- Home
- டெக்னாலஜி
- Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரண்: டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் இதோ!
Safety Gadgets: தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் அரணாக விளங்கும் டாப் 4 பாதுகாப்பு கேட்ஜெட்டுகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலே போய் அனைத்து துறைகளிலும் அசத்தி வருகின்றனர். கல்வி, வேலை, தொழில் மற்றும் சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக இந்தியப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், எதிர்பாராத சூழல்களை எதிர்கொள்ள கூடுதல் தயாரிப்புடன் இருப்பது எப்போதும் நல்லது.
அவசர காலத்தில் பதற்றத்தில் இருக்கும்போது, சிக்கலான தொழில்நுட்பங்களை விட கையாளுவதற்கு எளிமையாக இருக்கும் கேட்ஜெட்டுகளே சிறந்த பலனைத் தரும். அந்த வகையில், பெண் பயணிகள் தங்களின் பாதுகாப்பிற்காக வைத்திருக்க வேண்டிய 4 முக்கிய கேட்ஜெட்டுகள் மற்றும் சில அவசியமான பழக்கவழக்கங்கள் இதோ:

பெர்சனல் சேஃப்டி அலாரம் (Personal Safety Alarm)
இது அளவில் சிறியது, ஆனால் ஆபத்து காலங்களில் மிகப்பெரிய உதவியை செய்யக்கூடியது. இந்த அலாரத்தில் இருக்கும் ஒரு சிறிய பின்னை இழுத்தாலோ அல்லது பட்டனை அழுத்தினாலோ, அது உடனடியாக மிக உரத்த சத்தத்தை எழுப்ப தொடங்கும். சுற்றியிருப்பவர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கவும், அச்சுறுத்தும் நபர்களைத் திசைதிருப்பவும் இது உதவும். இதை பயன்படுத்த எந்தவிதப் பயிற்சியோ அல்லது உடல் வலிமையோ தேவையில்லை.
ஸ்மார்ட் டிராக்கர்கள் (Smart Trackers)
சிறிய அளவிலான ஸ்மார்ட் டிராக்கர்களை உங்களது பைகள், பர்ஸ் அல்லது சாவிக்கொத்துகளுடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களது தற்போதைய இருப்பிடத்தை (Live Location) குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும். புதிய இடங்களுக்குச் செல்லும்போது அல்லது நீண்ட தூரப் பயணங்களின் போது, நீங்கள் பாதுகாப்பான பாதையில்தான் செல்கிறீர்கள் என்பதை உங்களைச் சார்ந்தவர்கள் கண்காணிக்க இது பெரிதும் உதவும்.
எமர்ஜென்சி லைட் கொண்ட பவர் பேங்க் (Power Bank with Flashlight)
இன்றைய சூழலில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு ஸ்மார்ட்போன் தான் மிக முக்கிய வழிகாட்டி. கூகுள் மேப்ஸ், ஆன்லைன் பேமெண்ட், கேப் (Cab) புக் செய்வது, அவசர எண்களைத் தொடர்புகொள்வது என அனைத்திற்கும் மொபைல் போன் தேவைப்படுகிறது. பயணத்தின் போது போனின் சார்ஜ் தீர்ந்துவிட்டால் ஒட்டுமொத்தத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிடும். எனவே, நல்ல தரமான பவர் பேங்க் வைத்திருப்பது அவசியம். டார்ச் லைட் (வசதி கொண்ட பவர் பேங்க்குகளைத் தேர்வு செய்வது, இரவு நேரப் பயணங்களின் போதும், மின்சாரம் இல்லாத சூழலிலும் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.
அணியக்கூடிய பாதுகாப்பு சாதனங்கள் (Wearable Safety Devices)
ஸ்மார்ட் பேண்ட்கள் (Smart Bands), மோதிரங்கள் அல்லது கழுத்தில் அணியும் டாலர்கள் போன்ற வடிவிலான கேட்ஜெட்டுகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. அவசர காலத்தில் பைக்குள் இருக்கும் மொபைலைத் தேடி எடுப்பது கடினம். ஆனால், கைகளிலோ அல்லது கழுத்திலோ இருக்கும் இந்தச் சாதனங்களில் உள்ள SOS பட்டனைத் தட்டுவதன் மூலம், நொடிப் பொழுதில் உங்களது இருப்பிடத் தகவல் உங்களது நெருங்கியவர்களுக்குச் சென்றுவிடும்.
கேட்ஜெட்டுகள் நமக்கு உதவிகரமாக இருந்தாலும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'Emergency SOS' அம்சத்தை எப்போதும் ஆன் செய்து வையுங்கள். இரவு நேரங்களில் பயணிக்கும் போது உங்களது Live Location-ஐ நம்பிக்கையான நபர்களுக்குப் பகிருங்கள். பாதுகாப்பு கேட்ஜெட்டுகளை சூட்கேஸின் அடியில் வைக்காமல், ஆபத்து நேரத்தில் சட்டென்று எடுக்கும் தூரத்தில் (கைப்பை அல்லது பாக்கெட்டுகளில்) வையுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

