- Home
- டெக்னாலஜி
- 11” டிஸ்ப்ளே, Gemini AI, 2TB ஸ்டோரேஜ் சப்போர்ட்.. சாம்சங் கேலக்ஸி டேப் A11+ அறிமுகம்.. விலை, அம்சங்கள் இதோ
11” டிஸ்ப்ளே, Gemini AI, 2TB ஸ்டோரேஜ் சப்போர்ட்.. சாம்சங் கேலக்ஸி டேப் A11+ அறிமுகம்.. விலை, அம்சங்கள் இதோ
சாம்சங் தனது புதிய கேலக்ஸி டேப் A11+-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 11 இன்ச் திரை, மெட்டல் டிசைன் மற்றும் கூகுள் ஜெமினி, சர்க்கிள் டு சர்ச் போன்ற மேம்பட்ட AI அம்சங்களுடன் இந்த டேப்லெட் வருகிறது.

சாம்சங் Galaxy Tab A11+
இந்தியாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Samsung, தன் புதிய டேப்லெட் மாடலான Galaxy Tab A11+-ஐ இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. 11 இன்ச் பெரிய திரை, ஸ்லீக் மெட்டல் டிசைன் மற்றும் புத்திசாலித்தனமான AI திறன்களுடன் இது மலிவு விலையில் ஸ்மார்ட் டேப்லெட் அனுபவத்தைப் வழங்குவதே நோக்கமாக உள்ளது என்று சாம்சங் தெரிவித்தார். இந்த டேப்லெட்டில் Google ஜெமினி, சர்க்கிள் டு சர்ச், லைவ் டிரான்ஸ்லேஷன் போன்ற பல மேம்பட்ட AI கருவிகள் உள்ளன.
திரையில் உள்ள எந்த உருப்படியையும் வட்டமிடும்போது அதற்கான விவரங்கள், வரையறைகள், தொடர்புடைய தகவல்கள் உடனே காட்டப்படும். செய்திகள் அல்லது சமூக ஊடக பதிவுகளைப் படிக்கும் போது திரையில் மொழிபெயர்ப்பு வழங்கப்படும். கணிதப் பிரச்சனைகளை கைஎழுத்திலோ தட்டச்சிலோ உள்ளிடும் போது, படிப்படியான தீர்வுகள், அலகு மாற்றம், அறிவியல் கணக்கீடுகள் போன்றவற்றை வழங்குகிறது. 4nm MediaTek MT8775 செயலி கொண்டு இயக்கப்படுவதால் டேப்லெட் மல்டி-டாஸ்கிங்கிலும் சிறந்த பதிலளிக்கிறது.
சாம்சங் புதிய டேப்லெட்
Galaxy Tab A11+ 6GB +128GB & 8GB +256GB என இரண்டு வேரியண்ட் மாடல்களில் கிடைக்கிறது. கூடுதலாக microSD ஸ்லாட் மூலம் 2TB வரை விரிவாக்கம் செய்யலாம். 7,040mAh பெரிய பேட்டரி மற்றும் 25W வேகமாக சார்ஜிங் கொண்டால் நீண்ட நேரம் பயன்பாட்டிற்கு ஏற்றது. மெட்டல் ஃபினிஷ் மற்றும் அல்ட்ரா-ஸ்லிம் டிசைன் கொண்ட இந்த டேப்லெட் கிரே & சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. பின்புறத்தில் 8MP கேமரா மற்றும் முன்புறத்தில் 5MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ கால், டாக்குமெண்ட் ஸ்கேன் மற்றும் உருவாக்கத்தில் தெளிவான படத் தரத்தை உள்ளடக்கியது. “உயர்தர AI அனுபவம் மற்றும் பயனுள்ள அம்சங்கள் அதிகமான பயனர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லும் முயற்சிதான் A11+” என்று சாம்சங் MX வணிக இயக்குநர் சாக்னிக் சென் தெரிவித்துள்ளார். Galaxy Tab A11+ விலை ரூ.19,999 முதல் (வங்கி கேஷ்பேக் உடன்) கிடைக்கிறது. நவம்பர் 28 முதல் Amazon, Samsung ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் கடைகளில் விற்பனை தொடங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

