- Home
- இந்தியா
- 1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்த கப்பல்.! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? திக்திக் நிமிடங்கள்.!
1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்த கப்பல்.! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி? திக்திக் நிமிடங்கள்.!
shenlong suezmax : ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து கப்பல் ஒன்று, கச்சா எண்ணையுடன் இந்தியா வந்தடைந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு வந்த கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஈரான் மீது போரைத் தொடங்கி இருக்கின்றன. இதனால் ஈரான் தனது ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி என்பது ஒரு கடல் வழி பாதையாகும். உலகளவில் நடக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20% வரை இந்த ஜலசந்தி வழியாக நடக்கிறது. சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் கொண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்த ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்
இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக நம் நாட்டிற்கு வரவேண்டிய கப்பல்கள் வந்து சேரவில்லை. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
ஹார்மூஸ் ஜலசந்திக்கு முன்பு இருக்கும் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் இந்திய கப்பல்கள் சுமார் 28 வலம் வந்து கொண்டிருக்கின்றன. 24 கப்பல்களில் 677 இந்திய மாலுமிகளும், மீதமுள்ள நான்கு கப்பல்கள் ஜலசந்திக்கு கிழக்கில் 101 மாலுமிகளுடன் நின்று கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.
ஷன்லாங் சூயஸ்மேக்ஸ்
அந்த வகையில் முதல் கப்பலாக ஷன்லாங் சூயஸ்மேக்ஸ் என்னும் கப்பல் மும்பைக்கு வந்தடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு இந்த கப்பல் மும்பையை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் பதற்றம் நிறைந்த ஹார்மூஸ் ஜலசந்தியை இந்த கப்பல் எப்படி கடந்தது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கப்பல்கள் கடலில் நீண்ட தூரம் பயணிப்பதால் கப்பல்களின் இருப்பிடத்தை அறிய ஆட்டோமேட்டிக் ஐடென்டிஃபிகேஷன் சிஸ்டம் (AIS) என்கிற சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவி ரேடியோ அலைகள் மூலம் செயல்படும்.
ஆட்டோமேட்டிக் ஐடென்டிஃபிகேஷன் சிஸ்டம் (AIS)
இந்த ரேடியோ அலைகளைக் கொண்டு கடற்கரையில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் கப்பல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் மேலும் பயணிக்கும் கப்பலின் நீளம், அகலம், கப்பல் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது? எந்த தூரத்தில் பயணிக்கிறது? எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது? எத்தகைய வகையான பொருட்களை ஏற்றி செல்கிறது? போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதனால் கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படும்.
ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்தது எப்படி?
இந்த நிலையில் ஷன்லாங் சூயஸ்மேக்ஸ் என்கிற எண்ணெய் கப்பலானது சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்திலிருந்து 1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு மும்பைக்கு புறப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்துதான் இந்தியாவிற்கு வர முடியும்.
கடந்த ஒன்பதாம் தேதி ஹார்மூஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் நெருங்கியது. ஆனால் கப்பலில் இருந்து சிக்னல் யாருக்கும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் கப்பலின் ஏஐஎஸ் சிஸ்டம் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதை டார்க் மோட் என அழைப்பார்கள். இந்த கப்பலின் நகர்வு யாருக்கும் தெரியாத வகையில் ஏஐஎஸ் அணைக்கப்பட்டது.
இந்தியாவிற்கு ஆறுதல் செய்தி
டார்க் மோடில் ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இந்த கப்பல் ஒருநாள் கழித்து மும்பையை வந்தடைந்தது. இந்தியாவை சேர்ந்த கேப்டன் தான் இந்தக் கப்பலை இயக்கி இருக்கிறார். கொண்டுவரப்பட்ட 1.35 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மும்பையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படுகிறது. இது பற்றி கப்பல்களின் கண்காணிப்பு இணையதளமான TankerTrackers.com முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள், மூன்று சூயஸ்மேக்ஸ் எண்ணெய் கப்பல்கள் மற்றும் பனாமா டேங்கர் என ஆறு கப்பல்கள் 48 மணி நேரத்திற்குள் தங்களது ஏஐஎஸ் இணைப்பைத் துண்டித்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை நோக்கி சென்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

