ரூ.10,000க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்; முழு விவரம்!
Under Rs.10,000 smartphones: ரூ.10,000க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம். டெக்னோ ஸ்பார்க் கோ போனும் இந்த பட்டியலில் உள்ளது.
Lowest price smartphones
ரூ.10,000க்குள் கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்; முழு விவரம்!
2024ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டோம். 2025ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த புதிய ஆண்டில் புதிய செல்பொன்களை வாங்கவும், தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு புது செல்போன்களை பரிசளிக்கவும் சிலர் ஆர்வமாய் இருப்பார்கள். அந்த வகையில் ரூ.10,000க்குள் பட்ஜெட் விலையிலும், பல்வேறு சிறப்பம்சங்களும் கொண்ட ஸ்மார்ட்போன்களை பற்றி பார்க்கலாம்.
ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G)
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,498 ஆகும். இந்த போனில் 6.85 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமராவும், 5 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜெனரல் 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளதால் போனை இயக்குவதற்கு எளிதாக இருக்கும்.64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.
Budget smartphone list
போகோ எம்4 ப்ரோ (Poco M4 Pro)
போகோ நிறுவனத்தின் போகோ எம்4 ப்ரோ போனில் 6.43 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பி கேமராவை பெற்றுள்ளது. மேலும் ரியர் கேமரா 64எம்பி+8எம்பி+2எம்பி என்ற வகையில் அமைந்துள்ளன. 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என 3 வேரியன்ட்க்ளில் இந்த போன் கிடைக்கும். இதன் விலை ரூ.8,999 ஆகும்.
மெகா டேட்டா சென்டருக்காக ரூ.450 கோடி நிலத்தை வளைத்துப் போட்ட அமேசான்!
Under rs.10,000 smartphones list
ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G)
ரெட்மி 13சி 5ஜி போனில் அழகான 6.74 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 5எம்பி செல்பி கேமராவும், 50எம்பி மெயின் கேமராவும் உள்ளன. 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும். 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த போனில் 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ரேம்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.9,099 ஆகும்.
Best price smartphones
போகோ சி 61 (Poco C61)
போகோ சி 61 போனில் 6.71 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 8எம்பி மெயின் கேமரா, 5எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்கள் உள்ளன. 64ஜிபி மற்ரும் 128ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியன்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.5,4999 மட்டுமே.
டெக்னோ ஸ்பார்க் கோ (Tecn!o Spark Go)
இந்த போனில் 5எம்பி செல்பி கேமராவும், 13எம்பி மெயின் கேமராவும் வழங்கப்பட்டுள்ளன. 6.56 இன்ச் ஹெச் டி பிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம், 32ஜிபி மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. இந்த போனின் விலை ரூ.6,759 ஆகும்.
ஒரே ஒரு ரீசார்ஜ்.. ஒரு வருஷத்துக்கு கவலையில்லை.. பிஎஸ்என்எல்லின் செம பிளான்