- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பைனலுக்கு முன்பே சினிமாவில் பாடும் வாய்ப்பை தட்டிதூக்கிய பக்தி சூப்பர் சிங்கர் போட்டியாளர்!
பைனலுக்கு முன்பே சினிமாவில் பாடும் வாய்ப்பை தட்டிதூக்கிய பக்தி சூப்பர் சிங்கர் போட்டியாளர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிராமிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

Vijay TV Bakthi Super Singer
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் மிகப் பிரபலமான இசை நிகழ்ச்சி தான் “பக்தி சூப்பர் சிங்கர்”. இந்நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பைனலுக்கு முன்பே அதில் பங்கேற்றுள்ள பல இளம் திறமையாளர்களுக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர் பைனலுக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட போட்டியாளர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
பக்தி சூப்பர் சிங்கர்
முன்னெப்போதையும் விட இம்முறை நடந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகளும், சர்ப்ரைஸ் தருணங்களும், பிரபலங்களின் வருகை மற்றும் நெகிழ்வான சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இப்படி பல அற்புதமான தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பக்தி சூப்பர் சிங்கர் போட்டியில், பல பின்னணியிலிருந்து வரும் அற்புதமான பல திறமையாளர்கள், மக்களின் மனங்களை வெல்வதோடு மட்டுமின்றி திரைக்கலைஞர்களையும் கவர்ந்துள்ளனர்.
சினிமா வாய்ப்பு வழங்கிய ஜேம்ஸ் வசந்தன்
அந்த வகையில் இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து உருவான ஒரு நட்சத்திரமாக அபிராமி ஜொலித்து வருகிறார். அபிராமி காரைக்குடிக்கு அருகிலுள்ள சிற்றூரைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறப் பாடகி ஆவார். எந்தவித இசைப் பயிற்சியும் பெறாத இவர். கிராமத்து திருவிழாக்களில் மட்டுமே பாடி தன்னுடைய திறமையை வளர்த்து வந்துள்ளார். பக்தி சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட முதல் எபிசோடில் இருந்து ரசிகர்களின் பேரன்பையும், பாராட்டையும் பெற்று வருகிறார் அபிராமி. அபிராமியின் தனித்துமான குரல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை வெகுவாக கவர்ந்திழுக்க, அவர் தான் இசையமைக்கும் படத்தில் அபிராமிக்கு பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இன்ப அதிர்ச்சி கொடுத்த T.L. மகாராஜன்
இது அபிராமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும். பக்தி சூப்பர் சிங்கர் இவரது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதோடு, அவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை பெற்றுத்தந்ததில் முக்கிய பங்காற்றி உள்ளது. இதுமட்டுமின்றி இசைப் பட்டம் பெற்ற T.L. மகாராஜன் இந்த பக்தி சூப்பர் சிங்கரில் நடுவராக இருந்து வருகிறார். அவர் இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களான பவித்ரா மற்றும் அலெய்னா ஆகிய இருவரையும் தனது பக்தி ஆல்பத்தில் பாட அழைத்துள்ளார். இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உண்மையிலேயே பல இளம் திறமையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சினிமா வாய்ப்பை பெற்றுள்ள போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.