MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

Interesting Facts: இந்தியாவைப் போல அமெரிக்காவில் மக்கள் சிலிண்டர் வாங்குவதில்லை. அவர்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 22 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அமெரிக்காவில் மக்கள் ஏன் கேஸ் சிலிண்டர் வாங்குவது இல்லை?
Image Credit : ChatGPT

அமெரிக்காவில் மக்கள் ஏன் கேஸ் சிலிண்டர் வாங்குவது இல்லை?

உலகின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் காலி சிலிண்டர்களைத் தூக்கிக்கொண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு ஓடுகின்றனர். மாதம் மாதம் சிலிண்டர் புக் செய்து டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற நிலைமை கிடையாது. அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு சமையல் எரிவாயு முற்றிலும் வேறுபட்ட, அதே சமயம் எளிமையான முறையில் கிடைக்கிறது. அமெரிக்காவில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் முறை பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.

இதையும் படியுங்கள்:  Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகம்
Image Credit : ChatGPT

குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகம்

அமெரிக்க நகரங்களில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் இயற்கை எரிவாயு நேரடியாக குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் குழாய்கள் போலவே தெருக்களில் மண்ணுக்கு அடியில் எரிவாயு கொண்டு செல்லும் முதன்மை குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக இணைப்புக் குழாய்கள் கொடுக்கப்பட்டு நேரடியாக சமையலறை அடுப்புக்கு இணைக்கப்பட்டு இருக்கும். வீட்டின் வெளிப்பகுதியில் ஒரு மீட்டர் பொருத்தப்பட்டு எவ்வளவு எரிவாயு பயன்படுத்துகிறீர்களோ, அதை இந்த மீட்டர் துல்லியமாக கணக்கிடும். மாத இறுதியில் மின் கட்டணம் போல ஆன்லைனில் கட்டணம் செலுத்தினால் போதுமானது. கேஸ் தீர்ந்துவிடும் என்கிற கவலையே அமெரிக்க மக்களுக்கு இருக்காது.

இதையும் படியுங்கள்:  Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

Related Articles

Related image1
Interesting Facts: அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் வெளியில் தெரிவதில்லை? இந்தியாவில் இது சாத்தியமா?
Related image2
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
35
கிராமங்களுக்கு எப்படி இணைப்பு கொடுக்கப்படுது?
Image Credit : Getty

கிராமங்களுக்கு எப்படி இணைப்பு கொடுக்கப்படுது?

நகரங்களைத் தாண்டி குழாய் இணைப்பு வசதி இல்லாத கிராமங்கள் அல்லது பண்ணை வீடுகளில் இருப்பவர்களுக்கு நம் ஊர்களில் கிடைப்பது போலவே எல்பிஜிகள் சிலிண்டர்கள் கிடைக்கிறது. அங்கேயும் அவர்கள் சிறிய சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. இவர்களது வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் மிகப்பெரிய கேஸ் டேங்க் வைக்கப்பட்டிருக்கும். இது 100 முதல் 500 கேலன்கள் (சுமார் 400 முதல் 2000 லிட்டர்கள் கொள்ளளவு) கொண்டதாக இருக்கும். தனியார் எரிவாயு நிறுவனங்கள் பெரிய லாரிகள் மூலம் சில மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக வீட்டிற்கு வந்து இந்த டேங்குகளில் கேஸை நிரப்பி விட்டுச் செல்வார்கள். பல வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் மீட்டர், கேஸ் அளவு குறையும் பொழுது நிறுவனத்திற்கு தானாகவே தகவல் தெரிவித்து விடும். அவர்கள் வந்து நிரப்பி விட்டுச் செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:  Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

45
மின்சார அடுப்புகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்
Image Credit : Chat gpt

மின்சார அடுப்புகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்

அமெரிக்காவில் பல வீடுகளில் கேஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தியே சமைக்கின்றனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்காக கேஸ் இணைப்புகளுக்கு பதிலாக முழுமையாக இன்டக்சன் அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கர்கள் பல நேரங்களில் சிலிண்டர் வாங்குவதே கிடையாது. ஆனால் வீட்டின் பின்புறத்தில் வைத்து பார்பிக்யூ கிரில் சிக்கன் செய்வதற்கும், குளிர்காலத்தில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும் அவுட்டோர் ஹீட்டர்களுக்கும் சிறிய ரக ப்ரொபேன் சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள். இவை காலியாகிவிட்டால் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது பெட்ரோல் பங்குகளில் கொடுத்து புதிய சிலிண்டர்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: Indian Railways: ரயில் பெட்டி மேல இந்த வட்டமான மூடிகள் ஏன் இருக்கு? இதன் உண்மையான வேலை என்ன தெரியுமா?

55
இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் PNG (Piped Natural Gas)
Image Credit : X

இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் PNG (Piped Natural Gas)

தடையற்ற உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் காரணமாக அமெரிக்க மக்கள் சிலிண்டர் புக் செய்யும் தேவையே இல்லாமல் 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவைப் பெற்று வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் கூட சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் PNG (Piped Natural Gas) முறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. இந்த முறையில் மண்ணுக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு இயற்கை எரிவாயு வீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டால் இந்திய மக்களும் 24 மணி நேரமும் தடையின்றி சமையல் எரிவாயுவைப் பெற முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toilet Cleaning: 10 நிமிடத்தில் பளீர் என மின்னும் டாய்லெட்.! மஞ்சள் கறை காணாமல் போகும் மேஜிக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.!
Recommended image2
Fridge : உங்க ஃபிரிட்ஜ் ரொம்ப அழுக்கா இருக்கா... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் வச்சு பளபளனு கிளீன் பண்ணலாம்..!
Recommended image3
Cooking Tips: பருப்பு முதல் பால் வரை... உணவு தீய்ந்து போச்சா? வாசனையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Interesting Facts: அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் வெளியில் தெரிவதில்லை? இந்தியாவில் இது சாத்தியமா?
Recommended image2
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved