MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • கூகுளின் புதிய ஏ.ஐ மேஜிக்: கோடிங் தெரியாமலேயே சொந்தமா வீடியோ கேம் உருவாக்கலாம்!

கூகுளின் புதிய ஏ.ஐ மேஜிக்: கோடிங் தெரியாமலேயே சொந்தமா வீடியோ கேம் உருவாக்கலாம்!

கூகுள் நிறுவனம் சாமானிய மக்களும் எளிதாக வீடியோ கேம் மற்றும் சினிமா உருவாக்கும் வகையில் 2 புதிய ஏ.ஐ தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 09 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூகுளின் புதிய ஏ.ஐ Playground
Image Credit : Gemini

கூகுளின் புதிய ஏ.ஐ Playground

ஏ.ஐ துறையில் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும், சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் முன்னணி டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த MUSE, ஓப்பன் ஏ.ஐ அறிமுகம் செய்த Dots வரிசையில், தற்போது கூகுள் இரண்டு புதிய புரட்சிகரமான சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இது சாமானிய மக்களை சொந்தமாக கேம் டெவலப்பராகவும், வீட்டில் இருந்தபடியே கேமரா கூட இல்லாமல் சினிமா எடுக்கும் இயக்குநராகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கேம் டெவலப்பிங்
Image Credit : Gemini

கேம் டெவலப்பிங்

உலகளவில் மிகவும் கிரியேட்டிவ் துறையாகப் பார்க்கப்படும் கேம் டெவலப்பிங் துறை, பெரிய அளவிலும் வேகமாகவும் வளர்ச்சி அடைய முடியாமல் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்பத் திறன் பற்றாக்குறையாகும்; இதனால் இத்துறை தேக்க நிலையை அடைந்துள்ளது.

இதைச் சரியாக உணர்ந்த கூகுள், தனது ஜெனரேட்டிவ் ஏஐ மாடலான ஜெமினி (Gemini) உடன் யூனிட்டி (Unity) என்ற கேம் டெவலப்மென்ட் தளத்தை இணைத்துள்ளது. இதன் மூலம் எவ்விதக் கம்ப்யூட்டர் கோடிங்கும் இல்லாமல், வெறும் ப்ராம்ட் வாயிலாகவே கேம்களை உருவாக்கும் 'Playground' என்ற சிறப்பு ஏ.ஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதேபோல், சினிமா தயாரிக்க 'FLOW' என்ற ஏஐ டூலையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

34
ஃபோட்டோ உருவாக்கும் ஏ.ஐ
Image Credit : Gemini

ஃபோட்டோ உருவாக்கும் ஏ.ஐ

இந்த இரு தளங்களின் அறிமுகம் மூலம் கூகுள், வெறும் சாட்பாட் அல்லது புகைப்படம் உருவாக்கும் ஏ.ஐ தளமாக மட்டும் இல்லாமல், பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இதில் 'Playground' என்னும் தளம் கேம் டெவலப்மென்ட்டில் இருக்கும் பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உள்ளது. இதேபோல், சொல்ல முடியாத மற்றும் சொல்லத் துடிக்கும் கதைகளை ஏ.ஐ மூலம் திரைப்படங்களாக மாற்றும் சூழலை சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் 'Google Flow' மூலம் ஏற்படுத்தியுள்ளது.

44
கூகுள் ஃப்ளோ ஏ.ஐ
Image Credit : Gemini

கூகுள் ஃப்ளோ ஏ.ஐ

கேமிங் துறையில் கூகுள் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருப்பதன் மூலம், புதிதாகப் பலர் இத்துறைக்கு வருவது மட்டுமின்றி, மக்கள் விரும்பும் அதிகப்படியான கேம்களை உருவாக்கி அதை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் காலம் விரைவில் வர உள்ளது. இது 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கேமிங் துறைக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாற்றும்.

இதற்காக யூனிட்டி நிறுவனத்தின் லேட்டஸ்ட் தொழில்நுட்பமான Unity Spark-ஐ ஜெமினி உடன் இணைத்து 'Playground' தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக யூனிட்டி சிஇஓ மேத்யூ பரூம்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் கேமிங் துறைக்காக Genie 3 world என்ற பிரத்யேக மாடலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கூகுள் ஃப்ளோ தளம் இந்தியாவில் இருக்கும் WIF அமைப்புடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்ஸ்!
Recommended image2
165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!
Recommended image3
ரூ.10,000 vs ரூ.20,000: எந்த மொபைல் நீண்ட நாள் உழைக்கும்? எளிய மக்களுக்கு எது பெஸ்ட்?
Related Stories
Recommended image1
165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!
Recommended image2
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved