MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Ship: லட்சக்கணக்கான டன் எடை கொண்ட கப்பல்கள் எப்படி கடலில் மிதக்கிறது? வியப்பூட்டும் அறிவியல்.! 99% பேருக்கு இது தெரியாது.!

Ship: லட்சக்கணக்கான டன் எடை கொண்ட கப்பல்கள் எப்படி கடலில் மிதக்கிறது? வியப்பூட்டும் அறிவியல்.! 99% பேருக்கு இது தெரியாது.!

How Ship Floats in Water: ஒரு சிறிய ஆணி மூழ்கும் போது, லட்சக்கணக்கான டன் எடை கொண்ட கப்பல் மிதப்பது எப்படி? என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? கப்பல்கள் கடலில் மிதப்பதன் பின்னணியில் உள்ள 'ரகசியம்' பற்றி பார்க்கலாம் வாருங்கள். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 03 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How Ship Floats in Water
Image Credit : ChatGPT

How Ship Floats in Water

தண்ணீரில் எந்த பொருளை எறிந்தாலும் அது மூழ்கி விடுவது சகஜம்தான். ஒரு சிறிய இரும்பு ஆணியை தூக்கி எறிந்தால் கூட அது மூழ்கி விடும். ஆனால் இவ்வளவு பெரிய இரும்பு கப்பல் தண்ணீரில் மிதக்கிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம் தான். கப்பல்கள் மிதப்பதற்குப் பின்னால் அற்புதமான அறிவியல் விதி ஒன்று உள்ளது. இதற்கு காரணம் மிதப்பு விசை மற்றும் ஆர்க்கிமிடிஸ் தத்துவமாகும். இந்த இரண்டு அறிவியில் தத்துவங்கள் பற்றியம் இந்த பதிவில் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:  Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
Image Credit : Asianet News

ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆர்க்கிமிடிஸ் என்கிற கிரேக்க அறிஞர் ‘ஆர்க்கிமிடிஸ்’ தத்துவத்தை கண்டுபிடித்தார். அதாவது ஒரு பொருள் தண்ணீரில் மூழ்கும் பொழுது அது தன் எடை அளவிற்கு இணையான தண்ணீரை அங்கிருந்து விலக்குகிறது. அப்படி விலக்கப்பட்ட தண்ணீரின் எடை அந்த பொருளின் எடைக்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அந்த பொருள் தண்ணீரில் மிதக்கும். 

கப்பலானது இந்த விதியின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. கப்பல் கடலில் இறங்கும் பொழுது அது பிரம்மாண்டமான வடிவத்தால் பல லட்சம் டன் எடையுள்ள கடல் நீரை பக்கவாட்டில் விலக்குகிறது. இவ்வாறு கப்பலால் விலக்கப்பட்ட நீரின் எடை கப்பலின் மொத்த எடையை விட அதிகமாக இருக்கும். இதனால் கப்பல் எளிதாக மிதக்கிறது.

இதையும் படியுங்கள்: Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

Related Articles

Related image1
Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
Related image2
Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!
35
மிதப்பு விசை (Buoyancy)
Image Credit : Meta AI

மிதப்பு விசை (Buoyancy)

கப்பல் மிதக்க மற்றொரு காரணம் மிதப்பு விசையாகும் (Buoyancy). அதாவது தண்ணீருக்குள் ஒரு பொருளைப் போடும் பொழுது தண்ணீர் அந்த பொருளின் மீது மேல் நோக்கி ஒரு விசையை செலுத்தும். இதற்கு மேல் நோக்கு விசை அல்லது மிதப்பு விசை என்று பெயர். ஒரு சிறிய இரும்பு ஆணியின் வடிவம் மிகச்சிறியது. அது தண்ணீருக்குள் செல்லும் பொழுது குறைந்த அளவே தண்ணீரை விலக்குகிறது. 

எனவே தண்ணீரின் மேல் நோக்கு விசை விட ஆணியின் கீழ்நோக்கு விசை அதிகமாக இருப்பதால் ஆணி மூழ்கி விடுகிறது. கப்பல் மிகப்பெரிய பரப்பளவை கொண்டிருப்பதால் அது அதிகப்படியான தண்ணீரை விலக்குகிறது. இதன் காரணமாக தண்ணீரின் மேல் நோக்கு விசை கப்பலின் எடையை தூக்கி நிறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:  Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!

45
கப்பல் வடிவமைப்பு
Image Credit : stockPhoto

கப்பல் வடிவமைப்பு

கப்பல் மிதப்பதற்கு அதன் வடிவமைப்பு பெரிய அளவில் உதவுகிறது. கப்பல் முழுக்க முழுக்க இரும்பினால் மட்டும் செய்யப்பட்டவை அல்ல. கப்பலின் உள்பகுதி பெரிய அளவில் உள்ளீடற்றதாக அதாவது வெறும் காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இரும்பு மற்றும் கப்பலுக்குள் இருக்கும் காற்றின் ஒட்டுமொத்த அடர்த்தியை கணக்கிட்டால் அது கடல் நீரின் அடர்த்தியை விட குறைவாக இருக்கும். இதனால் தான் கப்பல் தண்ணீரில் சொகுசாக மிதக்கிறது.

இதையும் படியுங்கள்: Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!

55
சுருக்கமாக சொன்னால்
Image Credit : Asianet News

சுருக்கமாக சொன்னால்

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கப்பலின் எடை அதை கீழ்நோக்கி இழுக்கிறது (புவியீர்ப்பு விசை). ஆனால் கப்பலின் பிரம்மாண்ட வடிவத்தால் விலக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதை மேல் நோக்கி தள்ளுகிறது (மிதப்பு விசை) இந்த இரண்டு திசைகளும் சமமாக இருக்கும் பொழுது லட்சக்கணக்கான டன் எடை கொண்ட கப்பலும் கடலில் எளிதாக மிதக்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அறிவியல்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangle Styling: நெக்லஸ், ஜிமிக்கி இல்லையா? ஒரே வளையல் போதும்!
Recommended image2
Tea,Vada, Bajji: கடையில டீ குடிச்ச பின்னாடி பஜ்ஜி, வடை சாப்பிடுறீங்களா?! இது கண்டிப்பா உங்களுக்குதான்.!
Recommended image3
Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
Recommended image2
Bird Flight: பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்குது? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸ் இருக்கா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved