- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிருக்கும் ஞானத்துக்கும் இடையே மோதல் முற்றிப்போய் இருவரும் கைகலப்பில் ஈடுபட அதை ஆதி குணசேகரன் தடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியோடு இணைந்து தமிழ் சோறு பிசினஸை தொடங்க இருக்கிறார். அதை தொடங்கவிடாமல் தடுக்க ஆதி குணசேகரனும் அவருடைய தம்பிகளும் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் அடிச்சு நொறுக்கிவிட்டு ஜனனி முன்னேறி செல்கிறார். தமிழ் சோறு பிசினஸை இழுத்து மூட வைக்க பிளான் போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கதிரும், ஞானமும் திடீரென தங்களுக்குள்ளேயே சண்டைபோட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் ஆதி குணசேகரன் டென்ஷன் ஆகி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அறிவுக்கரசியிடம் இருந்து வந்த போன் கால்
இந்த நிலையில் கதிருக்கு போன் போடும் அறிவுக்கரசி, போனை ஸ்பீக்கரில் போடச் சொல்கிறார். உங்க வீட்டு மருமகள்களை தான் அப்படி புடிச்சிருக்கீங்கனு பார்த்தா, உங்க சம்மந்திகளெல்லாம் ஆத்தாடி ஆத்தா, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறாளுங்க. இங்க உங்க சம்மந்திகள் எல்லாரும் வந்து, அவங்கவங்க பெத்த முத்துக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் பண்ணிகிட்டு இருக்காளுங்க. பார்க்கவே கண்கொல்லா காட்சியா இருக்கு என அறிவுக்கரசி சொல்ல, இதைச் சொல்ல தான் போன் போட்டு கூப்பிட்டியா என கதிர் ரிப்ளை கொடுக்கிறார்.
வீட்டில் நடப்பதை புட்டு புட்டு வைத்த அறிவு
பின்னர் தொடர்ந்து ஆதி குணசேகரனிடம் பேசும் அறிவுக்கரசி, உங்க பட்டணத்து சம்மந்தி வந்து, உங்க அம்மாகிட்ட கொஞ்சிறதும் கொளாவுரதும், எப்பப்பா பார்க்கவே முடியல என சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஆதி குணசேகரன், எது பட்டணத்து சம்மந்தியா... யாரு அந்த நாச்சியப்பன் பொண்டாட்டியா வந்திருக்கா என கேட்க, ஆமா என சொல்கிறார் அறிவு. அவ எதுக்கு இங்க வந்திருக்கா என குணசேகரன் கேட்க, யானை படுத்தா குதிரை மட்டம்... நீங்க கிளம்பி போயிட்டீங்க, இனி இங்க இவளுங்க ராஜாங்கத்தை கட்டி ஆழலாம்னு வந்திருப்பாளுங்க.
இன்னும் திறப்பு விழா அன்னைக்கு பாருங்க, குணசேகரனை விரட்டி அனுப்பிட்டு, இவளுங்க இங்க கொடி நாட்டிட்டாளுங்கனு மதுரையே பேசப்போகுது. அந்த நோக்கத்தோடு தான் எல்லாம் பண்ணிகிட்டு இருக்காளுங்க. நீங்களும் எதுவும் செஞ்சமாதிரி தெரியல, நாளை மறுநாள் திறப்பு விழா வச்சிருக்காங்க. அது கொண்டாட்டமா இருக்க போகுது. நான் உங்க பொறுப்புல விட்டுட்டேன், நீங்க எதாச்சும் செய்யுங்க நான் போனை வைக்குறேன் என கட் பண்ணிவிடுகிறார் அறிவுக்கரசி.
அடித்துக்கொள்ளும் கதிர் - ஞானம்
பின்னர் என்னடா கதிர் இப்படி நடக்குது என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அவர் அண்ணேன் நீங்க கவலைப்படாதீங்க, எதுவும் நடக்காது. எல்லாமே பண்ணியாச்சு என சொல்கிறார். அருகில் இருந்த ஞானம், என்னடா பண்ணுன என கேட்க, அண்ணேன் அதை இவர்கிட்டலாம் சொல்லனும்னு அவசியம் இல்ல, இங்க எல்லாத்தையும் கேட்டுட்டு அங்கபோய் போட்டுகொடுத்தாலும், போட்டுக்கொடுத்திருவான் என கதிர் சொன்னதும், கோபமடைந்த ஞானம் கதிரின் சட்டையை பிடித்து அவனை அடிக்க பாய்கிறார்.
அவர்களை தடுத்து நிறுத்தும் ஆதி குணசேகரன், அவளுங்கள அடிச்சு காலிபண்ண சொன்னா, நீங்க சண்டைபோடுறீங்களே டா என கொந்தளிக்கிறார். இங்க பாரு ஞானம், அவன் என்ன செய்யுறானோ செய்யட்டும், நானும் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். ஆனா, நீ உன் பங்குக்கு அவளுங்கள பலவீனப்படுத்தனும். எப்பா ஞானம் நீ எங்கபக்கம் நிப்பியாப்பா என குணசேகரன் கேட்க, அண்ணேன் நான் உங்க கூட தான அண்ணேன் இருக்கேன் என சொல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

