ஏர்டெல் vs ஜியோ: 1 வருட ரீசார்ஜ் திட்டத்துக்கு எது சிறந்தது.?
ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் திட்டங்கள், அழைப்புகள், டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்குகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவற்றில் எது சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை பார்க்கலாம்.

1 வருட ரீசார்ஜ் திட்டங்கள்
ரீசார்ஜ் செய்ய வேண்டிய சலிப்பைத் தவிர்க்க, ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டங்களை அடிக்கடி தேடுபவர்களுக்கு ஜியோவும், ஏர்டெல்லும் மிகச் சிறந்த தேர்வுகளை வழங்குகின்றன. இந்த ஆண்டு திட்டங்கள் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் அல்லாமல், ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் பல டிஜிட்டல் சேவை நன்மைகளையும் வழங்குவது சிறப்பு ஆகும்.
ஏர்டெல் வருடாந்திர திட்டம்
ஏர்டெல் தற்போது நாட்கள் 365 செல்லுபடியாகும் மூன்று மாதத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் மிகப் பெரிய அம்சம் ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro ஆண்டு சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. இதனுடன் ஹலோ டியூன்ஸ் சேவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.1,849 திட்டத்தில் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு, 3,600 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் டேட்டா வழங்கப்படவில்லை. வைஃஃபை பயன்படுத்துவோர் மற்றும் அழைப்பு மட்டும் தேவைப்படுவோருக்கு இது மலிவு மற்றும் பயனுள்ளதாக இருக்கும். ரூ.2,249 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 3,600 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு வருடத்தில் 30ஜிபி டேட்டா கிடைக்கும். வாட்ஸ்அப், UPI, ஈமெயில் போன்ற லைட் டேட்டா பயனர்களுக்கு இது பொருத்தமானது.
ஜியோ 1 வருட ரீசார்ஜ்
ஜியோவின் திட்டமும் பல டிஜிட்டல் நன்மைகளுடன் வருகிறது. இதில் JioTV, JioAI Cloud, 3 மாத JioHotstar சந்தா, JioGold இல் கூடுதல் லாபம், இரண்டு மாத JioHome சோதனை போன்ற சேவைகள் அடங்கும். அதிக டேட்டா பயன்படுத்துவோருக்காக ஜியோ திட்டம் மிகச் சிறந்த விருப்பமாகும். ஜியோவின் ரூ.3,599 ஒரு நாள் ரீசார்ஜ் திட்டம் நாள் முழுவதும் இணையத்தை பயன்படுத்தும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 2.5GB டேட்டா, மொத்தம் 912.5GB, தினமும் 100 எஸ்எம்எஸ், மூன்று மாத ஜியோஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்ட நன்மைகள் உள்ளன. ஆன்லைன் வேலை, ஸ்ட்ரீமிங், கேமிங், ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த ஒரு வருடமாக இருக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

