- Home
- டெக்னாலஜி
- 13MP ஏ.ஐ கேமரா, 6000mAh பேட்டரி பவர்: பிளிப்கார்ட் சேலில் அள்ளும் ஆஃபரில் லாவா 5ஜி போன்!
13MP ஏ.ஐ கேமரா, 6000mAh பேட்டரி பவர்: பிளிப்கார்ட் சேலில் அள்ளும் ஆஃபரில் லாவா 5ஜி போன்!
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 சிறப்பு விற்பனையில், லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் 25% தள்ளுபடியுடன் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6000mAh பேட்டரியுடன் லாவா ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் 'பிக் பில்லியன் டேஸ் சேல் 2026' (Flipkart's Big Billion Days Sale 2026) சிறப்பு விற்பனையில், முன்னணி உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்டான லாவாவின் சக்திவாய்ந்த 5ஜி போன் ஒன்று அதிரடித் தள்ளுபடியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த போன் குறித்த முழுமையான விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள்
தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் விலை ரூ.11,999 ஆகக் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுமின்றி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இப்போனை வாங்கும் பட்சத்தில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை வாடிக்கையாளர்கள் எளிதில் பெற முடியும்.
லாவா விராட் வி1 5ஜி - சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே - இச்சாதனம் 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்திறன் (Processor) - இந்த போன் யுனிசோக் டி8200 ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மேம்பட்ட செயலி மூலம் அனைத்து ஆப்களையும் எந்தவிதத் தடையுமின்றி மிகவும் ஸ்மூத்தாகப் பயன்படுத்த முடியும்.
மென்பொருள் - அதிநவீன ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இயங்குதளத்தில் இயங்கும் இப்போனுக்குத் தேவையான ஆண்ட்ராய்டு மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும். மேலும், இது ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்டேரேஜ் & பாதுகாப்பு - 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ள இப்போனில், கூடுதல் நினைவிடத் தேவைக்காக மைக்ரோ எஸ்டி கார்டு (MicroSD Card) ஸ்லாட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது IP64 தர டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது.
கேமரா & பேட்டரி திறன்
கேமரா - லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ஏஐ டூயல் ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது. இதன் மூலம் மிகச் சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோ கால்களுக்கும் என்றே 5எம்பி முன்கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி பிளாஸ் மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion), போர்ட்ராய்டு (Portrait), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus), ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற பல்வேறு கேமரா மோட்களும் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி மற்றும் சார்ஜிங் - இப்போனின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் பிரமாண்டமான 6000mAh பேட்டரி தான். இப்போனை வாங்குபவர்கள் அடிக்கடி சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையின்றி நாள் முழுவதும் தடையின்றிப் பயன்படுத்தலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

