- Home
- Business
- Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
The Story of Indias First Petrol Bunk: இப்போ தெருவுக்குத் தெரு பெட்ரோல் பங்க் இருக்கு. ஆனா, ஒருகாலத்துல அப்படி இல்ல. நம்ம நாட்டுல முதல் பெட்ரோல் பங்க் எங்க ஆரம்பிச்சாங்க தெரியுமா? அப்போ வண்டிகளுக்கு எப்படி பெட்ரோல் போட்டாங்கனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
14

Image Credit : ChatGPT
முதல் பெட்ரோல் நிலையம்
நம்ம நாட்டுல முதல் பெட்ரோல் பங்க் 1928-ல் மும்பையில்தான் தொடங்கப்பட்டது. 'பர்மா ஷெல்' என்ற கம்பெனிதான் இதை ஆரம்பிச்சது. அப்போலாம் வண்டிகள் ரொம்ப கம்மி. இப்போ அந்த பர்மா ஷெல் நிறுவனம்தான் 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆக இருக்கு.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
24
Image Credit : Getty
முன்பெல்லாம் மக்கள் கையால் பெட்ரோல் நிரப்பி வந்தனர்.
பெட்ரோல் பங்க் வர்றதுக்கு முன்னாடி, பெரிய டிரம் அல்லது டின்ல வெச்சுதான் பெட்ரோல், டீசல் வித்தாங்க. பங்க் வந்த பிறகும், ஆட்டோமேட்டிக் மெஷின்லாம் கிடையாது. ஊழியர்கள் கையாலதான் பெட்ரோல் நிரப்புவாங்க. எவ்வளவு போட்டிருக்காங்கனு பார்க்க மெக்கானிக்கல் மீட்டர்களைப் பயன்படுத்தினாங்க.
34
Image Credit : Getty
பெட்ரோலை கையால் அளவிட்டு வழங்கிய நிறுவனங்கள்
ஆரம்பத்துல மக்கள் பங்குகளை நம்பல. சரியா பெட்ரோல் போடுறாங்களானு சந்தேகம் இருந்துச்சு. அதனால, பர்மா ஷெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் கண் முன்னாடியே பெட்ரோலை அளந்து ஊத்துனாங்க. இதுதான் மக்கள் மத்தியில நம்பிக்கையை வளர்த்தது.
44
Image Credit : Getty
பெட்ரோல் நிலையங்கள் - நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி
1928-ல் ஒற்றைப் பங்கில் தொடங்கியது, இன்னைக்கு ஆயிரக்கணக்கான பங்க்களாக வளர்ந்திருக்கு. கையால் இயக்கிய பம்ப்களில் இருந்து, இப்போ AI டிஜிட்டல் மெஷின்கள் வரை வந்தாச்சு. ஒருகாலத்தில் ஆடம்பரமா இருந்த கார், இப்போ நடுத்தர குடும்பத்துலயும் இருக்கு. இந்த வளர்ச்சி இப்போ எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் வரை நீண்டிருக்கு.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
Latest Videos

