MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!

Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!

Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் அக்‌ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்துக்கு அஸ்மிதா - பிரித்வி ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 07 2026, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil Season 10
Image Credit : jiohotstar

Bigg Boss Tamil Season 10

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்களை நிறைவு செய்து தற்போது ஐந்தாவது வாரத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இதுவரை பெரிதாக கவனம் பெறாத சில போட்டியாளர்களும் தற்போது தங்களது ஆட்டத்தை மாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் நிகழ்ச்சிக்குள் மூன்று வைல்ட்கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். காமென் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கரிஷ்மா, டிடிஎஃப் வாசன் மற்றும் அக்‌ஷிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் புதுவரவுகளாக களமிறங்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உருவாகும் புது கூட்டணி
Image Credit : jiohotstar

உருவாகும் புது கூட்டணி

இதில் அக்‌ஷிதா சீரியல் நடிகை என்பது மட்டுமின்றி, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவினாஷின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் வருகைக்குப் பிறகு வீட்டில் இருந்த போட்டியாளர்களின் உறவுகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை நெருக்கமாக இருந்த சில போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகி வரும் நிலையில், ஏற்கனவே போட்டி மனப்பான்மையுடன் இருந்த சிலர் புதிய கூட்டணிகளை உருவாக்கி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் அதிக பரபரப்பாகி வருகிறது.

34
போட்டியை சூடுபிடிக்க வைக்கும் புதிய டாஸ்க்!
Image Credit : jiohotstar

போட்டியை சூடுபிடிக்க வைக்கும் புதிய டாஸ்க்!

இந்நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டியை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள இரண்டாவது புரோமோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புரோமோவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போட்டியாளர்களுக்கு நீல நிற செங்கற்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட அணியிடம் ஆறு நீல செங்கற்கள் சேர்ந்தால், எதிரணியில் உள்ள ஒரு போட்டியாளரின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் என விதிமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அஸ்மிதா மற்றும் பிரித்வி அணியினர் ஆறு நீல செங்கற்களை கைப்பற்றியுள்ளனர்.

44
அக்‌ஷிதா – அவினாஷுக்கு எதிராக எடுத்த அதிரடி முடிவு!
Image Credit : jiohotstar

அக்‌ஷிதா – அவினாஷுக்கு எதிராக எடுத்த அதிரடி முடிவு!

ஆறு செங்கற்களை பெற்ற அஸ்மிதா – பிரித்வி அணியினர், தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி அக்‌ஷிதா மற்றும் அவினாஷின் ஆட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்கின்றனர். இதனை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அண்ணன் – தங்கை இருவரும் போட்டியாளர்களாக இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர்களின் ஆட்டத்தை முடக்க எடுத்துள்ள இந்த முடிவு நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டாஸ்க் அடுத்தடுத்து போட்டியாளர்களுக்கு இடையே புதிய மோதல்களை உருவாக்குமா, அல்லது புதிய கூட்டணிகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போதைய புரோமோ வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Recommended image2
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Recommended image3
Azhagae Azhagu Promo: அம்மாவை தள்ளிவிட்ட தங்கராஜ்..கொந்தளித்த மலர்! மன்னிப்பு கேட்கணும் என சுரேஷிடம் அதிரடி கண்டிஷன்!
Related Stories
Recommended image1
Bigg Boss கொடுத்த புதிய டாஸ்க்கால் வெடிக்கும் சண்டை! லட்சுமி பிரியாவை கதறவிட்ட முனியம்மாள்... செம நோஸ் கட் வாங்கிய முத்தழகி
Recommended image2
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved