- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கல்யாண வீட்டில் கலாட்டா... அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் கொடுத்த வார்னிங் - எதிர்நீச்சல் தொடர்கிறது
கல்யாண வீட்டில் கலாட்டா... அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் கொடுத்த வார்னிங் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Ethirneechal Thodargiradhu Serial 259th Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கல்யாண வீட்டில் ஆட்டம் போட்ட அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் கொடுத்த பதிலடியை பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தத்தை துரத்தி சென்ற புலிகேசி, அவரை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையிலும், பார்கவி உடன் தப்பித்து சென்று ஒரு மறைவான இடத்தில் ஒளிந்துகொள்கிறார் ஜீவானந்தம். புலிகேசி டீமால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. சிறிது நேரம் கழித்து ஜீவானந்தம் பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்துவிடுகிறார். அவரின் நிலையை பார்த்து கோபத்தின் உச்சத்துக்கே செல்லும் பார்கவி, தன்னால் தான் அவருக்கு இப்படி ஆனதாக கதறி அழுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ஜீவானந்தத்தை மீட்க செல்லும் ஜனனி
ஆஸ்பத்திரியில் ஈஸ்வரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போன் வந்ததை அடுத்து, சக்தி அங்கு கிளம்பி சென்று பார்க்கிறார். அப்போது அங்கு ஈஸ்வரி நலமுடன் இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விடும் சக்தி, பின்னர் ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார். அவர் ஜீவானந்தத்தை தான் பத்திரமாக கூட்டிட்டு வந்துவிடுவதாக சொல்கிறார். சக்தி தானும் வருகிறேன் என சொல்ல, அதற்கு ஜனனி, தான் கிளம்பிவிட்டதாக கூறுகிறார். மறுபுறம் ஜனனி, ஜீவானந்தத்தை போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு லைன் கிடைக்காததால் அவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பயத்திலேயே கார் ஓட்டிச் செல்கிறார்.
அறிவுக்கரசி செய்யும் கலாட்டா
மண்டபத்தில் தர்ஷன் தான் டிரெஸ் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்ததை அடுத்து அவரை மிரட்டிய கதிர் மற்றும் அறிவுக்கரசி, கீழே வந்து ஆதி குணசேகரனிடம், இந்த கல்யாணத்தை சிறப்பா பண்ணப்போறீங்களா? இல்லை எல்லாருக்கும் பயந்து கமுக்கமா பண்ணப்போறீங்களா என கேட்கிறார். அறிவுக்கரசியின் இந்த கேள்வியால் கடுப்பான ஆதி குணசேகரன், உன்னுடைய உருட்டல் மிரட்டல் எல்லாம் இங்க வச்சிக்காத என வார்னிங் கொடுக்கிறார். பின்னர் கல்யாண வீட்டில் ஆதி குணசேகரன் தன்னுடைய குடும்பத்தினருடன் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?
இந்த கல்யாண வீட்டில் மிகப்பெரிய ட்விஸ்ட் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. கரிகாலன் செல் சர்வீஸ் பண்ணுன பிரெண்ட வெச்சி கல்யாண நிகழ்ச்சியை டிவி ஸ்கிரீன்ல ப்ளே பண்ணப்போறான். அதுல ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கிய சம்பவத்தை தெரியாம ப்ளே பண்ணிட்டா பெரிய சம்பவமோ சேதாரமோ ஆக வாய்ப்பு இருக்கு. ஏனெனில் ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ கரிகாலனின் நண்பனிடம் தான் இருக்கிறது. இதனால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இனி வரும் எபிசோடுகள் பட்டாசாய் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.