ஜகஜால கில்லாடி! ஒருமுறை... இரண்டு முறை அல்ல! 4 முறை பெயரை மாற்றிய 'ஜெயிலர்' பட ரஜினி மருமகள் மிர்ணா!
'ஜெயிலர்' படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள, நடிகை மிர்ணா மேனன்... 4 முறை தன்னுடைய பெயரை மாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'ஜெயிலர்' படத்தில் நடித்த பின்னர், நடிகை மிர்ணாவை பற்றிய பல சர்ச்சைகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய இவர், இதை தொடர்ந்து ஒருவரின் வாழ்நாள் அடையாளமாக பார்க்கப்படும் அவரின் பெயரையே நான்கு முறை மாற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்து பைக்கிலியான மிர்ணா, பிறந்து - வளர்ந்தது எல்லாம் இடுக்கி மாவட்டத்தில் தான். இவரின் சொந்த பெயர் ஆதிரா சந்தோஷ். நடிக்க வாய்ப்பு தேடிய போது, சில மலையாள தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அப்போது... பெயர் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் சாய்னா சந்தோஷ் என மாற்றிக்கொண்டார்.
மலையாள சீரியல்களில் வில்லி வேடத்தில் நடிக்க துவங்கிய இவர்... சில காதல் கிசுகிசுவில் சிக்கி பிரச்சனை ஆனது. எனவே மலையாளத்தில் இருந்து விலகி தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேட துவங்கினார். தமிழ் படங்களில் நடிக்கும் போது அதிதி மேனன் என்று பெயரை மாற்றினார். இந்த பெயரில் தான் இவர், 'நெடுநல்வாடை' படத்தில் அறிமுகமானார். பின்னர் இயக்குனர் தன்னிடம் அத்துமீறியதாக அலப்பறை செய்து, தற்கொலை வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பட்டதாரி என்ற படத்தில் இளம் நடிகர் அபி சரவணனுடன், ஜோடி சேர்ந்து நடித்தார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அபி சரவணனை காதலித்து, மணமுடித்து ஜோடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய படங்களைக் காட்டிலும் பட்டதாரி படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்று தந்தது. பின்பு தினேஷுடன் களவானி மாப்பிள்ளை என்னும் படத்தில் அதிதிமேனன் நடித்தார்.
ஜீவானந்தத்தின் மறுபக்கத்தை கூறிய ஜனனி..! மனம் உடைந்த ஈஸ்வரி..? முன்னாள் காதலன் பற்றி வாய்திறப்பாரா!
அபியை திருமணம் செய்து கொண்டு, பின்னர் கள்ளக்காதலனுடன் ஜூட் விட்ட அதிதி... மீண்டும் திரையுலகில் அதிதி என்கிற தன்னுடைய அடையாளத்தை மறைக்க, தற்போது மிர்ணா மேனன் என்கிற பெயரில் களமிறங்கி உள்ளார். சமீபத்தில் இவர் ஆஹா ஓடிடி தளத்தில் நடித்த, புர்க்கா என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்துள்ள நிலையில்... அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்காமல், மீண்டும் பெயரை மாற்றாமல் தமிழ் சினிமாவில் மிர்ணா மிளிர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.