MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!

ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய UIDAI புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. எழுத்துப்பிழை, திருமணத்திற்குப் பிந்தைய மாற்றம் மற்றும் தேவையான ஆவணங்களின் முழு விவரங்களை இங்கே படியுங்கள்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 14 2026, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்?
Image Credit : X @UIDAI

ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்?

2010 காலகட்டத்தில் ஆதார் அட்டை அறிமுகமானபோது, எங்கும் ஆதார்... எதிலும் ஆதார் என்ற நிலை உருவாகும் என்று யாருமே கற்பனை செய்திருக்க மாட்டோம். அப்போது ஆதார் எடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, அதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பதில் நாம் காட்டத் தவறிவிட்டோம். இன்றும் பலரிடம் எழுத்துப்பிழைகள் நிறைந்த, பல ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாத ஆதார் அட்டைகளே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் தற்போதைய சூழலில் பள்ளி சேர்க்கை, வங்கிக் கணக்கு முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை எல்லாவற்றிற்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது. முகத்தோற்ற மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றால் பெரியவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும். அவசரத் தேவைகளின் போது தவறான தரவுகள் உள்ள ஆதார் அட்டை நம்மைச் சிக்கலில் தள்ளிவிடக்கூடும். குறிப்பாக, ஆதார் அட்டையில் பெயர் எவ்வாறு இடம்பெற வேண்டும், எழுத்துப்பிழைகளை எவ்வாறு திருத்த வேண்டும் என்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆதார் அட்டையில் பெயர் எப்படி இடம்பெற வேண்டும்?
Image Credit : our own

ஆதார் அட்டையில் பெயர் எப்படி இடம்பெற வேண்டும்?

ஆதார் அட்டையில் பெயர் கட்டாயமாக 'பிளாக்' (Block letters) எழுத்துகளில் மட்டுமே இடம்பெற வேண்டும். பெயருடன் சேர்த்து திரு, திருமதி, செல்வி, டாக்டர், பேராசிரியர், கலெக்டர் போன்ற எந்தவொரு முன்னொட்டுகளோ, பட்டங்களோ அல்லது கூடுதல் தகவல்களோ இடம்பெற முடியாது.

ஆதார் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) ஒழுங்குமுறைகள், 2016-ன் ஒழுங்குமுறை 19-ன் கீழ் சமர்ப்பிக்கப்படும் பிரிவு 2 ஆவணங்களின்படியே பெயர் அச்சிடப்படும். எழுத்துகள், பெயரின் விரிவாக்கம், முதல் பெயர் (First Name), இடைப்பெயர் (Middle Name), இறுதிப்பெயர் (Last Name) ஆகிய அனைத்தும் ஆவணங்களில் உள்ள வரிசையிலேயே துல்லியமாக இடம்பெறும்.

34
வழிகாட்டுதல்கள் & தேவைப்படும் ஆவணங்கள்
Image Credit : our own

வழிகாட்டுதல்கள் & தேவைப்படும் ஆவணங்கள்

ஆதாரில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள், இனிஷியல் சுருக்கம், இடைப்பெயர் அல்லது இறுதிப்பெயர் நீக்கம் போன்ற திருத்தங்களுக்கு முறையான அடையாளச் சான்று (POI) போதுமானது. 18 வயதுக்குக் குறைவான நபர்களுக்கு அடையாளச் சான்றுடன் சேர்த்து, உறவுமுறைச் சான்றும் (Proof of Relationship) சமர்ப்பிக்கப்பட வேண்டும். உள்ளூர் மொழியில் உள்ள பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமெனில், சமர்ப்பிக்கப்படும் அடையாளச் சான்றின் அடிப்படையில் அது மாற்றப்படும்.

திருமணத்திற்குப் பின்னரோ அல்லது விவாகரத்திற்குப் பின்னரோ பெயர் மாற்றம் செய்ய அடையாளச் சான்றுடன், ‘இணைப்பு D’ (Annexure D) உறுதிமொழிப் பத்திரத்தையும் கட்டாயம் இணைக்க வேண்டும். பாலின மாற்றத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்ய அதற்கான குறிப்பிட்ட அடையாளச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள பெயரை முழுமையாக மாற்ற விரும்பினால், வழக்கமான அடையாள ஆவணங்களுடன் அரசிதழ் அறிவிப்பு (Gazette Notification) கட்டாயம் தேவை.

44
எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?
Image Credit : UIDAI

எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?

UIDAI வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, வாழ்நாளில் ஆதார் அட்டையில் பெயரை 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். பாலினத்தை 1 முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். எனவே, ஏதேனும் அவசர சூழலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, இப்போதே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் ரூ.1,500 தான் பட்ஜெட்டா? தரமான TWS இயர்பட்ஸ் வாங்க இந்த 7 விஷயங்களை முதல்ல செக் பண்ணுங்க!
Recommended image2
BSNL Update: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு செம ஆப்பு.. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image3
Jio AI Glasses: கண்ணாடியை போடுங்க, QR கோட் பாருங்க, பேமெண்ட் பண்ணுங்க! ஜியோ AI கிளாஸின் ஸ்பெஷல் என்ன?
Related Stories
Recommended image1
4K குவாலிட்டி, 50 இன்ச் ஸ்கிரீன்... ரூ.25,000-க்குள் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் டிவிகள்!
Recommended image2
வெறும் ரூ.1,500 தான் பட்ஜெட்டா? தரமான TWS இயர்பட்ஸ் வாங்க இந்த 7 விஷயங்களை முதல்ல செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved