- Home
- டெக்னாலஜி
- தபால் எல்லாம் பழசு.. இனி வாட்ஸ்அப் தான் புதுசு! செக் பவுன்ஸ் வழக்கில் நீதிமன்றத்தின் மாஸ் முடிவு!
தபால் எல்லாம் பழசு.. இனி வாட்ஸ்அப் தான் புதுசு! செக் பவுன்ஸ் வழக்கில் நீதிமன்றத்தின் மாஸ் முடிவு!
WhatsApp செக் பவுன்ஸ் வழக்குகளில் இனி வாட்ஸ்அப், இமெயில் மூலம் சம்மன் அனுப்பலாம் என உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் இதோ.

WhatsApp டிஜிட்டல் யுகத்தில் நீதிமன்ற நடவடிக்கை
வழக்கமாக நீதிமன்ற சம்மன்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ தான் வழங்கப்படும். ஆனால், இனி உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது இமெயிலுக்கு (Email) நீதிமன்ற சம்மன் வந்தால் அதைத் தலித்துவிடாதீர்கள்; அது சட்டப்படி செல்லுபடியாகும். உத்தரகண்ட் உயர்நீதிமன்றம், காசோலை மோசடி (Cheque bounce) வழக்குகளில் சம்மன்களை இனி டிஜிட்டல் முறையில் அனுப்பலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் யோகேஷ் குமார் குப்தா வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, பாரம்பரிய முறைகளைத் தாண்டி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளிப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் என்ன சொல்கின்றன?
'உத்தரகண்ட் எலக்ட்ரானிக் ப்ராசஸ் விதிகள், 2025'-ன் படி (Uttarakhand Electronic Process Rules, 2025), இனி மொபைல் போன்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் வழியாகவும் சம்மன் அனுப்ப முடியும். நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கவும், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி செக் பவுன்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாட்ஸ்அப்பிலேயே நோட்டீஸ் வந்துசேரும்.
புகார்தாரர் கவனிக்க வேண்டியவை
வழக்குத் தொடர்பவர் அல்லது புகார்தாரர் (Complainant), நீதிமன்றத்தில் புகார் அளிக்கும்போதே குற்றம் சாட்டப்பட்டவரின் சரியான இமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்அப் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை தான் என்பதை உறுதிப்படுத்தி ஒரு பிரமாணப் பத்திரத்தையும் (Affidavit) தாக்கல் செய்ய வேண்டும். தவறான தகவல்களை அளித்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆன்லைனில் அபராதம் செலுத்தும் வசதி
வழக்குகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில், ஆன்லைன் பேமெண்ட் வசதியையும் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. சம்மனிலேயே பணம் செலுத்துவதற்கான நேரடி இணையதள லிங்க் (Direct link) இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் தனது வழக்கின் CNR எண்ணைப் பயன்படுத்தி, காசோலைத் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டால், நீதிமன்றம் அந்த வழக்கை முடித்துக்கொள்ள (Compounding) வாய்ப்புள்ளது. இது நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தும்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்
சஞ்சபிஜ் துரி எதிர் கிஷோர் எஸ். பார்கர் (Sanjabij Turi v. Kishore S. Barkar) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான செக் பவுன்ஸ் வழக்குகள் தேங்கிக்கிடப்பது நீதித்துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வழக்குகளை விரைவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

