MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

Water Bottle: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் இருக்கும் கோடுகள் வெறும் டிசைனுக்காக இல்லை. அதுக்குப் பின்னாடி செலவைக் குறைச்சு, பாட்டிலுக்கு வலு சேர்க்கிற ஒரு சூப்பர் இன்ஜினியரிங் இருக்கு. அந்த சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ட்ரிக்கை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 01 2026, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Water Bottle
Image Credit : Gemini

Water Bottle

நாம டெய்லி லைஃப்ல பயணம் செய்யும்போது, ஆபீஸ் போகும்போது, இல்ல ஜிம்ல வொர்க்அவுட் செய்யும்போது ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் வாங்குறது ரொம்ப சகஜம். ஆனா, நீங்க என்னைக்காவது கவனிச்சிருக்கீங்களா? மார்க்கெட்ல கிடைக்கிற எல்லா பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள்லயும் வளைவான கோடுகள் இருக்கும். இது வெறும் ஸ்டைலுக்காகன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, இதுக்கு பின்னாடி ஒரு செம சயின்ஸும், சூப்பரான இன்ஜினியரிங்கும் இருக்கு.

இதையும் படியுங்கள்:  ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பாட்டிலுக்கு எலும்பு போன்ற பலத்தை தரும் இந்த கோடுகள்
Image Credit : Gemini

பாட்டிலுக்கு எலும்பு போன்ற பலத்தை தரும் இந்த கோடுகள்

கம்பெனிகள் வாட்டர் பாட்டில் தயாரிக்க பாலிஎதிலீன் டெரிப்தாலேட் (PET) என்ற பிளாஸ்டிக்கை பயன்படுத்துறாங்க. பிளாஸ்டிக் கழிவைக் குறைக்கவும், தயாரிப்புச் செலவைக் குறைக்கவும் ரொம்ப மெல்லிய பிளாஸ்டிக்கை யூஸ் பண்றாங்க. ஒருவேளை இந்த பாட்டில்கள் கோடுகள் இல்லாம வழவழன்னு இருந்தா, கையில பிடிச்சதும் பேப்பர் மாதிரி நசுங்கிடும். 

இங்கதான் இன்ஜினியர்கள் மூளையைப் பயன்படுத்தியிருக்காங்க. இந்த கோடுகள் பாட்டிலுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்குது. இதனால, லாரியில நூற்றுக்கணக்கான பாட்டில்களை ஒண்ணு மேல ஒண்ணு அடுக்கி கொண்டு போனாலும், கீழ இருக்கிற பாட்டில்கள் நசுங்காது. இந்த சின்ன ட்ரிக் மூலமா பாட்டில் நசுங்கும் வாய்ப்பு 30% வரை குறையுது.

இதையும் படியுங்கள்: காரமா சாப்பிட்டா மூக்குல தண்ணி வருதா? வியர்த்து கொட்டுதா? இதுக்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

Related Articles

Related image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Related image2
Interesting Facts: காரமா சாப்பிட்டா மூக்குல தண்ணி வருதா? வியர்த்து கொட்டுதா? இதுக்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
36
நழுவாமல் இருக்க சூப்பர் கிரிப் தரும் கோடுகள் இவை
Image Credit : Pinterest

நழுவாமல் இருக்க சூப்பர் கிரிப் தரும் கோடுகள் இவை

ஃபிரிட்ஜ்ல இருந்து எடுத்த கூல் வாட்டர் பாட்டிலை வெளியில வைக்கும்போது, அதைச் சுத்தி தண்ணீர் துளிகள் உருவாகும். பாட்டிலோட சர்பேஸ் வழவழன்னு இருந்தா, அது நம்ம கையிலிருந்து ஈஸியா நழுவி கீழே விழுந்திடும். நாம ஓடும்போதோ, டிரைவிங் செய்யும்போதோ இப்படி நடந்தா ரொம்ப கஷ்டம். ஆனா, பாட்டில் மேல இருக்கிற இந்த மேடு பள்ளங்கள் கைக்கு நல்ல கிரிப் கொடுக்குது. வேர்த்தாலும், பாட்டில் ஈரமா இருந்தாலும் கையிலிருந்து நழுவாது.

இதையும் படியுங்கள்:  இடி இடிக்கும்போது அர்ஜுனா, அர்ஜுனா-ன்னு ஏன் சொல்றோம்.? இதுதான் காரணம்.!

46
அழுத்த மாற்றங்களுக்கு செக்
Image Credit : stockphoto

அழுத்த மாற்றங்களுக்கு செக்

வெப்பநிலை அல்லது உயரம் மாறும்போது, பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீர் விரிவடையும் அல்லது சுருங்கும். உதாரணமா, ஒரு ஃபேக்டரியிலிருந்து மலைப்பகுதிக்கு பாட்டில்களை கொண்டு போகும்போதோ, அல்லது வெயில்ல கார்ல பாட்டிலை வைக்கும்போதோ உள்ளே பிரஷர் அதிகமாகும். இந்த கோடுகள் ஒரு அக்கார்டியன் இசைக்கருவி மாதிரி வளைஞ்சுகொடுத்து, அந்த பிரஷரை உள்வாங்கிக்கும். இதனால பாட்டிலோட வடிவம் மாறாம அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள்: நம்ம ஊர் மாதிரி ஏன் அமெரிக்காவில் செங்கல் வீடு கட்டுவதில்லை? பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான உண்மைகள்.!

56
குறைந்த பிளாஸ்டிக்.. சூழலுக்கு உகந்த லாஜிக்
Image Credit : Getty

குறைந்த பிளாஸ்டிக்.. சூழலுக்கு உகந்த லாஜிக்

இந்த ரிட்ஜஸ் டிசைன் காரணமா, கம்பெனிகள் ரொம்ப குறைவான பிளாஸ்டிக் வெச்சே உறுதியான பாட்டில்களை தயாரிக்க முடியுது. இதனால பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு குறையுது, இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுமட்டுமில்லாம, நீங்க கவனிச்சீங்கன்னா, யூஸ் பண்ண பாட்டிலை ரீசைக்கிளிங்குக்காக நசுக்கும்போது, அது சரியா அந்த கோடுகள் வழியாவே ஈஸியா மடியும். செங்குத்தா வலுவா இருக்கிற பாட்டில், கிடைமட்டமா அழுத்தும்போது சுலபமா மடியுற மாதிரி இதை டிசைன் பண்ணியிருக்காங்க.

இதையும் படியுங்கள்:  அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

66
பிராண்ட் லேபிள்கள் கச்சிதமாக ஒட்டிக்கொள்ள
Image Credit : our own

பிராண்ட் லேபிள்கள் கச்சிதமாக ஒட்டிக்கொள்ள

வாட்டர் பாட்டில்கள் மேல கம்பெனியோட பிராண்ட் ஸ்டிக்கர்கள் இருக்கும். பாட்டில் சர்பேஸ்ல இந்த கோடுகள் இருக்கிறதால, பசை நல்லா பிடிச்சுக்கும். ஸ்டிக்கர்கள் சுருங்காம, கிழியாம நீட்டா இருக்கும். ஃபேக்டரியில சூடான பிளாஸ்டிக் கூல் ஆகும்போது, உள்ள இருக்கிற காத்து சுலபமா வெளியேறவும் இந்த டிசைன் உதவுது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dandruff Free Hair: பொடுகு தொல்லையா? பளபள முடி வேணுமா? இந்த ஒரு பொருள் போதும்!
Recommended image2
Vijay: முதல்வர் விஜய் மாதிரி ஃபிட் ஆகணுமா? இதோ சிம்பிள் வெயிட் லாஸ் பிளான்!
Recommended image3
Chicken Tandoori: வீட்லயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் தந்தூரி! வெறும் 30 நிமிஷத்துல ரெடி!
Related Stories
Recommended image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Recommended image2
Interesting Facts: காரமா சாப்பிட்டா மூக்குல தண்ணி வருதா? வியர்த்து கொட்டுதா? இதுக்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved