MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!

165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!

165 நாடுகளில் அனுமதி பெற்றும் இந்தியாவில் 5 ஆண்டுகளாக உரிமம் மறுக்கப்படுவதற்கு உள்நாட்டு ஏகபோக தொழிலதிபர்களே காரணம் என எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக்கியுள்ளது.

3 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 09 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முகேஷ் அம்பானியின் செல்வாக்கை விமர்சித்த எலான் மஸ்க்!
Image Credit : x

முகேஷ் அம்பானியின் செல்வாக்கை விமர்சித்த எலான் மஸ்க்!

இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதில் தொடர்ந்து ஒழுங்குமுறை ரீதியான தடைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் செல்வாக்கு குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவாய்ந்த வணிக அமைப்புகள்தான் ஸ்டார்லிங்கின் வருகையைத் தடுக்கின்றன என்ற மஸ்க்கின் குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்த நிலையில், அவரது எக்ஸ் (X) தளப் பதிவுகள் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா? - எலான் மஸ்க்
Image Credit : x

அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா? - எலான் மஸ்க்

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைவதைத் தடுக்கும் வகையில், சில தொழிலதிபர்கள் (Oligarchs) தங்கள் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுவதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். ஆனால், குறிப்பிட்ட நபர்களின் பெயரையோ, அதற்கான ஆதாரங்களையோ அவர் அப்போது வெளியிடவில்லை. இணைய வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு மலிவான மற்றும் அதிவேக இணையத்தை வழங்குவதைத் தடுப்பது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து வியாழக்கிழமை வெளியிட்ட மற்றொரு பதிவில், முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு மஸ்க் கேள்வி எழுப்பினார். 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அரசின் ஒவ்வொரு விதிமுறைகளுக்கும் உட்பட்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அப்படி இருந்தும் இன்னும் ஏன் எங்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா (Boss)? குடிமக்களின் நலனை விட, குறிப்பிட்ட சில கார்ப்பரேட் தொழிலதிபர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது என்ற விமர்சனப் பதிவை மேற்கோள் காட்டி மஸ்க் இதனைப் பதிவிட்டார்.

35
இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் விளக்கம்
Image Credit : x

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம் விளக்கம்

மஸ்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம், செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கான நாட்டின் ஒழுங்குமுறை நடைமுறைகள் நியாயமானவை மற்றும் எந்தவொரு பாகுபாடும் அற்றவை என்று தெரிவித்தது.

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ சாட்காம் (Jio Satcom) மற்றும் பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) ஆகிய 3 நிறுவனங்களும் தற்போது ஒரே கட்டத்திலான ஒழுங்குமுறை நடைமுறையில் தான் உள்ளன.

எந்தவொரு நிறுவனமும் வணிக ரீதியான சேவையைத் தொடங்குவதற்கு முன்பாக, தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் (Security Assessments) மற்றும் அலைக்கற்றை (Spectrum) தொடர்பான நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

45
இன்னொருத்தரை நீங்க பார்க்கும்போது புரியும் - ராகுல் காந்தி
Image Credit : x

இன்னொருத்தரை நீங்க பார்க்கும்போது புரியும் - ராகுல் காந்தி

எலான் மஸ்க்கின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு நல்வரவு எலான். இன்னொருத்தரை நீங்க பார்க்கும்போது இன்னும் பல விஷயங்கள் புரியும் (Wait till you discover the other guy) என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தி யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது விமர்சனம் தொழிலதிபர் கௌதம் அதானியை நோக்கியே அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரதமர் மோடியும் அதானியும் விமானத்தில் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படம் அடங்கிய பதிவையும் அவர் பகிர்ந்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு உடனடியாகப் பதிலளித்த எலான் மஸ்க், நன்றி ராகுல். இது உண்மையில் கவலையளிக்கும் விஷயம் என்று பதிவிட்டார்.

55
ஸ்டார்லிங்கின் 5 ஆண்டு முயற்சி: பின்னணி என்ன?
Image Credit : x

ஸ்டார்லிங்கின் 5 ஆண்டு முயற்சி: பின்னணி என்ன?

100 கோடிக்கும் அதிகமான இணைய பயனாளர்களைக் கொண்ட இந்தியச் சந்தையில் நுழைய ஸ்டார்லிங்க் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று வருகிறது. 2021-ல் இந்தியாவில் இணைய சேவையை அறிமுகப்படுத்த முயன்ற ஸ்டார்லிங்க், உரிய உரிமங்களைப் பெறுவதற்கு முன்பே முன்பதிவுகளைத் தொடங்கியதற்காக, 2022-ன் தொடக்கத்தில் பயனாளர்களின் முன்பதிவுக் கட்டணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட கேட்வே மையங்களையும், நூற்றுக்கணக்கான தரைவழி ஆண்டெனாக்களையும் அமைத்துள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மை விதிகளுக்கு ஏற்ப கட்டமைப்பை மாற்றியுள்ளதாகவும் ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்திய மொபைல் காங்கிரஸ்' மாநாட்டில் பேசிய ஸ்டார்லிங்கின் வர்த்தக செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் லாரன் ட்ரேயர், நாட்டின் கடைக்கோடி பகுதிக்கும் இணைய வசதி கொண்டுசேர்க்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏல முறையில் வழங்க வேண்டும் என்று ரிலையன்ஸ் ஜியோ வாதிட்ட நிலையில், ஏலமின்றி நிர்வாக ரீதியாகவே (Administrative allocation) ஒதுக்க வேண்டும் என்ற ஸ்டார்லிங்கின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜியோ (SES உடன் இணைந்து), பார்தி ஏர்டெல் (ஒன்வெப் உடன் இணைந்து) ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் சொந்த செயற்கைக்கோள் இணையச் சேவைகளைத் தீவிரமாக உருவாக்கி வரும் அதே வேளையில், ஸ்டார்லிங்க் சேவையை விநியோகிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவில் இதன் வணிக பயன்பாடு எப்போது தொடங்கும் என்ற தெளிவு இல்லாத நிலையில், அண்டை நாடான வங்கதேசத்தில் மொபைல் போன்களுடன் நேரடியாக செயற்கைக்கோளை இணைக்கும் 'ஸ்டார்லிங்க் மொபைல்' சேவையை அந்நிறுவனம் இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10,000 vs ரூ.20,000: எந்த மொபைல் நீண்ட நாள் உழைக்கும்? எளிய மக்களுக்கு எது பெஸ்ட்?
Recommended image2
8,000mAh பேட்டரி, 144Hz AMOLED டிஸ்பிளே: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஒப்போ கே14 பிளஸ்!
Recommended image3
உறைபனியில் ஒரு சாகசப் பயணம்: லடாக்கில் தொடங்கிய இந்தியாவின் முதல் வைல்டு சஃபாரி!
Related Stories
Recommended image1
ரூ.10,000 vs ரூ.20,000: எந்த மொபைல் நீண்ட நாள் உழைக்கும்? எளிய மக்களுக்கு எது பெஸ்ட்?
Recommended image2
8,000mAh பேட்டரி, 144Hz AMOLED டிஸ்பிளே: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஒப்போ கே14 பிளஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved