- Home
- டெக்னாலஜி
- Budget Smartphones 2026: ரூ.10,000-க்குள் 50MP கேமரா, பவர்ஃபுல் பேட்டரி! டாப் 5 போன் லிஸ்ட் இதோ!
Budget Smartphones 2026: ரூ.10,000-க்குள் 50MP கேமரா, பவர்ஃபுல் பேட்டரி! டாப் 5 போன் லிஸ்ட் இதோ!
Budget Smartphones 2026: பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திவிட்டன. ஆனாலும், ரூ.10,000 பட்ஜெட்டில் 50MP கேமரா, பெரிய பேட்டரி என அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்ககள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.10,000-க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
மார்க்கெட்டில் மொபைல் போன்களின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் அதிக அம்சங்கள் கொண்ட சிறந்த போனைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய டாஸ்க் ஆகிவிட்டது. ஆனால், உங்கள் பட்ஜெட் கொஞ்சம் டைட்டாக இருந்தாலும், தினசரி பயன்பாட்டிற்குத் தேவையான அற்புதமான அம்சங்களை வழங்கும் பிராண்டுகள் சந்தையில் இன்னும் இருக்கின்றன.
நீங்கள் ஆன்லைன் வகுப்புகள் கேட்பதற்கோ, சோஷியல் மீடியாவில் ஸ்க்ரோல் செய்வதற்கோ, அல்லது நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் பார்ப்பதற்கோ இந்த போன்கள் ஒரு சரியான சாய்ஸ். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இந்த போன்கள் மதிப்பு சேர்க்கும். ரூ.10,000-க்குள் பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ், அசத்தலான பேட்டரி லைஃப், சூப்பர் கேமராக்கள் மற்றும் நவீன அம்சங்களுடன் கிடைக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றிப் பார்க்கலாம்.
மோட்டோரோலா மோட்டோ G05 (Motorola Moto G05)
பட்ஜெட் விலையில் மோட்டோரோலா மோட்டோ G05 ஒரு சூப்பர் ஆப்ஷன் என்று சொல்லலாம். இந்த போனில் 6.67 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதனால் போனை பயன்படுத்தும்போது ஸ்க்ரோலிங் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். கேமராவைப் பொறுத்தவரை, பின் பக்கம் 50MP பிரைமரி கேமராவும், செல்ஃபிக்காக 8MP முன்பக்க கேமராவும் உள்ளன. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ G81 அல்ட்ரா பிராசஸரை பயன்படுத்தியுள்ளனர். இது உங்கள் தினசரி டாஸ்க்குகளை எந்த லேக்கும் இல்லாமல் எளிதாக நிர்வகிக்கும். Motorola Moto G05 விலை: ரூ. 7,299
சாம்சங் கேலக்ஸி F05 (Samsung Galaxy F05)
நீங்கள் பிராண்ட் வேல்யூ பார்ப்பவராக இருந்தால், சாம்சங்கின் கேலக்ஸி F05 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் 6.74 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் கிடைக்கிறது. போட்டோக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமராவை வழங்கியுள்ளனர். இந்த டிவைஸ் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸரில் இயங்குகிறது. அதுமட்டுமின்றி, இதில் 5,000mAh பெரிய பேட்டரி உள்ளது. எனவே, ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் ஹேப்பியாக பயன்படுத்தலாம். Samsung Galaxy F05 விலை: ரூ. 6,499
ரெட்மி A5 4G (Redmi A5 4G)
தினசரி வேலைகளை எளிமையாக கையாளும் நம்பகமான போன் வேண்டுமென்றால், ரெட்மி A5 4G-ஐ பார்க்கலாம். இந்த போன் 6.8 இன்ச் பெரிய ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பெரிய ஸ்கிரீன் விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இதில் 32MP மெயின் கேமராவும், செல்ஃபிக்காக 8MP கேமராவும் உள்ளன. இதில் உள்ள யுனிசோக் T7250 பிராசஸர், ஹெவி கேமிங்கிற்கு இல்லாவிட்டாலும், பேசிக் ஆப்ஸ், சாட்டிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவற்றுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும். Redmi A5 4G விலை: ரூ. 7,999
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஹெச்டி (Infinix Smart 8 HD)
பட்ஜெட் ஃப்ரெண்ட்லி மொபைல்கள் என்றாலே இன்ஃபினிக்ஸ் எப்போதுமே போட்டியில் முன்னணியில் இருக்கும். இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 HD போன் 6.6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த விலை வரம்பில் யாரும் எதிர்பாராத வகையில் 90Hz ஸ்லிக் ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்திருப்பது ஒரு சிறப்பு. இதனால் போன் ஸ்கிரீன் மிகவும் ஸ்மூத்தாக இயங்கும். இதில் 13MP மெயின் கேமராவும், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன. யுனிசோக் T606 பிராசஸரில்இந்த போன், 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. எனவே, அடிக்கடி சார்ஜர் தேட வேண்டிய அவசியம் இருக்காது. Infinix Smart 8 HD விலை: ரூ. 6,699
ஐடெல் ஜெனோ 20 மேக்ஸ் (Itel Zeno 20 Max)
வெறும் பேசிக் அம்சங்கள் குறைந்த விலையில் வேண்டுமென்றால் ஐடெல் ஜெனோ 20 மேக்ஸ் போனைப் பார்க்கலாம். இந்த டிவைஸ் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் பின்புறம் டூயல் கேமரா அமைப்புடன் 13MP மெயின் கேமரா உள்ளது. அதேபோல், முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யுனிசோக் T7100 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் சோஷியல் மீடியா கணக்குகளை பிரவுஸ் செய்வதற்கும், வீடியோக்களைப் பார்ப்பதற்கும் நன்றாகப் பொருந்தும். itel Zeno 20 Max விலை: ரூ. 6,999
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

