- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை கொற்றவை டிராக் பண்ணிய நிலையில், அதற்கு அவர்கள் எஸ்கேப் ஆகி சென்றிருக்கிறார்கள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருக்கும் தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க கொற்றவை முனைப்பு காட்ட, அதை ஏற்க மறுக்கிறார் ஜனனி. பின்னர் சக்தி சொன்னதை அடுத்து மஃப்டியில் சில போலீஸை அனுப்ப சம்மதிக்கிறார் ஜனனி. மறுபுறம் கதிர் போனில் இருந்து நந்தினிக்கு அழைப்பு வந்ததை வைத்து கொற்றவை டிராக் செய்ததில் ஆதி குணசேகரன் சென்னையில் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதையடுத்து போலீஸ் அந்த ஏரியாவுக்கு செல்லும் முன்னரே அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் குணசேகரன்.
எஸ்கேப் ஆகும் ஆதி குணசேகரன்
குணசேகரன் காரில் செல்லும் வழியில் போலீஸ் அவர்களை வழிமறிக்கிறது. அப்போது நீங்க தான் அந்த தேடப்படும் குற்றவாளிகளா என ஒரு போலீஸ் கண்டுபிடித்ததோடு, காரில் இருந்து வெளியே இறங்கி ஆதி குணசேகரன் தலையில் துப்பாக்கியை வைத்து அவரை அழைத்துச் செல்லப்பார்க்கிறார். அப்போது மற்றொரு போலீஸ், இன்னொரு துப்பாக்கியை தன்னுடைய சக போலீஸ் தலையில் வைத்து மிரட்டி குணசேகரனை விடுவிக்க சொல்கிறார். அவர் தனது குடும்பத்துக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாக கூறி ஆதி குணசேகரனை அங்கிருந்து தப்பித்து செல்ல உதவுகிறார்.
ரகசியம் சொல்லும் விசாலாட்சி
மறுபுறம் வீட்டில் தமிழ் சோறு பிசினஸ் திறப்பு விழா நெருங்குவதால், அதற்கான ரெசிபியை தயார் செய்யும் வேலையில் ஜனனி மற்றும் நந்தினி இறங்குகிறார்கள். அப்போது விசாலாட்சியிடம் நீங்க உங்களுக்கு தெரிந்த உணவுகளின் ரகசியத்தை எங்களுக்கு சொல்லுமாறு ஜனனி கேட்க, அதற்கு விசாலாட்சியும் சம்மதிக்கிறார். இதனால் இனிமேல் நீங்களும் எங்கள் பிசினஸ் பார்ட்னர் தான் என நந்தினி கிண்டலடிக்கிறார். இதையெல்லாம் வெளியே இருந்து பார்க்கும் அறிவுக்கரசிக்கு வயிறு எரிகிறது. அவர்களை எப்படி பழிவாங்கலாம் என திட்டம் தீட்டி வருகிறார் அறிவு.
அடுத்த பிளான் என்ன?
போலீஸிடம் இருந்து நைஸாக எஸ்கேப் ஆன ஆதி குணசேகரன், வட இந்தியாவுக்கு தப்பிச் செல்வதாக சொல்லிவிட்டு, திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் தலைமறைவாகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியின் ஃபுட் டிரக் திறப்பு விழாவை தடுக்க ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் என்ன செய்யப்போகிறார்கள்? ஜனனியின் பிசினஸ் வெற்றிகரமாக தொடங்கப்படுமா? ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை கொற்றவை கண்டுபிடித்தாரா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடில் தான் விடை கிடைக்கும்.

