MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Jio AI Glasses: போன் எடுக்காமலேயே கண்களால் பணம் செலுத்தலாம்... கலக்கும் 'ஜியோ ஏ.ஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்'

Jio AI Glasses: போன் எடுக்காமலேயே கண்களால் பணம் செலுத்தலாம்... கலக்கும் 'ஜியோ ஏ.ஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்'

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026-ல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்' (Jio AI Glasses) உள்ளிட்ட புதிய ஏஐ அணியக்கூடிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 10 2026, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியாவில் 'ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்'
Image Credit : x

இந்தியாவில் 'ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள்'

கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இனி பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனை வெளியே எடுக்காமலேயே, க்யூ.ஆர் கோடைப் பார்த்து குரல் வழியாகக் கட்டளையிட்டு நேரடியாகப் பணம் செலுத்தும் புதிய தலைமுறை 'ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகளை' (Jio AI Glasses) ரிலையன்ஸ் ஜியோ காட்சிப்படுத்தியுள்ளது.

தலைநகர் புதுடெல்லியில் நடந்து வரும் 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026' (India Mobile Congress 2026) நிகழ்வில், கேமரா கண்ணாடிகள், ஆடியோ கண்ணாடிகள், இயர்போன்கள் உள்ளிட்ட தனிநபர் ஏஐ அணியக்கூடிய சாதனங்களின் (Personal AI Wearables) வரிசையை ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யுபிஐ சர்க்கிள் மூலம் ரூ.5,000 வரம்பு!
Image Credit : x

யுபிஐ சர்க்கிள் மூலம் ரூ.5,000 வரம்பு!

ஸ்கேன் & பே (Scan & Pay): க்யூஆர் கோடைப் பார்த்து ஒரு வாய்மொழி கட்டளை கொடுத்தாலே போதும்; நொடியில் யுபிஐ (UPI) வழியாகப் பணம் செலுத்தப்பட்டுவிடும்.

பரிவர்த்தனை வரம்பு: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) விதிகளின்படி, ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலும், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வரையிலும் பணம் செலுத்த முடியும்.

நேரலை மொழிபெயர்ப்பு (Live Translation): வெவ்வேறு இந்திய மொழிகளைப் பேசும் இருவர் எதிரெதிரே நின்று உரையாடும்போது, அவர்களுடைய தாய்மொழியிலேயே நிகழ்நேரத்தில் மொழிபெயர்த்துப் புரிய வைக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

34
கண்களுக்கு முன்னால் UPI பேமெண்ட் & லைவ் கிரிக்கெட்!
Image Credit : x

கண்களுக்கு முன்னால் UPI பேமெண்ட் & லைவ் கிரிக்கெட்!

நேரலை கிரிக்கெட் வர்ணனை: வெளியில் பயணிக்கும்போதும், வேலைகளில் இருக்கும்போதும் கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஆடியோ வர்ணனையை இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலமாகவே கேட்க முடியும்.

ஏஐ நோட் டேக்கிங்(AI Note-taking): அலுவலகக் கூட்டங்களின் போது முக்கியமான தகவல்களையும் குறிப்புகளையும் இந்த சாதனம் தானாகவே பதிவு செய்து குறித்து வைத்துக்கொள்ளும்.

இந்திய மொழிகளுக்கு முன்னுரிமை: பலதரப்பட்ட இந்திய மொழிகளைப் புரிந்து கொண்டு பதிலளிக்கும் பிரத்யேக ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

44
ஜியோ களமிறக்கிய பியூச்சரிஸ்டிக் ஏஐ கண்ணாடிகள்!
Image Credit : x

ஜியோ களமிறக்கிய பியூச்சரிஸ்டிக் ஏஐ கண்ணாடிகள்!

பொதுவாக ஒரு கடையில் பணம் செலுத்தும்போது போனை பாக்கெட்டில் இருந்து எடுத்து, அன்லாக் செய்து, பேமெண்ட் செயலியைத் திறந்து, க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டிய நடைமுறைகள் உள்ளன. ஆனால் இந்த ஏஐ கண்ணாடிகள் மூலம் க்யூஆர் கோடை நேரடியாகப் பார்த்து குரல் வழி உத்தரவு பிறப்பித்தாலே பணம் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும்.

வெறும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மென்பொருளாக மட்டுமல்லாமல், அன்றாடப் பணிகளை செய்து முடிக்கும் நவீன கருவியாக ஏஐயை ஜியோ மாற்றியுள்ளது. ஸ்மார்ட்போன் திரைகளையும் கீபோர்டுகளையும் அடிக்கடி பார்ப்பதைத் தவிர்த்து, குரல் வழித் தொடர்புகள் மூலமாகப் பயனர்களின் பணித்திறனை அதிகரிக்கவும் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த அணியக்கூடிய சாதனங்கள் பயன்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்தியப் பயனர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளையும் மொழிப் பயன்பாட்டையும் மையமாகக் கொண்டு இச்சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இது தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெறும் 12 கிராம் எடை, 7 நாட்கள் பேட்டரி லைஃப்: கூகுள் ஃபிட்பிட் ஏர் சாதனத்தின் மாஸ் என்ட்ரி!
Recommended image2
பூமியைத் தாக்கத் தயாராகும் சோலார் சுனாமி: சூரியனின் மெகா புயல் வெடிப்பு குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Recommended image3
பூமியைப் போன்றே மேகங்கள், மழை? சூரியக் குடும்பத்திற்கு அப்பால் ஜேம்ஸ் வெப் கண்ட புதிய உலகம்!
Related Stories
Recommended image1
பூமியைத் தாக்கத் தயாராகும் சோலார் சுனாமி: சூரியனின் மெகா புயல் வெடிப்பு குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Recommended image2
Jio 6G : 5ஜி மொபைலை மாத்த வேண்டியிருக்குமா? ஜியோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved