MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தர்மலிங்கம் ஆசையில் விழுந்த மண்ணு! 'கயல்' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இரண்டு பிரபலங்கள்!

தர்மலிங்கம் ஆசையில் விழுந்த மண்ணு! 'கயல்' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இரண்டு பிரபலங்கள்!

கயல் சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்த்த விதமாக இரண்டு புதிய பிரபலங்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 23 2023, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலில் எழிலின் திருமணம் குறித்த எபிசோட், சுமார் 15 நாட்களுக்கு மேல் ஜவ்வு போல் இழுத்த நிலையில், கயலை திருமணம் செய்து கொள்வார் எழில் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆனந்த் ஆர்த்திக்கு தாலி கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.

24

எனவே தற்காலிகமாக எழில் - கயல் திருமணம் இப்போது நடக்காது என்பது உறுதியானாலும்... கயலின் கழுத்தை அடுத்தடுத்த சில பிரச்சனைகள் நெறிக்க துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தற்போது கயலின் தங்கை ஆனந்தி, எழிலின் தம்பியை கொலை செய்துவிட்டார். இதை மறைப்பதற்காக, இருவரும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். எனினும் இருவரும் இதில் இருந்து தப்பிப்பார்களா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் ஏற்படுமா என்பது சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஜகஜால கில்லாடி! ஒருமுறை... இரண்டு முறை அல்ல! 4 முறை பெயரை மாற்றிய 'ஜெயிலர்' பட ரஜினி மருமகள் மிர்ணா!

34

ஒருவழியாக ஆர்த்தியின் திருமணம் நடந்து முடிந்து விட்ட நிலையில், இந்த திருமணத்தில் தர்மலிக்கத்துக்கு துளியும் விருப்பம் இல்லை. அதே போல் எழிலின் அம்மா சங்கரியும் மகன் மீது கடும் கோபத்தில் உள்ளார். நேற்று கணவரின் கழுத்தை நெரித்து, கொலை செய்ய துணிந்தது எல்லாம் வேற லெவல் என நினைக்க தோன்றியது.

44

இதுநாள் வரை, எழிலின் நண்பன் ஆனந்தை மட்டுமே காட்டப்பட்ட நிலையில்... இவரின் பெற்றோர் கேரக்டர் தான் இப்போது என்ட்ரி ஆகிறார்கள். தர்மலிங்கம் தன்னுடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நிலையில், ஆனந்தின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவர ஒட்டுமொத்த குடும்பமே உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. தர்மலிங்கத்தின் கனவிலும் மண்ணு விழுந்துள்ளது. இரு பிரபலங்களின் என்ட்ரி கொடுத்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அரசுக்கு விரோதமாக செயல்படும் நடிகர் பிரகாஷ்ராஜ் - பாபி சிம்ஹா! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கயல் (தொலைக்காட்சித் தொடர்)
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Recommended image3
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved