- Home
- டெக்னாலஜி
- வெறும் 12 கிராம் எடை, 7 நாட்கள் பேட்டரி லைஃப்: கூகுள் ஃபிட்பிட் ஏர் சாதனத்தின் மாஸ் என்ட்ரி!
வெறும் 12 கிராம் எடை, 7 நாட்கள் பேட்டரி லைஃப்: கூகுள் ஃபிட்பிட் ஏர் சாதனத்தின் மாஸ் என்ட்ரி!
கூகுள் நிறுவனம் திரை எதுவும் இல்லாத புதிய 'ஃபிட்பிட் ஏர்' பிட்னஸ் ட்ராக்கரை இந்தியாவில் ரூ. 13,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

திரையற்ற புதிய 'ஃபிட்பிட் ஏர்' பிட்னஸ் ட்ராக்கர்
கூகுள் நிறுவனம் தனது புதிய திரையற்ற (Screenless) பிட்னஸ் ட்ராக்கரான 'ஃபிட்பிட் ஏர்' (Fitbit Air) சாதனத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக மே 2026-இல் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம், ஸ்மார்ட்வாட்ச்களில் இருக்கும் திரை, நோட்டிபிகேஷன்கள் மற்றும் கவனச்சிதறல்கள் எதுவுமின்றி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மட்டுமே கண்காணிக்கும் வகையில் மிகவும் லேசான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுளின் மேம்படுத்தப்பட்ட சுகாதார அமைப்போடு (Health Ecosystem) இணையும் இந்தச் சாதனம், கூகுள் ஹெல்த் செயலி மற்றும் ஜெமினி ஏ.ஐ மூலம் இயங்கும் 'கூகுள் ஹெல்த் கோச்' வசதியையும் ஆதரிக்கிறது.
விலை & விற்பனை தகவல்கள்
விலை - ரூ. 13,999. வண்ணங்கள் - அப்சிடியன் (Obsidian), பெர்ரி (Berry), லாவெண்டர் (Lavender) மற்றும் ஃபாக் (Fog). ஃபிட்பிட் ஏர் சாதனம் கூகுள் ஸ்டோர் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைப் பங்காளிகள் மூலம் தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. இச்சாதனத்தை வாங்குபவர்களுக்கு கூகுள் ஹெல்த் கோச் வசதியை முழுமையாகப் பயன்படுத்த 3 மாத கால இலவச 'கூகுள் ஹெல்த் பிரீமியம்' சந்தா வழங்கப்படுவதாகக் கூகுள் அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள் & சிறப்பம்சங்கள்
வழக்கமான ஸ்மார்ட்வாட்ச்கள் கனமாகவோ, அதிக விலையுடையதாகவோ அல்லது கவனச்சிதறலை ஏற்படுத்துவதாகவோ கருதும் பயனர்களை இலக்காகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திரை இல்லாததால், ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள 'கூகுள் ஹெல்த்' செயலி மூலம் கண்டறியலாம்.
24/7 இதயத் துடிப்பு கண்காணிப்பு - முழு நேர இதயத் துடிப்பு, இதயத் துடிப்பு மாறுபாடு (HRV) மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் கண்டறியும் AFib (Atrial Fibrillation) எச்சரிக்கைகள்.
ஆரோக்கியக் கண்காணிப்பு - ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு (SpO2), உடலின் வெப்பநிலை மற்றும் விரிவான தூக்கக் கண்காணிப்பு (Sleep Tracking).
தானியங்கி உடற்பயிற்சி கண்டறிதல் - நாம் செய்யும் வழக்கமான உடற்பயிற்சிகளைத் தானாகவே கண்டறிந்து கூகுள் ஹெல்த் செயலியில் அதன் அறிக்கையை உருவாக்கும்.
ஏ.ஐ (AI) வசதி - பயனர்கள் உடற்பயிற்சிக்கூட உபகரணங்கள் அல்லது வொர்க்அவுட் போர்டுகளைப் புகைப்படம் எடுப்பதன் மூலம் ஏ.ஐ உதவியுடன் உடற்பயிற்சிகளைப் பதிவு செய்யலாம்.
பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்
பேட்டரி லைஃப் - ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி உழைக்கும்.
வேகமான சார்ஜிங் - 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுமைக்குமான பேட்டரி லைஃப் கிடைக்கும். சாதனத்தை முழுமையாகச் சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் ஆகும்.
ஸ்ட்ராப் / பேண்ட் வகைகள்
பெர்ஃபார்மன்ஸ் லூப் பேண்ட் (Performance Loop Band) - மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன லேசான ஸ்ட்ராப். இது சாதனத்துடன் இலவசமாக வரும்.
ஆஃப்டிவ் பேண்ட் (Active Band) - உடற்பயிற்சி செய்வோருக்காக வடிவமைக்கப்பட்ட வேர்வை மற்றும் நீர்ப்புகா சிகிகான் ஸ்ட்ராப்.
எலிவேட்டட் மாடர்ன் பேண்ட் (Elevated Modern Band) - நகைகளைப் போன்ற அழகான தோற்றத்தைத் தரும் நவீன வடிவிலான ஸ்ட்ராப்.
வடிவமைப்பு - திரையற்ற பிட்னஸ் ட்ராக்கர்
எடை - ஸ்ட்ராப்புடன் சேர்த்து வெறும் 12 கிராம்
தடிமன் - 8.3 மி.மீ
திரை - திரை கிடையாது (No Display)
பேட்டரி - 7 நாட்கள் வரை
நீர் எதிர்ப்புத் திறன் - 5ATM / 50 மீட்டர் ஆழம் வரை நீர்ப்புகா திறன் கொண்டது
இணைப்புத் திறன் - புளூடூத் (Bluetooth)
மென்பொருள் - கூகுள் ஹெல்த் ஆப், கூகுள் ஹெல்த் கோச்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

