம் திருமணம் செய்யப்போகிறாரா நடிகர் தனுஷ்?... காட்டுத்தீ போல் பரவும் தகவல் - பின்னணி என்ன?
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த நடிகர் தனுஷ், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். இப்படம் வெளியாகி ஹிட்டானதும், தனது அண்ணன் செல்வராகவன் உடன் இணைந்து காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். இதையடுத்து திருடா திருடி படத்தில் மன்மத ராசாவாக ஆட்டம்போட்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் தனுஷ்.
இப்படி சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 3 படங்கள் வெற்றியடைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும், தனுஷ் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். குறிப்பாக அவர் மிகவும் ஒல்லியாக இருந்ததை ஏராளமானோர் கிண்டலடித்து வந்தனர். விமர்சனங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சினிமாவில் புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் என அடுத்தடுத்து வெற்றிவாகை சூடியதோடு, ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் திறமையால் பதிலடி கொடுத்தார்.
தற்போது தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் என பெயரெடுத்துள்ள தனுஷ், தொடர்ந்து பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகிலும் தன் காலடியை பதித்து அசத்தி வருகிறார். இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு... கலக்குது பார் இவ ஸ்டைலு! 54 வயதிலும் அழகில் மகளுக்கே டஃப் கொடுக்கும் கெளதமி
இந்நிலையில், நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்தாண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், அது தோல்வியிலேயே முடிந்தது. தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஒருபக்கம் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா இயக்குனராக தனது பணியை தொடங்கி உள்ளார். அவர் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தான் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என அவரது ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஏனெனில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில், தான் சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபோது, தயவு செய்து மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இரு என தனுஷ் அட்வைஸ் பண்ணியதாக கூறினார். இரண்டாம் திருமணம் வேண்டாம் என அட்வைஸ் பண்ணிய தனுஷே எப்படி அதை செய்வார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்... காட்டுப் பசியில் இருந்தாலும்.... கம்மி சம்பளம் போதும்னு சொல்லி கமலுக்கு ஷாக் கொடுத்த சிம்பு..!