MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • boAt Sailor Nav Kids Smartwatch: SOS அலர்ட் முதல் வீடியோ கால் வரை.. குழந்தைகளை பாதுகாக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

boAt Sailor Nav Kids Smartwatch: SOS அலர்ட் முதல் வீடியோ கால் வரை.. குழந்தைகளை பாதுகாக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

boAt Sailor Nav Kids Smartwatch: குழந்தைகளை எப்போதும் நமது கண்காணிப்பிலேயே வைத்திருக்க ஒரு ஸ்மார்ட்வாட்ச் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு சூப்பரான ஸ்மார்ட்வாட்ச் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 05 2026, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
'போட் செயிலர் நாவ் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்'
Image Credit : Amazon.in

'போட் செயிலர் நாவ் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்'

குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் அவர்கள் பத்திரமாக திரும்பி வரும் வரை நமக்கு ஒரே டென்ஷனாக இருக்கும். ஆனால், அவர்களை எப்போதும் நமது கண்காணிப்பிலேயே வைத்திருக்க ஒரு ஸ்மார்ட்வாட்ச் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு சூப்பரான ஸ்மார்ட்வாட்ச் தான் 'போட் செயிலர் நாவ் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்' (boAt Sailor Nav Kids Smartwatch)

அமேசானில் 'போட் செயிலர் நாவ் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்' இப்போது 25% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ.7,999 ஆகும், ஆனால் இப்போது ரூ.5,999-க்கு வாங்கலாம். இந்த வாட்ச்சில் 5 விதமான ஜிபிஎஸ் டிராக்கிங் வசதிகள் உள்ளன. 'boAt Sailor' செயலி மூலமாக குழந்தைகள் இப்போது எங்கு இருக்கிறார்கள், கடைசியாக எங்கு இருந்தார்கள், வாட்ச் பேட்டரி எவ்வளவு இருக்கிறது என்பதைப் பெற்றோர் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குழந்தைகளை கண்காணிக்கும் ஸ்மார்ட்வாட்ச்
Image Credit : Amazon.in

குழந்தைகளை கண்காணிக்கும் ஸ்மார்ட்வாட்ச்

கூகுள் மேப்ஸ் மூலமாகவும் இருப்பிடத்தை (Location) கண்காணிக்கலாம். பள்ளி, டியூஷன் போன்ற இடங்களை 'சேஃப் ஜோன்' ஆக அமைத்துவிட்டால், குழந்தைகள் அங்கு செல்லும்போதும் திரும்பும்போதும் பெற்றோருக்கு அலர்ட் வந்துவிடும். இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 4ஜி சிம் கார்டு போட்டுக்கொள்ளலாம். அதனால் குழந்தைகளுடன் நேரடியாக வாய்ஸ், வீடியோ கால்களில் பேச முடியும்.

பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த எண்களை மட்டும் செயலியில் அமைத்து வைத்துக்கொள்ளலாம். அந்த எண்களிடம் மட்டும்தான் குழந்தைகள் பேச முடியும். ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், வாட்ச்சில் இருக்கும் பவர் பட்டனை 3 விநாடிகள் அழுத்திப் பிடித்தால் போதும், உடனே எமர்ஜென்சி எண்களுக்கு அழைப்பு சென்றுவிடும்.

34
லோக்கேஷன் ஹிஸ்டரி
Image Credit : Amazon.in

லோக்கேஷன் ஹிஸ்டரி

இந்த வாட்ச்சில் 2MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு குழந்தைகள் படங்கள் எடுக்கலாம். அதுமட்டுமின்றி, பெற்றோர் தங்களுடைய 'Sailor' செயலி மூலமாகத் தொலைதூரக் கட்டுப்பாட்டில் கேமராவை இயக்கிப் படமெடுத்துப் பார்க்க முடியும். பள்ளி நேரத்தில் தொந்தரவு ஏற்படாமல் இருக்க 'கிளாஸ் மோட்' ஆன் செய்துகொள்ளலாம். முன்பின் தெரியாதவர்கள் அழைப்பதைத் தவிர்க்கவும், வாட்ச்சை அணைக்காமல் பாதுகாக்கவும் இதில் ஏராளமான பெற்றோர் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. குழந்தைகள் எங்கு சென்றார்கள் என்பதற்கான லோக்கேஷன் ஹிஸ்டரி பார்த்துக்கொள்ளலாம்.

44
வெளியே செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
Image Credit : Amazon.in

வெளியே செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு

இந்த வாட்ச்சில் 1.44 இன்ச் ஹெச்.டி டஸ் ஸ்கீரின் உள்ளது. குழந்தைகள் எளிதாகத் தொட்டுப் பேசலாம். அவர்கள் ஒருநாளில் எவ்வளவு தூரம் நடந்துள்ளனர் என்பதை அறிய 'ஸ்டெப் கவுண்டர்' வசதியும் உள்ளது. காலையில் எழுந்துகொள்ளவும், படிக்கவும் அலாரம் அமைத்துக்கொள்ளலாம். கால்குலேட்டர் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகள் என்று குழந்தைகளுக்குப் பிடித்த பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

மொத்தத்தில், இந்த 'போட் செயிலர் நாவ் கிட்ஸ் ஸ்மார்ட்வாட்ச்' வெறும் நேரம் பார்க்க மட்டும் அல்லாமல், இருப்பிடக் கண்காணிப்பு, வீடியோ கால், அவசர உதவி (SOS), சேஃப் ஜோன் அலர்ட் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. தனியாகப் பள்ளி மற்றும் டியூஷன் செல்லும் குழந்தைகளை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், கிளாஸ் மோட் மூலமாக அவர்களின் படிப்பும் கெடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL Free Insurance: பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சூப்பர் சலுகை! இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.1 லட்சம் இலவச காப்பீடு
Recommended image2
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image3
Recharge Packs: இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்! வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Smartwatch Tech: ஸ்மார்ட்வாட்ச் பின்னாடி பச்சை லைட் ஏன் எரியுது? ஸ்டைல்னு நினைச்சீங்களா? இதுதான் காரணம்!
Recommended image2
health : ஸ்மார்ட்வாட்ச் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அறிய முடியுமா? மருத்துவர்கள் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved