- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பதறிய இசக்கி; ஷண்முகம் சொல்லியும் கேட்காமல் பரணி எடுத்த முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்!
பதறிய இசக்கி; ஷண்முகம் சொல்லியும் கேட்காமல் பரணி எடுத்த முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' சீரியலின் இன்றைய விறுவிறுப்பான எபிசோட் குறித்த அப்டேட் தான் வெளியாகி உள்ளது.

அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட்
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'அண்ணா'. இந்த சீரியலில் நேற்றைய தினம், தங்களின் குழந்தை உயிரை காப்பாற்றிய பரணியை, அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள், நீங்க அமெரிக்காவுக்கு வாங்க உங்க படிப்பு செலவை நாங்க ஏற்றுக்கொள்கிறோம் என சொல்ல, இதனால் சௌந்தரபாண்டி சந்தோஷ படுகிறான். அதே நேரம் ஷண்முகம் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.
பாக்கியத்தின் ஆசை
இப்படியான நிலையில் இணைய தினம், பாக்கியம் சௌந்தரபாண்டியிடம் பரணி ஒன்னும் அமெரிக்காவுக்கு எல்லாம் போக வேண்டாம். இங்கயே இருந்து, நம்ப ஷண்முகதுகூட குடும்பம் நடத்தி ஒரு குழந்தையை பெத்து கொடுக்கட்டும் என்று சொல்கிறார்.
ட்ரோன் மூலம் குழந்தையை காப்பாற்றிய ஷண்முகத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி? 'அண்ணா' சீரியல் அப்டேட்!
குடும்பத்தை பிரிப்பதில் குறியாக இருக்கும் சௌந்தரபாண்டி:
இதை கேட்ட சனியன், சௌந்தரபாண்டியிடன்..." ஐயா நம்ப பரணி அம்மா அமெரிக்கா போகலானா என்ன பண்றது என கேட்க. சௌந்தரபாண்டி கர்வத்தோடு, பரணி அமெரிக்கா போனால் அந்த சண்முகம் குடும்பத்தை பிரிப்பேன். அவ அமெரிக்கா போகலனா அதையே வச்சி அந்த குடும்பத்தை பிரிப்பேன். மொத்தத்துல எது நடந்தாலும் அந்த குடும்பத்தை நிம்மதியா இருக்க விட மாட்டேன். பிரிப்பேன் என நயவஞ்சகத்தோடு பேசுகிறார்.
காயத்தோடு வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி:
இன்னொரு பக்கம் ஷண்முகம் குடும்பத்தினர் சிவராத்திரிக்காக கோவிலுக்கு கிளம்ப, முத்துப்பாண்டி வராததால், இசக்கியும் நானும் வரல என சொல்கிறார். பின்னர் முத்துபாண்டி கையில் காயத்துடன் இருக்க, ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்புகிறார். இதை பார்த்து இசக்கி பதறி போன நிலையில், முத்துபாண்டிக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள்.
பரணி எடுக்க போகும் முடிவு:
சண்முகத்தின் குடும்பம் கோவிலுக்கு போன இடத்தில், 14 வயசு குழந்தை ஒன்று பாட்டு பாட... குழந்தையின் அப்பா இந்த ஊர்ல என் குழந்தையை விட அழகா பாட்டு பாட யாரும் இல்லையா? என நக்கலாக பேசி சவால் விட, பரணி கனியை பாட வைக்க திட்டமிடுகிறாள். ஷண்முகம் கனிக்கு முறையான பயிற்சி இல்லை இதெல்லாம் வேண்டாம் என சொல்லியும் பரணி கனியை பாட வைக்க முடிவு செய்தும் நிலையில், அடுத்தது என்ன நடக்க போகிறது என்பதை அறிய, காத்திருங்கள்.