அரசுக்கு விரோதமாக செயல்படும் நடிகர் பிரகாஷ்ராஜ் - பாபி சிம்ஹா! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு!
நடிகர் பிரகாஷ்ராஜ், மற்றும் நடிகர் பாபி சிம்ஹா சட்டத்திற்கு விரோதமாக பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை , வனத்துறை , தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர் .
கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர் . தொடர்ந்து மலைப்பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேல்மலை மலை கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் செய்தும் கீழ் மலை கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தெரித்தனர் . இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேத்துப்பாறை பகுதி ஊராட்சி தலைவர் மகேந்திரன் பேசுகையில் : வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாகவும் , மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் , குற்றம் சாட்டினர்.
ஜீவானந்தத்தின் மறுபக்கத்தை கூறிய ஜனனி..! மனம் உடைந்த ஈஸ்வரி..? முன்னாள் காதலன் பற்றி வாய்திறப்பாரா!
இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் நீர் பிடிப்பு பகுதி கட்டிடம் கட்டி வருவதாகவும்,மின் இணைப்பு அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி பெறாமலே கட்டிடங்கள் கட்டுவதாகும், அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது . சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார். பிரபல நடிகர்கள் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார்! பிரபல நடிகை மீது கணவர் பகீர் குற்றச்சாட்டு!
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்?
சந்திரனையில் விக்ரம் லாண்டரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சை ஓய்வதற்கு முன்னதாகவே ... கொடைக்கானல் பேத்துப்பாறையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கட்டிடங்கள் கட்டி வரும் இடத்திற்கு பொதுப்பாதையில் தனது சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். தற்போது பாதையில் வேலை முடிந்த நிலையில் அந்தப் பொது பாதையை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்து நடிகர் பிரகாஷ்ராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து! புதிய கார் வாங்கி பூஜை போட்ட சம்யுக்தாவின் ஆக்ரோஷ பதிவு!
இது குறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா பேசுகையில், நடிகர்கள் அனுமதியின்றி கட்டிடம் கட்டுவதாக விவசாயிகள் தரப்பில் பேசப்பட்டுள்ளது. இது குறித்து நாங்களும் முறையாக நில அளவையர் மற்றும் அரசுத்துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகு தான் முழுமையாக தகவல் அளிக்கப்படும். மேலும் இந்த புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அந்த ஆக்கிரமிப்புகள் நிச்சயமாக அகற்றப்படும் என தெரிவித்தார்.