- Home
- டெக்னாலஜி
- ரூ.15,800க்கு 6000mAh பேட்டரி.. 120Hz டிஸ்ப்ளே.. 50MP கேமரா.. மாஸ் காட்டும் சாம்சங் 5ஜி போன்
ரூ.15,800க்கு 6000mAh பேட்டரி.. 120Hz டிஸ்ப்ளே.. 50MP கேமரா.. மாஸ் காட்டும் சாம்சங் 5ஜி போன்
தென் கொரிய நிறுவனமான சாம்சங், தனது ஏ-சீரிஸ் வரிசையில் கேலக்சி ஏ07 5ஜி என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. MediaTek Dimensity 6300 சிப்செட், 50MP கேமரா, 6000mAh பேட்டரி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது.

சாம்சங் கேலக்சி ஏ07 5ஜி அம்சங்கள்
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், தனது ஏ-சீரிஸ் வரிசையில் புதிய 5ஜி மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்சி ஏ07 5ஜி. விலை மற்றும் முழு விவரங்கள் சாம்சங்கின் உள்ளூர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்பட்டுள்ளன.
கேலக்சி ஏ07 5ஜி மாடல்
இந்த மாடல் கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்சி ஏ07 5ஜி 4G-க்கு அடுத்ததாக வாரிசாக வருகிறது. மேலும் A07 4G வேரியண்ட், Galaxy F07 4G மற்றும் Galaxy M07 4G மாடல்களுடன் 2025 அக்டோபரில் இந்தியாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தற்போது 5ஜி அப்டேட்டுடன் A07 வரிசை புதிய போட்டியில் களமிறங்கியுள்ளது.
சாம்சங் கேலக்சி ஏ07 விலை
விலை பற்றி பார்க்கையில், கேலக்சி ஏ07 5ஜி 5G தாய்லாந்தில் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் THB 5,499 (சுமார் ரூ.15,800) எனவும், 6GB RAM + 128GB மாடல் THB 5,999 (சுமார் ரூ.17,200) எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் வெளிர் வயலட் நிறங்களில் பல சில்லறை கடைகள் மூலம் வாங்கலாம்.
சாம்சங் கேலக்சி ஏ07 வசதிகள்
இந்த போனில் 6.7 இன்ச் HD+ PLS LCD டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 nits வரை பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. வாட்டர்-டிராப் நாட்ச் வடிவில் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்காக MediaTek Dimensity 6300 (6nm) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6 வருட பாதுகாப்பு அப்டேட்ஸ்
மொத்தமாக 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. Microsoft கார்டு மூலம் 2TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம். மேலும் டூயல் நானோ சிம் ஆதரவுடன், இந்த போன் Android 16 + One UI 8.0-வில் இயங்குகிறது. 6 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 6 வருட பாதுகாப்பு அப்டேட்ஸ் வழங்கப்படும் என சாம்சங் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேமரா
கேமரா பிரிவில் 50MP பிரைமரி + 2MP டெப்த் என டூயல் ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா கிடைக்கிறது. 6000mAh பேட்டரியுடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங், USB Type-C, 5G, Wi-Fi 5, Bluetooth 5.3, GPS ஆகிய அம்சங்களும் உள்ளன. IP54 ரேட்டிங், பக்கவாட்டு கைரேகை சென்சார் போன்ற வசதிகளுடன், இந்த போன் 199 கிராம் எடையில் வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

