MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 7000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்ஸில் மாஸ் காட்டும் மோட்டோரோலா 5ஜி போன்!

7000mAh பேட்டரி, 50MP சோனி கேமரா: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்ஸில் மாஸ் காட்டும் மோட்டோரோலா 5ஜி போன்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 விற்பனையில் மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் 49% தள்ளுபடியுடன் ரூ.19,005 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 14 2026, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
49% ஆஃபரில் மோட்டோ 5 ஜி ஸ்மார்ட்போன்
Image Credit : X

49% ஆஃபரில் மோட்டோ 5-ஜி ஸ்மார்ட்போன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 (Flipkart Big Billion Days 2026) விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன.‌ இதில் மோட்டோரோலா ஜி77 பவர் (Motorola g77 Power) ஸ்மார்ட் போன் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 49% தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே ரூ.21,249 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,244 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,005 விலையில் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மோட்டோரோலா ஜி77 பவர் அம்சங்கள்
Image Credit : X

மோட்டோரோலா ஜி77 பவர் அம்சங்கள்

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் ஆக்டா கோர் சிப்செட் (MediaTek Dimensity 6400 6nm Octa Core) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) உடன் இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

2400 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பீச்சர்கள் இதில் உள்ளன. குறிப்பாக, டிஸ்பிளே புரொடெக்சன் கொடுக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) அப்டேட்டையும் பெற முடியும்.

34
கேமரா குவாலிட்டி & பேட்டரி
Image Credit : X

கேமரா குவாலிட்டி & பேட்டரி

கேமராவைப் பொறுத்தவரை, சோனி லைட்டியா 600 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 2-இன்-1 லைட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 2K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, 7000mAh பேட்டரி மற்றும் 30W டர்போபவர் சார்ஜிங் (TurboPower Charging) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி வசதியை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. இந்த மாடல் 8.89 மிமீ தடிமன் மற்றும் 215 கிராம் எடை கொண்டுள்ளது.

மற்ற பீச்சர்களை பொறுத்தவரை, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோட்டோரோலா ஜி77 பவர் ஸ்மார்ட்போன் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும், MIL-STD-810H சர்டிபிகேஷன் மூலம் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

44
கலர் ஆப்ஷன்கள்
Image Credit : X

கலர் ஆப்ஷன்கள்

இம்பெனிட்ரேபிள் (Impenetrable), நாட்டிகல் ப்ளூ (Nautical Blue) மற்றும் ஃபியூஷியா ரெட் (Fuchsia Red) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் கேமரா அவுட்புட் மட்டுமல்லாமல், கூடவே கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பேட்டரி சிஸ்டம் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த மோட்டோரோலா ஜி77 பவர் பக்காவாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!
Recommended image2
வெறும் ரூ.1,500 தான் பட்ஜெட்டா? தரமான TWS இயர்பட்ஸ் வாங்க இந்த 7 விஷயங்களை முதல்ல செக் பண்ணுங்க!
Recommended image3
BSNL Update: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு செம ஆப்பு.. பிஎஸ்என்எல் பயனர்களுக்கு குட் நியூஸ்!
Related Stories
Recommended image1
ஆதார் கார்டில் உங்க பெயர் 'எப்படி' இருக்க வேண்டும்? UIDAI-ன் புதிய விதிகள், பெயர் மாற்ற நடைமுறைகள்!
Recommended image2
வெறும் ரூ.1,500 தான் பட்ஜெட்டா? தரமான TWS இயர்பட்ஸ் வாங்க இந்த 7 விஷயங்களை முதல்ல செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved