- Home
- டெக்னாலஜி
- Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன் களமிறங்க உள்ளது. இந்த போனின் சிறப்பம்சஙகள் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

ஹானர் ரோபோட் போன்
ஹானர் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கான்செப்ட் ஸ்மார்ட்போனான 'ஹானர் ரோபோட் போன்' மாடலை 2026-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்குள் இந்த போன் உலக சந்தைகளுக்கு வரும். பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஹானர் நிறுவனத்தின் சிஇஓ லி ஜெயின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சினிமா தரத்திலான ஒரு மொபைல் போட்டோகிராபி அனுபவத்தை கொடுப்பதே தங்கள் நோக்கம் என்றும் அவர் கூறினார். இந்த போனின் முன்னோட்டத்தை, இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியிலேயே ஹானர் நிறுவனம் காட்டியிருந்தது.

தானாக சுத்தும் கேமரா
சாதாரண ஸ்மார்ட்போன்களில் இல்லாத ஒரு வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டிருப்பதுதான் இந்த ஹானர் ரோபோட் போனின் மிகப்பெரிய ஸ்பெஷல். போனின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரோபோட்டிக் கிம்பல் கேமரா, தானாகவே அசைந்து வீடியோக்களை படம்பிடிக்கும். இதனால், புரொபஷனல் கேமராக்களில் கிடைப்பது போன்ற மிகத் தெளிவான, ஷேக் ஆகாத வீடியோக்களை எடுக்க முடியும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த மெக்கானிக்கல் கிம்பல் அமைப்பில் ஹானர் நிறுவனம் 200 மெகாபிக்சல் (200MP) அல்ட்ரா-ஹை-ரெசல்யூஷன் சென்சாரைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது சினிமா தரத்திலான கிரிஸ்ப் (Crisp) காட்சிகளை வழங்கும்.
AI சப்ஜெக்ட் டிராக்கிங் அம்சம்
இதில் மூன்று-ஆக்சிஸ் மெக்கானிக்கல் கிம்பல் ஸ்டெபிலைசேஷன் சிஸ்டத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஸ்டெபிலைசேஷன் இன்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், பயனரின் அசைவுகளை உடனுக்குடன் கண்டறிந்து, அதற்கேற்ப கேமராவை சரிசெய்ய உதவும். மேலும், இதில் உள்ள AI சப்ஜெக்ட் டிராக்கிங் அம்சம், ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை முன்கூட்டியே கணித்து, கேமராவை தானாகவே அந்தப் பக்கம் திருப்பும்.
ஆட்டோமேடிக் வீடியோ கால் டிராக்கிங்
நீங்கள் வீடியோ காலில் பேசிக்கொண்டே அறையில் அங்குமிங்கும் நடந்தால், உங்களை ஃபிரேமின் நடுவிலேயே வைத்திருக்க இந்த கேமரா தானாகவே சுழன்று உங்களைப் பின்தொடரும். இதற்கு தனியாக ஸ்டாண்ட் தேவையில்லை.
இதுதவிர, 'ஸ்பின்ஷாட்' (SpinShot) என்ற ஒரு பிரத்யேக மோடும் இதில் உள்ளது. இதன் மூலம், கேமராவை 90 அல்லது 180 டிகிரியில் சுழற்றி, ஒரே கையைப் பயன்படுத்தி அட்டகாசமான கிரியேட்டிவ் வீடியோ ஷாட்களை எடுக்க முடியும். மொபைல் சினிமாட்டோகிராபியில் இது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல சினிமா கேமரா தயாரிப்பு நிறுவனமான ARRI உடன் ஹானர் கூட்டணி அமைத்திருப்பது, இந்த போனின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
கூகுள், ஆப்பிளுக்கு கடும் போட்டி
எனவே, இது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களை குறிவைத்து வெளியாகும் ஒரு பிரீமியம் போனாக இருக்கும் எனத் தெரிகிறது. 2026-ல் வெளியாகவுள்ள சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்ட் 8, கேலக்ஸி Z ஃபிளிப் 8, கூகுளின் பிக்சல் 11 சீரிஸ் மற்றும் ஆப்பிளின் வரவிருக்கும் ஃபோல்டபிள் ஐபோன் ஆகியவற்றுக்கு ஹானரின் இந்த புதிய ரோபோட் போன் கடுமையான போட்டியை உருவாக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

