MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • செவ்வாயில் அதிகாலை விடியல் எப்படி இருக்கும்? நாசாவின் கியூரியோசிட்டி அனுப்பிய அரிய காட்சி!

செவ்வாயில் அதிகாலை விடியல் எப்படி இருக்கும்? நாசாவின் கியூரியோசிட்டி அனுப்பிய அரிய காட்சி!

நாசாவின் கியூரியோசிட்டி (Curiosity) ரோவர், செவ்வாய் கிரகத்தின் விடியற்காலை இயற்கை அழகைப் பிரதிபலிக்கும் கண்கவர் அகலப்பரப்புப் புகைப்படத்தைப் (Panorama) படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 07 2026, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
செவ்வாய் கிரகத்தில் ஓர் அதிகாலைப் பொழுது!
Image Credit : x

செவ்வாய் கிரகத்தில் ஓர் அதிகாலைப் பொழுது!

பூமியிலிருந்து பல கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தின் விடியற்காலை காட்சி எவ்வாறு இருக்கும் என்ற வியப்பை நாசாவின் ‘கியூரியோசிட்டி’ (Curiosity) ரோவர் தற்போது நிஜமாக்கிக் காட்டியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் பரந்த நிலப்பரப்பில் அதிகாலைச் சூரிய ஒளி பரவிய போது, நீண்ட காலக் காற்றினால் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட பாறை முகடுகளைத் துல்லியமாகப் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இயற்கையான வண்ணத்தில் செவ்வாயின் விடியல்
Image Credit : x

இயற்கையான வண்ணத்தில் செவ்வாயின் விடியல்

நாசா வெளியிட்டுள்ள இந்த அகலப்பரப்புக் காட்சி (Panorama), கடந்த 2026 ஆகஸ்ட் 11 அன்று கியூரியோசிட்டி ரோவரால் பதிவு செய்யப்பட்டது. இதில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வீசிய காற்றினால் உருவான செங்குத்துப் பாறைகள் மற்றும் முகடுகளான 'யார்டாங்ஸ்' (Yardangs) பாறை அமைப்புகள் தெளிவாகக் காட்சிளிக்கின்றன.

ரோவரில் உள்ள பிரதான கேமரா அமைப்பான 'மாஸ்ட்கேம்' (Mastcam) பதிவு செய்த 6 தனித்தனிப் புகைப்படங்களை ஒன்றிணைத்து இந்த அகலப்பரப்புப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாசா இதில் வழக்கமான வண்ண மாற்றங்களை (Color adjustments) செய்யாமல் அப்படியே வெளியிட்டு உள்ளதால், செவ்வாய் கிரகத்தின் விடியற்காலை வெளிச்சம் இயற்கையாக எப்படி இருக்குமோ அதே அசல் தோற்றத்தில் மிளிர்கிறது. இதன் விளைவாக, புகைப்படத்தின் முன்பகுதியில் லேசான நீல நிறச் சாயலும், தொலைவில் உள்ள யார்டாங்ஸ் பாறை முகடுகளின் மீது அதிகாலைச் சூரியக் கதிர்கள் படும் காட்சியும் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

35
1 கி.மீ உயரத்தைக் கடந்து புதிய மைல்கல்!
Image Credit : x

1 கி.மீ உயரத்தைக் கடந்து புதிய மைல்கல்!

கேல் பள்ளத்திற்குள் (Gale Crater) அமைந்துள்ள மவுண்ட் ஷார்ப் (Mount Sharp) மலையானது, சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் உயரமுடையது. இந்த மலையின் வடமேற்குப் பகுதியில் சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த யார்டாங்ஸ் பாறை அமைப்புகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த மவுண்ட் ஷார்ப் மலையில் ஏறித் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் கியூரியோசிட்டி ரோவர், அண்மையில் செவ்வாய் கிரகத்தில் அதிகபட்சமாக 1 கிலோமீட்டர் உயரத்தைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளது.

45
யார்டாங்ஸ் பாறைகள் சொல்லும் செவ்வாயின் ரகசியங்கள்
Image Credit : x

யார்டாங்ஸ் பாறைகள் சொல்லும் செவ்வாயின் ரகசியங்கள்

இந்த யார்டாங்ஸ் பாறைகள் பார்வைக்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, விஞ்ஞானிகளுக்குச் செவ்வாய் கிரகத்தின் பழங்கால வரலாற்றை உணர்த்தும் திறவுகோலாகவும் விளங்குகின்றன. மவுண்ட் ஷார்ப் மலை பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் உருவான பாறைகள் மற்றும் வண்டல் மண் அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டதாகும்.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் இந்தப் பகுதியில் ஏரிகளும் சிற்றாறுகளும் ஓடியதை கியூரியோசிட்டியின் முந்தைய ஆய்வுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன. காலப்போக்கில் அந்த ஈரப்பதம் மறைந்து, நீர் முற்றிலும் வறண்டபோது பல்வேறு கனிமங்கள் அங்கு படிந்தன. அதன்பின் பல நூற்றாண்டுகளாக வீசிய பலத்த காற்று சில படிமங்களை அரித்துச் சென்றதன் மூலமாகவே, இன்று நாம் காணும் இந்த யார்டாங்ஸ் பாறைகள் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த யார்டாங்ஸ் அடுக்குகள் உருவான விதம் குறித்து விஞ்ஞானிகள் இன்னும் ஒருமித்த உறுதியான முடிவுக்கு வரவில்லை; பண்டைய காலத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்புகளால் வெளிவந்த சாம்பல் இதில் கலந்திருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் முக்கியக் கணிப்பாக உள்ளது.

55
அடுத்த இலக்கு: 2027-ல் பாறைகளின் அடிவாரம்!
Image Credit : x

அடுத்த இலக்கு: 2027-ல் பாறைகளின் அடிவாரம்!

கியூரியோசிட்டி ரோவர் அடுத்த ஆண்டின் பெரும்பகுதியை, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு வறண்ட நிலமாக மாறிய காலகட்டத்தைப் பற்றிய மர்மங்களை வெளிக்கொணரக்கூடிய சல்பேட் (Sulphates) மற்றும் கார்பனேட் (Carbonates) நிறைந்த பாறை அடுக்குகளை நோக்கிப் பயணித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.

நாசா விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, வரும் 2027-ம் ஆண்டிற்குள் கியூரியோசிட்டி ரோவர் இந்த யார்டாங்ஸ் பாறைகளின் அடிவாரத்தை முழுமையாகச் சென்றடையும். அங்கு சென்றதும், ரோவரில் உள்ள ரோபோடிக் கரத்தின் உதவியுடன் இந்தப் பாறைகளை மிக அருகில் வைத்து ஆராய்ந்து, அவை உருவான விதம் மற்றும் செவ்வாயின் மறைந்திருக்கும் பழங்கால உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அறிவியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
9,000mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம், 1TB மெமரி: ஒன்பிளஸின் புத்தம் புதிய பிளாக்‌ஷிப் கில்லர் போன்கள்!
Recommended image2
தினமும் 42 நிமிடங்களுக்கு குறைவான சூரிய வெளிச்சம்: ஞாபக மறதியை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தகவல்!
Recommended image3
30 நிமிஷத்துல 73% சார்ஜ்: 66W ஃபாஸ்ட் சார்ஜிங்; ஐக்யூ-வின் 20,000mAh பவர் பேங்க்!
Related Stories
Recommended image1
சல்லடையால் சலித்து எடுக்கப்பட்ட 45 லட்சம் ஆண்டு பொக்கிஷம்: இமயமலை ஆய்வின் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!
Recommended image2
boAt Sailor Nav Kids Smartwatch: SOS அலர்ட் முதல் வீடியோ கால் வரை.. குழந்தைகளை பாதுகாக்கும் ஸ்மார்ட்வாட்ச்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved