MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • எனக்கு பார்கவி வேண்டாம்... திடீரென அந்தர் பல்டி அடித்த தர்ஷன் - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

எனக்கு பார்கவி வேண்டாம்... திடீரென அந்தர் பல்டி அடித்த தர்ஷன் - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவி திருமணத்தை நடத்தி முடிக்க ஜனனி படாத பாடு பட்டு வரும் நிலையில், அதில் புது ட்விஸ்ட் வந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 10 2025, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சினிமாவுக்கு நிகரான சஸ்பென்ஸோடு சென்றுகொண்டிருக்கிறது. இதில் தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள். தர்ஷனின் திருமணம் நெருங்கி வரும் நிலையில், பார்கவியை எப்படியாவது தர்ஷன் உடன் சேர்த்து வைத்துவிட வேண்டும் என முயற்சித்து வரும் ஜீவானந்தம், புலிகேசி டீமிடம் இருந்து தப்பித்து, காட்டு வழியே எஸ்கேப் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தர்ஷன் கொடுத்த ட்விஸ்ட்
Image Credit : youtube/suntv

தர்ஷன் கொடுத்த ட்விஸ்ட்

தர்ஷனை அழைத்து வந்து ஜனனி, சக்தி ஆகியோர் முன் நிறுத்து சொல்ல சொல்கிறார் குணசேகரன். தர்ஷனும் அங்கு வந்து, நீங்கெல்லாம் கிளம்புங்க, இந்த கல்யாணத்தை பொறுத்தவரைக்கும் எனக்கு முழு சம்மதம் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன சக்தி, இம்புட்டு நாளா என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமாடா... உனக்கு சாப்பாட்டுல கண்ட மருந்து கலந்து கொடுத்திருக்காங்க. அதனால் தான் இத்தனை நாளா பித்து பிடிச்ச மாதிரி கிடந்த, இப்ப தான் கொஞ்சம் தெளிஞ்சிருக்க, நான் உன்கூட இருக்கேன் டா என சக்தி சொன்னதும், எனக்கு யாருமே வேண்டாம் என சொல்கிறார் தர்ஷன்.

34
குணசேகரன் காலில் விழுந்து கெஞ்சிய தர்ஷன்
Image Credit : youtube/suntv

குணசேகரன் காலில் விழுந்து கெஞ்சிய தர்ஷன்

தொடர்ந்து பேசும் தர்ஷன், நான் செய்த தப்புக்கு நான் தான் தண்டனை அனுபவிக்கனும். பார்கவியை காதலிச்சுட்டு காதலிக்கவே இல்லைனு சொல்லிட்டு நான் தான் அன்புவை ஏத்துக்கிட்டேன். திரும்பவும் அதில் இருந்து பின்வாங்கிவிட்டு, திரும்பவும் ஏத்துக்கிட்டேன். நான் ஒரு பைத்தியம். எனக்கு இதுதான் சரியா வரும். நீங்கெல்லாம் கிளம்புங்க என சொன்னதோடு, ஆதி குணசேகரனிடமும் கெஞ்சுகிறார் தர்ஷன். நான் அவர்களை அனுப்பிவிடுகிறேன். அன்புக்கரசி கழுத்திலேயே தாலி கட்டுகிறேன் என சொல்லும் அவர், எனக்காக ஒன்னே ஒன்னு செய்யுங்க, தயவு செஞ்சு பார்கவியை விட்டுறுங்க. ஜீவானந்தம் சாரையும் விட்றுங்க, எங்க அம்மாவையும் விட்றுங்கப்பா என ஆதி குணசேகரன் காலில் விழுந்து கதறுகிறார் தர்ஷன்.

44
மண்டபத்தை விட்டு வெளியேறும் ஜனனி
Image Credit : youtube/suntv

மண்டபத்தை விட்டு வெளியேறும் ஜனனி

இதைப் பார்த்து டென்ஷன் ஆன ஜனனி, அய்யோ தர்ஷா, இப்போ எதுக்கு இவங்கள பார்த்து நீ பயப்படுற. இப்படி மிரட்டி ஒருத்தரை பணியவைக்க முடியாதுங்கிறது எல்லாருக்கும் உரைக்கனும், என்ன ஆனாலும் சரி, நாங்க எல்லாரும் உன்கூட இருக்கோம் என ஜனனி சொன்னாலும், அதை கேட்க மறுக்கும் தர்ஷன், எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம். தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்புங்க என சொல்லிவிடுகிறார் தர்ஷன். இதையடுத்து மண்டபத்தை விட்டு சக்தி மற்றும் ஜனனி ஆகியோர் வெளியேறுகிறார்கள். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Related Stories
Recommended image1
ஜனனியின் ஒட்டுமொத்த பிளானையும் ஒட்டுக்கேட்ட அறிவுக்கரசி... எதிர்நீச்சல் 2 சீரியலில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
Recommended image2
ஜனனி அடித்த அடி... ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்திய பணிக்கர்! எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved