- Home
- டெக்னாலஜி
- Ship Headlight : காருக்கு ஹெட்லைட் இருக்கு, கப்பலுக்கு ஏன் இல்ல? டைட்டானிக் மூழ்க இதுவும் காரணமா?
Ship Headlight : காருக்கு ஹெட்லைட் இருக்கு, கப்பலுக்கு ஏன் இல்ல? டைட்டானிக் மூழ்க இதுவும் காரணமா?
Ship Headlights : கடலில் பயணிக்கும் பெரிய கப்பல்களுக்கு ஏன் ஹெட்லைட் இல்லை என்று யோசித்திருக்கிறீர்களா? டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கப்பல்களில் ஹெட்லைட் இல்லாதது ஏன்?
நூறு வருஷத்துக்கு முன்னாடி உலகத்தையே உலுக்கிய டைட்டானிக் கப்பல் விபத்து பற்றி இன்னைக்கும் பல கேள்விகள் இருக்கு. அதுல ஒரு முக்கியமான கேள்வி, "காரு, பைக், ரயிலுக்குலாம் ஹெட்லைட் இருக்கு, ஆனா கப்பலுக்கு ஏன் இல்ல?" ஒருவேளை டைட்டானிக் கப்பல்ல ஹெட்லைட் இருந்திருந்தா, அந்த பெரிய பனிப்பாறையில மோதாம தப்பிச்சிருக்கலாமா? இதுக்கு பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் ரொம்பவே சுவாரஸ்யமானது.
நன்மையை விட தீமைதான் அதிகம்
நம்ம ரோட்ல இரவில் வண்டி ஓட்ட ஹெட்லைட் கண்டிப்பா வேணும். ஆனா, கடலோட கணக்கே வேற. கப்பல்கள்ல ஹெட்லைட் வெச்சா, அது நன்மையை விட தீமையைத்தான் அதிகமா உண்டாக்கும். இதுக்கு ஒரு உதாரணம், இரண்டாம் உலகப் போர்ல நடந்த ஒரு சம்பவம். ஜப்பானோட 'அகாட்சுகி'னு ஒரு போர்க்கப்பல் இருந்துச்சு. எதிரிகளை கண்டுபிடிக்கிறதுக்காக அதுல ஒரு பெரிய ஹெட்லைட் வெச்சிருந்தாங்க. ஆனா, ராத்திரியில அந்த லைட்டை ஆன் பண்ணதும், ஜப்பான் கப்பலுக்கு எதிரிங்க தெரியல. ஆனா, அந்த வெளிச்சத்தை வெச்சு அமெரிக்க கப்பல்கள், ஜப்பான் கப்பலை ஈசியா கண்டுபிடிச்சிட்டாங்க. உடனே குறிவெச்சு சுட்டு வீழ்த்திட்டாங்க.
மாலுமிகளோட கண்ணே பறிபோகும்
ஒரு காரோட ஹெட்லைட் சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் வெளிச்சம் தரும். காரை நாம உடனே நிறுத்திடலாம். ஆனா, ஒரு பெரிய கப்பலை நிறுத்தவோ அல்லது திருப்பவோ குறைஞ்சது 4-5 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னாடியே ஆபத்தை கண்டுபிடிக்கணும். அவ்ளோ தூரத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுற மாதிரி ஒரு கருவியை இன்னும் கண்டுபிடிக்கல. ஒருவேளை அப்படி ஒரு சக்திவாய்ந்த லைட் இருந்தாலும், அது கடல் அலைகள் மேல பட்டு பிரதிபலிச்சு கப்பலை ஓட்டுற மாலுமிகளோட கண்ணையே கூச வச்சு, பார்வையை மங்கச் செய்துவிடும்.
ஹெட்லைட்டுக்கு பதில் 'நேவிகேஷன் லைட்ஸ்'
கப்பல்கள்ல ஹெட்லைட்டுக்கு பதிலா 'நேவிகேஷன் லைட்ஸ்'னு சில முக்கியமான விளக்குகள் இருக்கும். இது வழியைப் பார்க்கிறதுக்கு இல்லை. தன்னோட கப்பல் எங்க இருக்கு, எந்த திசையில போயிட்டு இருக்குனு மத்த கப்பல்களுக்கு சிக்னல் கொடுக்கத்தான் இந்த லைட்ஸ் பயன்படுது.
பச்சை லைட்: கப்பல் இடமிருந்து வலமாக போகுதுனு அர்த்தம்.
சிவப்பு லைட்: கப்பல் வலமிருந்து இடமாக போகுதுனு அர்த்தம்.
முக்கோண வடிவ லைட்: கப்பல் நேராக உங்களை நோக்கி வருதுனு அர்த்தம்.
டைட்டானிக் விபத்து நடந்தது ஏன்?
டைட்டானிக் கப்பல் ஊழியர்கள், பனிப்பாறையை 500 மீட்டர் தூரத்துல இருக்கும்போதே கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா, கப்பலோட பிரம்மாண்டமான அளவாலயும், வேகத்தாலயும் அவ்ளோ குறைஞ்ச தூரத்துல கப்பலை கட்டுப்படுத்த முடியல. பனிப்பாறையை பார்த்த வெறும் 45 நொடியிலயே கப்பல் அது மேல மோதிடுச்சு. அங்க வெளிச்சம் ஒரு பிரச்சனை இல்லை, கப்பலோட வேகமும், கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தூரமும்தான் பிரச்சனையா இருந்துச்சு.
கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு
இன்னைக்கு இருக்கிற கப்பல்களுக்கு கண்ணை விட சிறப்பான ரேடார் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பங்கள் இருக்கு. இதுங்க இருட்டுலயும் பல கிலோமீட்டர் தூரத்துல இருக்குற பொருட்களை துல்லியமா காட்டிடும். கடல் அலைகளோ, மூடுபனியோ இதோட செயல்பாட்டை பாதிக்காது. இதுமட்டுமில்லாம, அதிகப்படியான வெளிச்சம் கடல்வாழ் உயிரினங்களோட வாழ்க்கையை பாதிக்கும்னும் விஞ்ஞானிகள் சொல்றாங்க.
அதனால, கடல் பயணத்துல 'பார்க்கிறது'னா கண்ணால பார்க்கிறது இல்லை, டெக்னாலஜி மூலமா ஆபத்தை முன்கூட்டியே உணர்றதுதான். இந்த காரணத்தினால்தான் டைட்டானிக் காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் கப்பல்கள்ல ஹெட்லைட் வைக்கிறது இல்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

