- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ட்விஸ்ட்? குழந்தை உயிரை பரணி - ஷண்முகம் காப்பாற்ற போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட்!
ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ட்விஸ்ட்? குழந்தை உயிரை பரணி - ஷண்முகம் காப்பாற்ற போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட்!
நேற்றைய தினம் 3 பிரபலங்கள் 'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்க, குழந்தைக்கு உடல் நலம் முடியாமல் போகிறது. இதை தொடர்ந்து இன்று என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அண்ணா சீரியல்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான, அண்ணா சீரியலில், திடீர் என கோவிலில் குழந்தைக்கு வலிப்பு வந்ததால்... அருகே இருக்கும் பரணியின் கிளீனிக்குக்கு அழைத்து கொண்டு ஓடுகிறார் கார் ட்ரைவர். குழந்தையை பரிசோதித்த பரணி, தன்னுடைய பிரபஸருக்கு போன் செய்து பேசிய பின்னர்... இது ஒரு அரிய வகை பாதிப்பு.. இதற்கான மருந்து இங்கு கிடையாது. குழந்தையை காப்பாத்தணும்னா மதுரைக்கு தான் கொண்டு போகணும் என சொல்கிறார்.
மருந்து வாங்க அலைந்து கொண்டிருக்கும் ஷண்முகம்:
இன்னொரு பக்கம், பரணி சொன்ன மருந்தை வாங்க ஷண்முகம், ஒவ்வொரு மெடிக்கல் கடைகளுக்கும் ஏறி இறங்குகிறார். ஆனால் அந்த மருத்து கிடைக்கவில்லை. இங்கே பரிகார பூஜைக்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊரான திருச்செந்தூருக்கு வந்த குடும்பம், குழந்தை மற்றும் தாங்கள் வந்த கார் இல்லை என்பதை பார்த்து கதறி அழ ஆரம்பிக்கின்றனர்.
ரேவதியை பெண் கேட்டு வரும் பரமேஸ்வரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
ஷண்முக பாண்டி காதுக்கு வரும் விஷயம்
அந்த ஊரில் தனக்கு தெரிந்தவரான சௌந்தரபாண்டிக்கு, போனை போட்டு விஷயத்தை சொல்கின்றனர். சௌந்தரபாண்டி, பதட்டத்துடன் நீங்க ஒன்னும் கவலை படாதீங்க, என் மகன் இன்ஸ்பெக்டர் தான். அவன் கிட்ட சொல்லி நான் தேட சொல்கிறேன் என சொல்கிறார். மேலும் வந்தவர் ஆக்டிங் ட்ரைவர் என சொல்லி கார் நம்பர், டிரைவரின் போட்டோ உள்ளிட்ட விஷயங்களை சௌந்தரபாண்டிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ட்ரைவரை கைது செய்ய நடக்கும் சோதனை:
இன்னொரு பக்கம் ஷண்முகம் கடை கடையாக ஏறி இறங்கி கடைசியாக ஒரு கடையில் மருந்து கிடைப்பதால் அதை வாங்கி கொண்டு, குழந்தையை காப்பாற்றியே ஆக வேண்டும் என, பரணி இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அதே போல் குழந்தையை கார் ட்ரைவர் கடத்தி விட்டதாக புகார் வந்ததால், காரை ட்ரைவரை போலீசார் வலைபோட்டு தேடி கொண்டு இருக்கிறார்கள்.
'ஜனநாயகன்' படத்துடன் மோதும் 'பராசக்தி'? இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன்!
ஹாலிவுட் படத்தை மிஞ்சும் ட்விஸ்ட்
மருந்து கிடைத்து விட்டதால், எப்படியும் குழந்தையை காப்பாற்றி விடலாம் என பரணி இருக்க... இங்கு தான் ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய ட்விஸ்ட் ஒன்று நடக்கிறது. ஷண்முகம் மற்றும் பரணி என இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் வர, இடையில் இருக்கும் பாலம் உடைந்து விட்டதாகவும் கார் போக முடியாது எனவும் சொல்கிறார்கள். பாலத்திற்கு ஒரு பக்கம் பரணி இன்னொரு பக்கம் ஷண்முகம் என நிற்கின்றனர். ஷண்முகம் எப்படி தன்னிடம் இருக்கும் மருந்தை கொடுத்து குழந்தையை காப்பாற்ற போகிறார் என, எதிர்பாராத திருப்பதுடன் இன்றை எபிசோட் முடிவடைந்துள்ளது.