MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • வாட்டர் ஹீட்டர் வாங்க போறீங்களா? டாப் 5 லோ-வால்டேஜ் வாட்டர் ஹீட்டர்கள்; செக் பண்னுங்க!

வாட்டர் ஹீட்டர் வாங்க போறீங்களா? டாப் 5 லோ-வால்டேஜ் வாட்டர் ஹீட்டர்கள்; செக் பண்னுங்க!

உங்கள் வீட்டிற்கு எந்த வாட்டர் ஹீட்டர் சிறந்தது? கடின நீரையும் தாங்கும் டாப் 5 கீசர்களின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் மின்சேமிப்பு விவரங்களை பற்றி பார்போம்.

3 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 14 2026, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குறைந்த விலையில் சிறந்த வாட்டர் ஹீட்டர்
Image Credit : Gemini

குறைந்த விலையில் சிறந்த வாட்டர் ஹீட்டர்

இந்தியாவில் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் சிறந்த 5 வாட்டர் ஹீட்டர்கள் பற்றிய விரிவான வழிகாட்டி இதுவாகும். குறைந்த மின்சார நுகர்வு மற்றும் கடின நீர் பாதுகாப்பைக் கொண்ட Crompton Arno Neo டிஜிட்டல் திரையுடன் கூடிய V-Guard Divino DG, நிறம் மாறும் எல்இடி விளக்குகள் கொண்ட Havells Instanio Prime அதிர்ச்சி தாங்கா ஷாக்ப்ரூஃப் தொழில்நுட்பம் கொண்ட Haier Aqualis மற்றும் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற 25L கொள்ளளவு கொண்ட Havells Velora+ ஆகிய மாடல்களின் விலை, தொழில்நுட்ப வசதிகள், உத்திரவாதம் மற்றும் பயன்பாட்டு நன்மைகள் விரிவாக பார்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கிராம்ப்டன் ஆர்னோ நியோ 15L
Image Credit : X

கிராம்ப்டன் ஆர்னோ நியோ 15L

சந்தை விலை - ரூ.5,899 முதல் ரூ.6,899 வரை

கொள்திறன் - 15 லிட்டர் (10L மற்றும் 25L மாடல்களிலும் கிடைக்கும்)

மின் நுகர்வு - 2000 Watts (BEE 5-நட்சத்திர மின்சேமிப்பு)

கடின நீர் பாதுகாப்பு (Hard Water Protection) - இதில் உள்ள பிரத்யேக 'மெக்னீசியம் ஆனோடு' (Magnesium Anode) உப்பு நீரினால் டேங்க் துருப்பிடிப்பதைத் தடுக்கிறது. உயர் அழுத்தத் திறன் - 8-பார் (8-bar) நீர் அழுத்தத்தைத் தாங்கக்கூடியது. இதனால் 20-30 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எளிதாகப் பொருந்தும்.

3-அடுக்கு பாதுகாப்பு - கேபிலரி தெர்மோஸ்டாட் (Capillary Thermostat), தெர்மல் கட்-அவுட் மற்றும் மல்டி-ஃபங்ஷன் வால்வு என முழுமையான பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் அதிக ஆயுள் மற்றும் சேமிப்பை எதிர்பார்க்கும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றது..

36
வி-கார்ட் டிவினோ டிஜி 15L
Image Credit : X

வி-கார்ட் டிவினோ டிஜி 15L

சந்தை விலை - ரூ.7,199 முதல் ரூ.7,799 வரை

கொள்திறன் - 15 லிட்டர்

மின் நுகர்வு - 2000 Watts (BEE 5-நட்சத்திர ரேட்டிங்)

டிஜிட்டல் டிஸ்ப்ளே - வெதுவெதுப்பான நீரின் துல்லியமான வெப்பநிலையைக் காட்டும் எல்.இ.டி திரை (LED Display) மற்றும் அட்ஜஸ்ட் செய்யும் நாப் (Knob) கொண்டது. டைட்டானியம் எனாமல் கோட்டிங் - உட்புற டேங்கில் டைட்டானியம் பூச்சு உள்ளதால் கடின நீர், துரு மற்றும் அரிப்பிலிருந்து டேங்கிற்கு நீண்ட ஆயுளைத் தருகிறது.

உயர் வெப்பத் தக்கவைப்பு - இதிலுள்ள PUF இன்சுலேஷன், சுடவைக்கப்பட்ட நீரின் வெப்பத்தை நீண்ட நேரம் வைத்திருக்க உதவுவதால் மின் கட்டணம் குறையும். நீரின் வெப்பநிலையைத் துல்லியமாக அறிந்து பயன்படுத்த விரும்பும் நவீன பாத்ரூம்களுக்கு ஏற்றது..

46
ஹேவெல்ஸ் இன்ஸ்டானியோ பிரைம் 15L
Image Credit : X

ஹேவெல்ஸ் இன்ஸ்டானியோ பிரைம் 15L

சந்தை விலை - ரூ.7,390 முதல் ரூ.7,899 வரை

கொள்திறன் - 15 லிட்டர்

மின் நுகர்வு - 2000 Watts

நிறம் மாறும் LED இன்டிகேட்டர் - நீர் சூடாகும் நிலைக்கு ஏற்ப நீல நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறும் எல்இடி விளக்குகள். இன்கோலாய் கிளாஸ் கோட்டெட் ஹீட்டிங் எலிமென்ட் - உயர்தர வெப்பமூட்டும் கம்பி என்பதால் மிக விரைவாக நீரைச் சூடாக்கும்.

அல்ட்ரா திக் ஸ்டீல் டேங்க் - தடிமனான பிளேட்டுகளால் செய்யப்பட்ட டேங்க் என்பதால் அதிக நீர் அழுத்தத்தையும் அரிப்பையும் சிறப்பாகத் தாங்கும். விரைவாக நீர் சூடாக வேண்டும் மற்றும் பிரீமியம் டிசைன் எதிர்பார்க்கும் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்றது..

56
ஹையர் அக்வாலிஸ் 15L
Image Credit : X

ஹையர் அக்வாலிஸ் 15L

சந்தை விலை - ரூ.9,149 முதல் ரூ.9,990 வரை

கொள்திறன் - 15 லிட்டர் (உடன் இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் இணைப்பு குழாய்கள் வழங்கப்படுகின்றன)

மின் நுகர்வு - 2200 Watts (2.2kW Fast Heating)

ஷாஷ்ப்ரூஃப் தொழில்நுட்பம் - வீட்டின் எர்திங் (Earthing) சரியாக இல்லாத சூழலிலும் மின் கசிவால் ஷாக் அடிப்பதைத் தடுக்கும் காப்புரிமை பெற்ற பாதுகாப்பு அம்சம். BPS பாக்டீரியா எதிர்ப்பு வசதி - அதிக வெப்பநிலைக்கு நீரைச் சூடேற்றி, நீரில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து சுத்தமான நீரைத் தருகிறது.

கிளாஸ்லைன் டேங்க் - 7 ஆண்டுகள் டேங்க் வாரண்டி மற்றும் 4 ஆண்டுகள் தயாரிப்பு வாரண்டியுடன் வருகிறது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ள வீடுகளில் கூடுதல் மின்-பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றது.

66
ஹேவெல்ஸ் வெலோரா+ 25L
Image Credit : X

ஹேவெல்ஸ் வெலோரா+ 25L

சந்தை விலை - ரூ.10,980 முதல் ரூ.11,490 வரை

கொள்திறன் - 25 லிட்டர் (பெரிய கொள்ளளவு)

மின் நுகர்வு - இரட்டை ஹீட்டிங் எலிமென்ட் (Dual Heating Element)

33% அதிவேக சூடேற்றம் - 2 வெப்பமூட்டும் கம்பிகள் இருப்பதால் வழக்கமான கீசர்களை விட 33% அதிவேகமாக நீரைச் சூடாக்கும். 3-இன்-1 கன்வெர்ட்டிபிள் மாடல் - தேவைக்கேற்ப மின் நுகர்வை மாற்றியமைத்துக் கொள்ளும் தொழில்நுட்பம்.

25L பெரிய டேங்க் - ஒரே நேரத்தில் 3 முதல் 5 பேர் வரை அடுத்தடுத்து குளிப்பதற்கு ஏற்ற பெரிய கொள்ளளவு. 4-6 உறுப்பினர்கள் கொண்ட பெரிய குடும்பங்களுக்கும், ஒரே நேரத்தில் அதிக சுடுநீர் தேவைப்படுபவர்களுக்கும் ஏற்றது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
7000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்ஸில் மாஸ் காட்டும் மோட்டோரோலா 5ஜி போன்!
Recommended image2
ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!
Recommended image3
வெறும் ரூ.1,500 தான் பட்ஜெட்டா? தரமான TWS இயர்பட்ஸ் வாங்க இந்த 7 விஷயங்களை முதல்ல செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
7000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்ஸில் மாஸ் காட்டும் மோட்டோரோலா 5ஜி போன்!
Recommended image2
ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved